Thursday, 26 December 2013

என்னடா கொண்டாட்டம்?

கொண்டாடும் பெருமையென்ன!

ஆண்டுகள் தோறும் அகவையும் எட்டிடும்
மாண்டுதான் ஆறும் முடிவையும் தொட்டிடும்
ஈண்டும்  இடையில் எழுந்தும் விழுந்தும்-
பெண்டு.
தீண்டியும் பல்கத்தான் நாயும் பிறக்குமே!

நைய்யும் சமூகமும் பைம்பொழில் ஆச்சோ!
தொய்ய்யும் மனிதமும் உய்ந்துந்தன் போச்சோ!
படித்துக் கிழித்தாயோ! செய்து முடித்தாயோ!-என்னடா
பிறந்தநாள் கொண்டாட்டம். ஆஹா பிரமாதம்!

காமராசன் போலும்நீ காமம் துறந்தாயோ!
கக்கன் வஉசி போல் உத்தமராய்
வாழ்ந்தாயோ!
குடும்பம் மறந்தாயோ கொண்டதும் விற்றாயோ!-
பூமிக்கு பாரமாய் பிறந்ததே பாவம் 
போடா போ!

காந்தியாய் வாழ்ந்தாயோ!! நாட்டுக்கு உழைத்தாயோ!!
கைம்மாறு கொள்ளாமல் மெய்வேள்வி செய்தாயோ!!
சத்தய மூர்த்தியோ தியாகியோ!நீ யாரடா?
பிறந்தவ னெல்லாம் வாழ்ந்தானோ
வாழ்த்துதற்கு!

சமூகநீதி காத்து சரித்திரம் நின்றாயா?
சாதிக்கப் பெண்டீரை வாதிட்டு மீட்டாயா?
ஈவெராவா! வந்துநீயும் பிறந்துவிட்டாய்!-
சாவுநாள் எண்ணத்தான் ஈவுநாள் கொண்டாட்டமா?

பாரதியா நீ பாதையெல்லாம் பாமாலை!
யாரடா நீ! கூற உனது அடையாளம் என்ன?
வள்ளுவனோ கம்பனோஇளங்கோவோ 
சொல்லடா!
அற்புதம் செய்தாயோ அற்பனே பிறந்தநாள் ஏனடா?


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment