பொறுமை! அருமை!
பொறுமை!பொறுமை!பெருமை!
அருமை! அருமை!திருமை
பொறுமை!பொறுமை!பெருமை!
அருமை! அருமை!திருமை
பொறுத்து உணரும் அறிவும்
பொருந்த நிறைந்தால் மனிதம்.
சொற்களில் துடிக்கும் வலிதான்
சுரணை என்பதன் குறிதான்.
பற்களில் அடக்கும் வலிமை
பழிதீர் வஞ்சம் ஒழிக்கும்.
துர்க்கணை தாங்கும் இதயம்
அர்ச்சனை வாங்கும் உயரம்.
உளியடி பொறுக்கும் மலைதான்..
கலைவடி விருக்கும் சிலையாம்..
சுரணை என்பதன் குறிதான்.
பற்களில் அடக்கும் வலிமை
பழிதீர் வஞ்சம் ஒழிக்கும்.
துர்க்கணை தாங்கும் இதயம்
அர்ச்சனை வாங்கும் உயரம்.
உளியடி பொறுக்கும் மலைதான்..
கலைவடி விருக்கும் சிலையாம்..
பிறனுக்கு சொல்லும் அறிவும்
தனக்குள் கொண்டால் தெளியும்.
நெறிப்படும் தன்மை புரிந்தால்
வசப்படும் நன்மை விளங்கும்.
பொருத்தம் ஏற்றால் பழகு.
திருத்தம் தோற்றால் விலகு.
வருத்தம் எதற்கு உறவு?
நிறுத்தம் அதற்கு அறிவு.
குணங்கெடுஞ் சினமோ பாவம்.
மனம்படு பகையோ ரோகம்.
வெறுமை விளைவின் ஏவல்.
பொறுமை சிறுமைக் காவல்.
கொ.பெ.பி.அய்யா.
பொருத்தம் ஏற்றால் பழகு.
திருத்தம் தோற்றால் விலகு.
வருத்தம் எதற்கு உறவு?
நிறுத்தம் அதற்கு அறிவு.
குணங்கெடுஞ் சினமோ பாவம்.
மனம்படு பகையோ ரோகம்.
வெறுமை விளைவின் ஏவல்.
பொறுமை சிறுமைக் காவல்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment