Thursday, 26 December 2013

காமம் தெய்வீகம்.

காமம் புனிதமானது!

நாய்களும் பேய்களும் நஞ்செனப் பூமியில்
நாக்கதும் தொங்கவும் நக்கவும் காமத்தில்.
தாயென்ன சேயென்ன தணிப்பதும் தானென்ன
பாய்வதும் பொறுப்பதோ பட்டொழியத் துணியுவோம்.

காட்டில் அலையும் கொடுவிலங்கும் போலவும்
நாட்டில் வெறிகொண்ட நாசகார நாய்களும்
தொட்டில் பழகிடும் தாயினம்
கட்டில் பழகிடும் காமத்தின் பேய்களோ!

நாய்களும் கூடவும் நாட்டமும் கண்டறியும்.
நாளும் பருவமும் நாடியே கொண்டிணையும்.
பேயே உனக்கேனடா பெண்ணென்றால் தாகம்!
பிஞ்சானாலும் வெறிகொண்டு பித்திட மோகம்.

சுவரி லேதும் கீறல் தெரிந்தாலும் 
சுண்ணத்தைப்  பூசி சுருக்கி  மறையுங்கள்!
பூமியி லெங்கணும் பொந்தும் வெடிப்பும்
புழுதியால் நிறப்பி பொத்தி  ஒளியுங்கள்!

பாறை இடுக்கிலும் போகம் துணிவான்
பாம்பு  கடித்துமே பட்டும்  துடிப்பான்.
சேலையும் கட்டினால் சேருவான் கல்லையும்
கீழினம் காமுகன் கேடென்ன ஆய்வான்!

புணர்ச்சி உணர்ச்சி வெறி கொண்டலையும்
உணர்வுகள் இல்லா உயிரினம் ஒன்று
உறவுகள் தாண்டியும் புணர்ந்திட துடிக்கும்
பிறவி,பெற்றது  எல்லாம் மறக்கும்!

காமம்! அது புனிதமானது !கடவுளின் வரமது!
காதலுக்குத் தூண்டலது!கற்பின் சிரமது!
உலகம் நிலைத்திட இயற்கையின் நியதியது!
உறவுகள் தழைத்திட உதிரத்தின் பந்தமது!

வேசிகளும் தாசிகளும் காசுக்கு காமம் பழக
வீதியில் நின்று விலைபேசும் அழைப்பிருக்க!
கூசாமல் தவறியே இரத்த சொந்தம் இழுப்பதும்
பேச்சறியா சிசுக்களையும் சிதைப்பதும் ஏனடா!

காமத்திருடர்களே கட்டமிதில் திருந்துங்கள்!
காலம் விழித்துக் கொண்டது வருந்துங்கள்!
பாவந்துணிவோர்க்கு மன்னிப்பே இல்லையடா!
சாபம் இதுதாண்டா சண்டாளர்க்கு சாவுதாண்டா!

வயிறு பசித்தால் உணவையே தேடிக்கொள்
வாலிபம் பசித்தால் ஒருத்தியே சொந்தம் கொள்!
கண்டதைத்திண்ணு உண்டதைக் கக்காதே!
கொண்டதை மறந்து கண்டதில் மயங்காதே!

நீலப்படம் பார்க்காதே!நெறி தவறி அலையாதே!
வாழ்வே காமமென வெறிகொண்டு திரியாதே!
பெற்றவளும் பெண்ணென மாற்றாளை மதித்திடு!
உற்றதொழிலதனிலே உடல் வலிமை செலுத்திடு


கொ.பெ.பி.அய்யா






















No comments:

Post a Comment