Friday, 27 December 2013

எதுக்கய்யா தீபாவளி?

என்னத்தக் கொண்டாடி......................!

எதுக்கய்யா தீபாவளி
அது ஒரு செலவாளி.
குடிக்கவும் வெடிக்கவுமா
கொண்டாட்டம் தீபாவளி.

என்னத்தக் கொண்டாடி
என்னத்தக் கிழிச்சீங்க?
சொன்னதக் கொண்டு ஆடி
என்ன அத்து ஒழிச்சீங்க?

பாவமும் தொலஞ்சுதுணு
தீபமும் கொளுத்துணு
சேமமாச் சேத்ததணு
நாமமும் போடுங்கண்ணு.

ஆண்டுக்காண்டு தீபாவளி.
மீண்டுமீண்டுங் கடனாளி.
கொண்ட துணி புதுசாச்சு
செஞ்ச சனி என்னாச்சு?

ஒரு பாவி செத்தான்னு
ஊரெல்லாம் கொண்டாட்டம்.
மறுபாவி மறு கரைணு
மனிதரோட ஆண்டாட்டம்.

நல்லதச் சொல்லத் தான
நட்டி வச்சாங் கொண்டாட்டம்.
உள்ளத உணந்தீங்கன்னா
உண்மையது கொண்ட ஆட்டம்.

ஆடவும் பாடவும்
அதற்குத்தான் கொண்டாட்டம்.
குடிக்கவும் கும்மாளமும்
கொண்டாட்டம் கொண்டாட்டம்.

அடப் போங்கடாப் புளிச்சதடா.
அர்த்தம் எல்லாம் ஒளிச்சதடா.
பொய்யான ஆட்டமடா.
புறட்டிப்போட்டு அழிச்சதடா..


கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment