Thursday, 26 December 2013

கூடிவாழ்வோம் குழந்தைப்பாடல்

கூடி வாழ்வோமே.(குழந்தைப்பாடல்)

காக்கைகள் போலக் கூடுவோம்-அது
காட்டிடும் நீதியும் தேடுவோம்.
பகிர்ந்துமே உண்டுமே வாழுவோம்-பிறர்
பசியையும் போக்கி உதவுவோம்

எறும்புகள் போன்றும் உழைத்திடு-அது
இயங்கிடும் வாழ்வையும் வாழ்ந்திடு
சேர்க்கிற காலத்தில் சேர்த்திடு-ஏழ்மை
தீர்க்கிற வேகத்தில் தீர்த்திடு.

பாம்பது பாடமும் நல்லதே!--படம்
காட்டும் கோவம் சொல்லுதே!
தேடியும் போயித் தீண்டாது-தீவிரம்
கூடியும் தீமையும் செய்யாதே.

கிளியும் கேட்டுத்தான் மொழியிது--பேசும்
மொழியில் கூடித்தான் பழகுது.
மொழிக்குச் சண்டையும் தேடாது---தம்முள்
முட்டியும் மோதியும் சாகாது.

விலங்கின் உறவைப் படியுங்கள்-அவையும்
பழங்கும் வனத்தைப் படையுங்கள்.
மதங்கள் பிரித்திடா வாழ்க்கைதான்-பழகி
மனிதம் உலகில்  படியுங்கள்.

பறவைகள் சமூகம் பேதமில்லை-கூடும்
உறவுகள் என்றும் சேதமில்லை.
மனிதன் மட்டும் இனம்கூவி--மனம்
மரித்துப் பிணமாய் திரிவதேன்?

பகவன் படைத்த படைப்புகள்--மனிதன்
பழகிப் புரிந்து திருந்தவே.
படைப்புகள் யாவும் பகவனே-எதற்கு
படைகள் சேவிக்கும் கோவிலே!!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment