Wednesday, 25 December 2013

முதல் உறவு---நாட்டுப்புற பாட்டு.

முதல் உறவு (நாட்டுப்புறப் பாட்டு)

=பாலிருக்கு பழமிருக்கு
===கண்ணம்மா--அதப்
===பாத்தாக்கூட பசிக்கலயே
===என்னம்மா?

பெ=பொய்யிருக்கு வாயிருக்கு
===மச்சானே---இது
===முதலிரவு பேச்சுத்தானே
===அத்தானே!

=நாவிருக்கு நலமிருக்கு
===கண்ணம்மா---ஒரு
===பேச்சுமட்டுந் தோணலயே
===என்னம்மா?

பெ=கையிருக்கே காலிருக்கே
===மச்சானே---அதக்
===கட்டாமத்தான் விட்டாயே
===அத்தானே!

=பூவிருக்கு புகையிருக்கு
===கண்ணம்மா--உன்
===கூந்தல்தானே மணக்குதடி
===என்னம்மா?

பெ=கண்ணிருக்கு பொண்ணிருக்கு
===மச்சானே--எதுக்கு
===கண்ணாப்பின்னா பேச்சுதானோ
===அத்தானே?

=மெத்தையுண்டு வித்தையுண்டு
===கண்ணம்மா-இனி
===அத்துமீற அடுத்ததுதான்
===என்னம்மா?

பெ=அய்யய்யோ வேண்டாமய்யா
===மச்சானே---இது
===ஆடிமாசம் ஆகாதடா
===அத்தானே!

=அணை உடைஞ்சி மீறுதடி
===கண்ணம்மா-அது
===தாங்காதடி சாத்திரமும்
===என்னம்மா?

பெ=நானும் மட்டும் தரிசாடா
===மச்சானே--நீயும்
===ஏருழுது நீரு பாச்சு
===அத்தானே!

=ஏரப்பூட்டி நேரமாச்சு
===கண்ணம்மா-நல்ல
===ஈரம்பாத்து விதைக்க நேரம்
===என்னம்மா?

பெ=கரண்ட்டுப் பில்லு எகுறுமடா
===மச்சானே---வெட்டிக்
===கதையெதுக்கு கட்டிலிலே
===அத்தானே?

=விவரமான பொண்ணடியோ
===கண்ணம்மா-அடியே
===அணைக்கிறேன்டி விடிஞ்சிருச்சே
===என்னம்மா?

பெ=விடிஞ்சா என்ன முடிஞ்சிடுமா
===மச்சானே-வெட்ட
===வெளிச்சமான பின்ன என்ன
===அத்ததானே!

=முதல் உறவு இரவு போச்சு
===கண்ணம்மா-இப்போ
===முதல் பகலும் அடஞ்சிடுமா
===என்னம்மா?

கொ.பெ.பி.அய்யா.









No comments:

Post a Comment