Friday, 27 December 2013

ஏனிந்த ஓர வஞ்சனை?

ஏனிந்த ஓரவஞ்சனை???

இந்தியத் திருநாடே
ஏனிந்த ஓரவஞ்சனை?
எதற்காக இந்தப்பிடிவாதம்?
உனக்குள் .....................
எத்தனை  இனங்கள்?
த்தனை மொழிகள்?
எத்தனை மதங்கள்?
எத்தனை கலாச்சாரங்கள்?

இத்தனையும்  இந்த
இந்தியாவில் மட்டும்.
வேற்றுமையில் ஒற்றுமையோ!
இலங்கையில் தமிழினம்
அழிக்கப்படுவதில்தான்
அவனும் நீயும்  ஒற்றுமையோ!
இங்கே  இனிக்கிறது..
அங்கே மட்டும் கசக்கிறதோ!

எந்த ஊர் பஞ்சாயத்தப்பா?
சொந்தக்காரனை விட்டு நீ
எந்தப்பயலுக்கு  உதவத்
துடிக்கிறாய்........................?
சொந்த  இரத்தம் அங்கே
துடிக்கிறது.............................
இந்த  நாட்டு  வம்சாவழிதானே
ஈஈழத்தமிழனும்.....................!

எவனோ பாவி சிங்களவன்...அவனுக்கு
இந்தியாவோடு என்னப்பா  உறவு?
பாகிச்தானோடும் சீனாவோடும்
பாசங் கொண்டாடுகிறான்...........
சொந்தத் தமிழ்னைக் காப்பாற்று.
எந்தச் சதிகாரனையும் விரட்டுவான்.
விழலுக்கு நீரிரைக்காதே............
வீணாகிக் கெட்டுப் போகாதே.

கொ.பெ.பி.அய்யா.





No comments:

Post a Comment