Tuesday, 24 December 2013

கோடை வந்தது.

கோடை வந்தது

கோடைக் காலம் வந்தது.
வாடைக் காற்றும் ஓய்ந்தது,
குளிர் மறைந்து வெந்தது,
குளம் வற்றிக் காய்ந்தது.

நெருங்கி வரும் சூரியன்,
நெருப்பை வீசிக் கொட்டுது,
உருகிக் கரையும் பனிமலையோ
உலகைப் பயங் காட்டுது.

மரங்கள் இலை நீக்குது,
மண்ணின் ஈரம் காக்குது
மாசடைந்த வானமோ-
மோச மாகிக் கிழியுது,

பருவ நிலை தப்புது,
பாச னங்கள் குறையுது,
பொய்த் தாலும் பொய்ககுது,
பெய்தால் வெள்ளம் அழிக்குது

பறவை யெல்லாம் பறக்குது,
பசுமை தேடி அலையுது,
வறுமைப் பட்ட பூமியோ--
வறண்டு சுருண்டு வாடுது..

மனிதரே உணருங்கள்,
மாசு போக்க உதவுங்கள்,
வெப்பந்  தாங்க முடியல,
வேகுதிந்த உலகமே!

கொ.பெ.பி.அய்யா.






No comments:

Post a Comment