Monday, 23 December 2013

உணர்வுகள்

உணர்வுகள்!

மொழியேதும் அறியாது!
மொழிவதற்கும் தெரியாது!
ஒளிந்திருந்தே உதிரத்திலே
விழித்திருக்கும் உணர்வுகளே!

இனம்,மொழி,மதம்,குலம்,
பாசம்,நேசம்,,காதல்,ஆட்டம்
பாட்டம்,கொண்டாட்டமென
இப்படி எத்தனையோ உணர்வுகள்!

காலத்தின் சுவடுகளால் ஊறிக்
கலந்துவிட்ட  உணர்வுகளை
கோலமெனக் கருதியதனில்
யாரும் விளையாடவேண்டாம்.

கொள்கையென மயக்கவும்
கூட்டம் சேர்த்து வாழவும்
உணர்வுகளைச் சீண்டிவிட்டு
உதிரத்தின் வழியென்பார்!

கல்லையுந் துடிக்கச் செய்வார்
சொல்லழகு வித்தையாலே!
வெல்லலுவோம் எவரஸ்டென
வீர்மேற்றித் தூண்டிடுவார்!

உயிருணரும் உணர்வுகளை
உரசவிட்டு பசியாறுவார்!
பயிர்வாடும் சோகங்களை
பார்ப்பதில் ஆசை கொள்வார்!

உணர்வுகளைக் கிள்ளிடுவார்
உணர்வறியாப் பாவியர்!
மனசழுக இரசித்திடுவார்
மனஞ்செத்த சண்டாளர்.

சொன்னதையே சொல்லுவார்.
என்னதென விளங்காதார்.
பின்னதை அறியாதார்
பேதமை பிதற்றுவார்.

வேகாததும் வேகுமென்றும்
விளம்பரம் தேடுவார்.
ஆகாததும் ஆகுமென்றும்
அடங்கொண்டும் சாடுவார்..

மேதாவித்தனம் காட்ட
பாதாளம் பாயுவார்!
போதாத நேரமென்றும்
புரியாமல் மாளுவார்!

சுயநலம் பேணாத
சுத்த சிந்தை ஞானங்களை
பயமின்றி பழித்திடுவார்!
கற்றோமென்ற திமிரிலே!.

உணர்வுகளை மதியாதார்
உளமுடவர் ஆவாரே!
பிணமான அறிவிலிக்கு
பெரிய தனப் பேரெதற்கு?

ஒருவருக்கு உகந்ததுதான்
உலகுக்கே பொதுவென்றால்
கருவறுத்த யூதன்தானே
கடவுளாய் நின்றிருப்பான்!

உணர்வுகளை சீவி விட்டு
உதிரங்களை சிந்த ஏற்றும்
மனிதர்போன்ற மனிதரை
மனதைவிட்டு அகற்றுவீர்!

அவரவர் உணர்வுகளே
அவர்வர் விளக்கங்கள்
எவரெவர்க்கு ஏற்றதெதோ
அவரவர் அதில் வாழ்க!


கொ.பொ,பி.அய்யா.









No comments:

Post a Comment