Thursday, 26 December 2013

கனவுகளை விரட்டாதீர்.

கனவுகளை விரட்டிவிடாதீர்!.

காதல் மனைவியை கனவில்தான்
காண்பது ஒன்றும் அதிசயமில்லை.
அன்பின் ஆழம் அது கிடந்தேதான் 
பொங்கி எழுவதும் அரவமில்லை.
சிந்தும் நினைவுகள் இரவில்தான்
வந்தும் கனவுகள் தூங்கவில்லை.

உறக்கம் ஏது மறப்பதற்கு!
மறந்தால் தானே நினைப்பதற்கு.
நினைக்க இனிக்கும் காதலுக்கு
கனவாய் கனியும் பொய்யெதற்கு?
நிசமோ! நிழலோ! விடையதற்கு
நினைவோ! கனவோ! சுகமிருக்கு.

உடலது தானே தூங்கும் பொழுதும்
மனமது மட்டும் விழித்திருக்கும்.
அலையும் நினைவின் பதிவுகள் தான்
மலரும் கனவுகள் நித்திரையில்.
அணையும் தூக்கமே கலையாதே!
கனவுகள் கூட  சுகமானதே!

அமைதித் தோட்டத்தில் ஆயிரமாய்
அன்பின் ஏக்கம் பூக்கட்டுமே!
கனவில் காதல் தேன் கசிவாய்.
மனதால் நாவி மொச்சட்டுமே!
துஞ்சும் விழிகளே மலராதீர்!
கொஞ்சும் கனவினை விரட்டாதீர்!

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment