திருப்பதி
திருப்பதி
மலையப்பா—உன்
திருவடி
துணையப்பா
இருப்பது
நிலையப்பா—ஏழை
பிறப்பது ஏனப்பா?.
உண்டியல்
நிறைத்தாலும்--நான்
உன்னருள்
கரைந்தாலும்.
உண்டியும்
கொடுத்தாலும்—ஏழை
கண்டதும் நாணுவதேன்?.
அன்னமும்
தானமும்—நான்
ஆயிரம்
செய்தாலும்
எண்ணம்
நிறையவில்லை—ஏழை
வறமை கரையவில்லை..
தேரது இழுத்தாலும்—நான்
தெருவில்பூ விதைத்தாலும்
ஊர்
வாழும் வறுமையில்—ஏழை
உறுபசி மறந்தேனே!.
பட்டுனக்குக்
கட்டினாலும்—நான்
பகட்டினைக்
காட்டினாலும்.
ஒட்டுத்துணி
ஒட்டாத—ஏழை
உடல் கண்டு நொந்தேனே!.
தோரணங்கள் அமைத்தாலும்—நான்
வாரணம் அமர்ந்தாலும்
தெருவோரம் படுத்துறங்கும்—ஏழை
பரிதாபம் அறியேனே!.
ஊரெல்லாம்
கூட்டினாலும்—நான்
ஊர்கோலம் போனாலும்.
தீராத பிணியோடு--ஏழை
திரிவதைப் புரியேனே!
தீராத பிணியோடு--ஏழை
திரிவதைப் புரியேனே!
கூரை தங்கம் ஆக்கினாலும். —நான்
கோபுரமும்
உயர்த்தினாலும்.
கூடு ஒரு குடிசையின்றி—ஏழை
வாடுவதை எண்ணேனே!.
மலையேறி வந்தாலும்—நான்
தலையுன்னைக் கண்டாலும்
நிலையான வாழ்வுண்டோ!—ஏழை
நிலைக்கென்ன மாறுண்டோ!
ஊரிலொரு கோவிலுண்டு--அதன்
சீரறிய யாருண்டு!
மலை ஏறும் கோவிந்தர்கள்—ஏழை
மனம் ஆற தந்தார்களா?
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment