திசைமாறும் பறவைகள்.
வேலைதேடி கூட்டமொன்று வெளியே சுத்துது
கூலிநாடி தெருக்களிலே பூட்டுடைக்குது.
நடமாடும்
ஏட்டியம்மோ பெண்கள் கழுத்து
உடனடி
தேவைக்குத்தான் நகையறுக்குது.
வெறிபிடித்த
நாய்களுந்தான் வேட்டைக்கலையுது
கறிபிடுங்க
காத்திருந்து கற்பழிக்குது.
பெண்களென்ன
இச்சைக்கான யூஸ்அன்ட் துரோவா
தின்றபின்
கொன்றுதான் வீசியெறியுது.
விருப்பமில்லா
திருமணங்கள் வருத்தி நடக்குது
வருத்தியும் சேரப்பின் கொலைகளாகுது.
கணவனையும் மனைவியே கொலை செய்கிறாள்
பிணைதுன்பம் எத்தனைதான் பொறுத்திருப்பாள்!.
காணுங்கொடுஞ் செய்திகட்கு கற்றோரே நாயகர்கள்
கூசுதே
கூறவே கோணலெங்கானதோ!!
வலிமை தானில்லையோ வாடியதோ நம்பிக்கை
விடியலைத்தேடாது
திசைமாறிப் போவதோ!.
திசைமாறும்
பறவைகளே தேடும்வேலை விட்டுமே
தேடுவோர்க்கு தாங்கலாய் நிழலாகுங்கள்.
தேடுவோர்க்கு தாங்கலாய் நிழலாகுங்கள்.
விசைபோலும் முடுக்கிவிடு உடல் எந்திரம்
வசமாகும் உலகமே ஒருமந்திரம்.
வசமாகும் உலகமே ஒருமந்திரம்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment