கனாக்
கண்டேன்!
கனாக்
கண்டேன் கண்ணே!
கனாக்
கண்டேன்-நம்
காதல்
கனிந்துவரக் கண்ணே!
கனாக்
கண்டேன்.
அலுத்துத்
திண்ணையிலே கண்ணே!
அயர்ந்து
தூங்கையிலே-காதல்
விழித்து உயிரிற் கண்ணே!
விடியல் காட்டியதே!
கொழுத்தச்
சோலையிற் கண்ணே!
துளுத்துக் கனவிலே-நிசம்
பழுத்து மணந்து கண்ணே!
பரவிய காதலே!.
நீயும்
நானுந்தான் கண்ணே!
நீரில்
ஆடிவிட்டு-ஆடை
ஈரம்
காயம்விடக் கண்ணே!
இறுக்கி
உணத்துகிறோம்.
சேலை சுருளில் கண்ணே!
ஒளித்து ஓரமுன்னை-என்னை!
தூணாக்கி மாட்டிக் கண்ணே!
தானாய் சுழல்கிறாய்!
இலைச்சுருள் அல்வா கண்ணே!
என்கரம் நிசமோ-ஆனாலும்
தகைநான் சத்தியம் கண்ணே!
தமிழின் பத்தியம்.
இலைச்சுருள் அல்வா கண்ணே!
என்கரம் நிசமோ-ஆனாலும்
தகைநான் சத்தியம் கண்ணே!
தமிழின் பத்தியம்.
காய்வதும் சேலையோ கண்ணே!
காளை
நானுந்தான்-வனப்பு
மேய்வதோ
கண்கள்தான் கண்ணே!
தீய்வது ஆன்மாதான்.!
பக்கமே ஊரிருக்கோ கண்ணே!
அச்சம்
தடுக்கிறதோ-பாவி
வெக்கம் நெஞ்சிருக்கே கண்ணே!
எச்சம் தமிழிருக்கே!
ஆற்றங்
கரைமேல்க் கண்ணே!
அழகுக்
கிராமந்தான்-பண்பில்
போற்றும்
காதல்க் கண்ணே!
பழகு மரபுதான்.
காயும்
சேலையிற் கண்ணே!
காற்று அலைகிறதே--திவலை
மாய்ந்தும் ஆறும் கண்ணே!
மாய்ந்தும் ஆறும் கண்ணே!
மாற்றும் நானிலையோ !
பொறாமை போட்டிக் கண்ணே
பொல்லாச் சூட்டிற்கோ-காதல்
உறாமை கேட்டிற் கண்ணே
ஒளித்தான் சூரியனோ!.
மீட்டிய
அழகுநீக் கண்ணே
மிளிர்ந்த
சிலைதானோ-நான்
ஈட்டிய
முதலாக் கண்ணே!
கூட்டி
முத்தமிட்டேன்.
இப்படிக்
கனவுதான் கண்ணே!
இனிக்கக்
காண்கையிலே--பொறா
தொப்பென
மாங்கனி கண்ணே!
தொட்டு எழுப்பியதே!
எப்படித்
தாங்குவன் கண்ணே!
அப்படி பெருஇழப்பை-நீதான்
செப்படி தேங்கனி கண்ணே!
ஒப்படி ஒருமுறையே!
அள்ளி விழுங்கக் கண்ணே!
ஆவல் துடித்தாலும்-தொட்டு.
கிள்ளி நுகரக் கண்ணே!
காவல் துறப்பாயோ!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment