Sunday, 19 April 2015

ஆணா பெண்ணா?

ஆம்பளையா பொம்பளையா?

ஆம்பளையா பொம்பளையா
அடையாளம் இருக்கு.--அது
வேட்டியினும் சேலையினும்
விவரம் ரொம்ப இருக்கு.

வீரமுன்னா ஆம்பளை
மானமுன்னா பொம்பளை -ரெண்டும்
வேற வேற ஆனாலும்
விசயமெல்லாம் ஒண்ணுதான்.

வேட்டியை வரிஞ்சி கட்டி
மீசமுறுக்கி நின்னானா ஆம்பள--அய்யோ
காப்பாத்த ஆளு இல்லயான்னு
ஒப்பாரி வச்சழுதா பொம்பள.

என்ன தப்பு நடந்தாலும்
முன்ன வந்து தடுத்தான்னா ஆம்பள--பெரிய
சத்தம் எங்கயோ கேக்குதுன்னு
சட்டுனு கதவ சாத்துன்னானா பொம்பள.

உடம்பை நல்லா இறுக்கி வச்சி
உழைச்சுக் குடும்பம் காப்பாத்துனா ஆம்பள--சும்மா
புள்ள மட்டும் பெத்துக்கிட்டு
உள்ளேயே கிடந்தான்னா பொம்பள.

குடிச்சாத்தான் ஆம்பளையா
குடும்பம் பாத்தா பொம்பளையா--வாழ்க்கை
விடியலுக்கும் அடையலுக்கும்
விவரம் என்ன புரிஞ்சிரிச்சா?

கொ.பெ.பி.அய்யா.


Saturday, 18 April 2015

பட்டகாயம் பேசுது

பட்ட காயம் பேசுது.

சுட்டுச்சுட்டு பட்டுப்பட்டு--அடி
பட்டகாயம் பேசுது--பேசாம
தட்டித்தட்டி விட்டுவிட்டு--கூசாம
முட்ட எட்டிப் பாயுது.

எவனுக்கென்ன ஆனாலென்ன--என்றே
கவனிக்காமல் போனோம்--இன்று
இவனுக்கென்ன நடந்தாலென்ன--என்றே
அவனுக்கென்ன கடந்தான்.

தனக்கு மட்டும் வலிக்குதென்றால்---கூவி
இனத்தைக் கூட்டி இழுப்பான்--ஆனால்
இனத்திற் கொரு துயர மென்றால்--பாவி
தனக்குத் தெரியாது என்பான்.

பாம்பு ஒன்று சீறி நின்றால்--திரண்ட
படையும் அஞ்சி நடுங்கும்--மிரண்டால்
சோம்பேறியும் சூரனாவான்---அவனிடம்
சுருண்டு ஊரும் ஒடுங்கும்.

நாயும் கூட ஓடக்கண்டால்---அது
பாய்ந்து பின்னே துறத்தும்---துணிந்து
கூர்ந்து அதை நோக்கி நின்று--கோபப்
பார்வை விட்டால் பறக்கும்.

அவனுக்கென்ன அதிகம் வைத்தான்--மிரட்டி
அடக்க உன்னை துணிந்தான்--நீயும்
எதிர்த்து நின்று நிமிர்ந்து பார்த்தால்---உலகில்
எவனும் பாவி ஆகமாட்டான்.

கொ.பெ.பி.அய்யா.



Thursday, 9 April 2015

குளத்தூரில் கல்லூரி.


தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர்
ந.மரியப்பநாடர்--முத்துக்கனி
கலைக்கல்லூரி திறப்புவிழா வாழ்த்து.
நாள்:04/05/2015.

வளநாடாம்  நலநாடாம்—கல்வி
களநாடாம் தமிழ்நாடாம்.
தளநாடாம் 
நலத்தூராம் நகரமையம்

அறம் வளர் இந்து நாடார்—கல்வி
தரம் உயர் தந்து வாரார்.
திறம் பல கலைகள் தேற—இன்று
திறக்கிறார் கல்லூரியும்.

அறம் நெஞ்சில் போற்றத்தானோ—நாடார்
குலம் மண்ணில் தோற்றினாளோ!
வரம் தந்து ஏற்றியவள்—அன்னை
அருள் பத்ர காளி போற்றி!

அகம் புறம் இரண்டு கண்கள்—கற்று
ஆயும் அறிமூன்றாம் கண்ணை
திறந்த மகான் காமராசர்---நாடார்
பிறந்த குலம் போற்றி!போற்றி!

மாரியாப்பர் முத்துக்கனி—முருகப்பா
நாடார் வகை பெற்றக்கனி
சென்னை வாழ் சேகரர்கள்----தந்தை
அன்னை புகழ் யோகம் செய்தார்.

மாரியாப்பர் முத்துக்கனி—நாடார்
கூறும் பேர் கல்லூரி
ஊறிபல் கலைக் கழகமாகி----நாளை
தேறி நிலை வாழி!வாழி!

கொ.பெ.பி.அய்யா.



Sunday, 5 April 2015

காலைக்காபி

காலைக் காபி!

காப்பி குடிக்கையிலே! காலைப்பொழுதிலே!
நேர்த்தி விளக்குதே!நீ கவிழ்த்த நோக்கிலே!
குளித்துத்தலை முடித்துக் கோணும் சிரிப்பிலே
விழிக்கும் என்னுணர்வு வினை மீண்டும் தூண்டுதே!
குளிக்கச்செய்திடுமோ!கொண்டு வா என்னருகே!
கொழிக்கும் உன்னழகு அழைப்பிற்கு பின்னெதுவோ!
ஆற்றிக்குடிக்கலாம் அதைக் குறைப் படிக்கலாம்.
தேற்றி முடியுமோ!தினம் தினம் புதுமையே!

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 4 April 2015

திருமணம் ஒருமன்.

சத்திய மனமே!நித்தியம் வாழ்வே! 

அத்தை மகனே! அம்மான் மகளே! 
முத்தைத் தமிழே!மூத்த புகழே! 
இத்தரை மணமே!ஒத்திரு மலரே! 
சத்திய மனமே!நித்தியம் வாழ்வே! 

புட்ப ராஜனும் பூவழகி ராணியும்
இட்டமாகியும் ஈன்றோரைப் பேணியும் 
இரத்தங்கள் உறவாக சித்தங்கள் நிறைவாக 
அருத்தங்கள் திருவாக உத்தமம் வாழ்கவே! 

ஒருவரை ஒருவர் உணர்ந்து புரிந்து 
ஒருவரில் மறுவர் ஆதிக்கம் துறந்து. 
அன்பும் பாசமும் சமமெனப் பகிர்ந்து 
அமைதி நிறைந்து வாழ்க மகிழ்ந்து.! 

இன்பம் துன்பம் இரண்டிலும் இணைந்து 
எல்லாம் ஒன்றில் ஒருசுதி அமைந்து 
நம்பிக்கை தன்னில் நாளும் வாழ்ந்து 
நன்னிலை நின்று வாழ்க சிறந்து.! 

அச்சம் அற்ற நம்பிக்கை கொண்டு 
உச்சம் காண உம்மில் துணிந்து. 
துச்சம் என்றே தூரம் மறந்து. 
எச்சம் வாழ வாழ்க முயன்று. 

தம்மைத் தாழ்த்தும் தாழ்மை அகற்றி!. 
உம்மை ஏற்றும் உள்ளறி வேற்றி! 
இம்மை பயத்தின் பேதமை விடுத்து 
செம்மை முயன்று வாழ்க முடித்து!. 

திண்ணியர் ஆண்ட பூமி இதனை. 
புண்ணியர் வாழ்ந்த மண்ணும் இதனை. 
கண்ணியம் நேராய் காக்கும் வாழ்வினை 
நண்ணிய அறவழி ஆற்றியும் வாழ்க! 

மண்ணுயர் மாந்தர் முன்னவர் மாட்சியாய் 
எண்ணுயர் நேர்ந்து விண்ணவர் சாட்சியாய் 
நன்கலம் தங்க நன்மக்கட் பேறாய் 
மங்கலம் பொங்க வாழ்க வாழ்கவே! 

கொ.பெ.பி.அய்யா.