கவியும் கலையும்.
கவிதை ஒன்று எழுதினேன்...
காட்டிக் காட்டிக் கேட்கிறேன்.
கருத் தென்ன சொல்வாரென
காத்துக் கிடந்து தவிக்கிறேன்.
எவரிடம் கருத்துக் கேட்டேனோ
அவரும் கருத்துச் சொன்னார்...
கருத்தைத் தேடுபவ னல்ல கவிஞன்
கருத்தை விதைப்பவனே கவிஞன்".
கவிதை கருத்தாய் வடிக்கப் பட்டிருந்தால்
கலையாய் கவிதை படிக்கப் பட்டிருக்கும்.
கவிஞன் கவிதையை செதுக்கியிருந்தால்
சிலையும் சிற்பமாய் முடிக்கப் பட்டிருக்கும்.
கவிதை வெறும் எழுத்துக்களல்ல.
கற்பனை வரைந்த அற்புதம்.
இரசிப்பவரோடு இரகசியம் பேசும்
அழகின் கவிதை ஓவியம்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment