Sunday, 30 November 2014

நல்வழி.....குழந்தைப் பாடல்.

புதிய நல்வழி 5 (குழந்தைப் பாடல்)

நதிகள் எல்லாம் இணைப்போமே!
நாட்டு நலமும் செழிக்குமே!.
நிலங்கள் எல்லாம் நனைப்போமே!.
நீர் வளம் தங்கி நிலைக்குமே!
நுகரும் விலையும் சரியுமே!
நூதனம் பெருகி விரியுமே!
நெல்வயல் பரவிப் பெருகுமே!
நேரும் பஞ்சமும் ஒழியுமே!
நைந்த நிலையதும் தேறுமே!
நொறுங்கி வறுமையும் சாகுமே!
நோக்கம் திருமை ஆகுமே!
நௌவும் கரை வந்து சேருமே!


நௌ---மரக்கலம்

கொ.பெ.பி.அய்யா.

பிறவி மறுக்கிறேன்.

பிறவி இனி வேண்டாம்.

சிலையோ சித்திரமோ நீ எந்தன்
சிந்தனைப் பத்திரமோ—அழகுக்
கலையோ கற்பனையோ நீ எந்தன்
கண்களில் நிரந்தரமோ!


என்னைக் கலைத்துவிட்டேன் உனக்குள்
பெண்ணைக் கண்டுவிட்டேன்—உன்னில்
கண்ணைத் தொலைத்துவிட்டேன் உலகில்
என்ன இனி இரசிப்பேன்.!

பெற்றவர் எவரடியோ பிரம்மன்
உற்றவர் செய்தனரோ---பிறவியில்
கண்டு தொழுதிடணும் அவர்
காலடி விழுந்திடணும்.

விந்தையும் நிகழ்ந்திடுமா மண்ணில்
வேறென்ன அதிசயமோ!----பாவி
வஞ்சகன் இறைவனடி அழகை
மிச்சமும் வைக்கலையே!

பிறவியும் இனி வேண்டாம் வேறு
பெருமையும் பேறுண்டோ!—பயனே
உனக்குள் அடங்கிவிட்டேன் போதும்
எனக்குள் விளங்கிவிட்டேன்.

கொ.பெ.பி.அய்யா.

Thursday, 27 November 2014

முத்தம்.


முத்தம் எத்தனை?

முத்தம் ஒன்றும் செய்யும் போதும்
சத்தம் அங்கும் கேட்கும் போதும்
முத்தம் என்றும் சத்தம் செய்யும்.
சித்தம் பொங்க வித்தை செய்யும்..

அன்பில் மலரும் ஆன்ம உறவுகள்
அங்கீ கரிக்கும் தேன்ம வரவுகள்
பண்பில் சிறந்து விளையும் முத்தமதோ!
நெஞ்சில் நனைத்து பதியும் முத்திரையோ!.

உயிரில் ஊறி உணர்வில் விரிந்திடும்.
உறவில் தேறி அறிவில் தெளிந்திடும்.
நினைவில் மீறி அணைவில் சித்தம்
இணைவில் மாறி இறுகுவதும் முத்தம்.

முத்தம் என்பது மோகம் முந்தலோ!
பித்தம் ஏறிய சித்தம் சிந்தலோ!
ஒத்தும் அன்பின் முத்திரை உந்தலோ
முத்தும் காதலின் சத்தியம் தந்தலோ!

முத்தம் என்றால் எத்தனை விதமோ
அத்தனை அன்பால் ஆவதும் பதமோ!
பெற்றவர் பிறந்தவர் மற்றவர் நட்பும்
நற்றவர் மதிப்பும் உச்சமும் முத்தம்.

உச்சி முகர்ந்து உள்ளன்பு கொண்டு
எச்சம் படாது நெற்றிப் பொட்டு
முத்திடும் முத்தம் முன்மொழி வாழ்த்தது
மற்றிட மெல்லாம் மண்முறை வார்த்தது.

காதல் என்பது காமம் தவிர்த்தது
காதல் அன்பில் கண்களில் கனிந்தது.
கண்கள் அறிய கன்னம் முத்தும்
எண்ணம் விரிய இச்சிடும் முத்தம்.

பச்சிளம் குழந்தை பரவசம் இன்பம்
மெச்சிட அருமை மகிழ்ந்திடும் முத்தம்
வச்சிடும் இடமெல்லாம் வாயுள் இனிக்கும்
இச்சுகம் பெறுவதும் வேறெங்கு கிடைக்கும்.?

ஒருபால் முத்தம் ஊக்கம் முடுக்கும்.
இருபால் முத்தம் தேக்கம் விடுக்கும்.
அன்பால் விளையும் அத்தனை முத்தமும்
தெம்பால் படைக்கும் ஒத்தணை சித்தமும்.

இறையருள் ஈந்த வரமிந்த செல்வம்
வரையறை கொண்டு நிறையது கொள்வம்.
மறைப்பது மறைத்து முறையது மதித்து
நிறைப்பது நிறைத்து மறையென வாழ்வோம்.

கொ.பெ.பி.அய்யா.

Thursday, 20 November 2014

சேவல்....குழந்தைப்பாடல்.....குழந்தைப்பாடல்

சேவல் (குழந்தைப் பாடல்)

கொக்கரக் கொக்கரச் சேவலே
கொண்டை ஆட்டும் சேவலே
கக்கரப் புக்கரப் பாப்பாவை
கண்டு கூவிக் கூப்பிடு.

வண்ண வண்ண இறகுகள்
வளைந்த வாலுச் சேவலே
சின்னச் சின்னப் பாப்பாவை
சிறகடித்துக் கூப்பிடு.

அசைந்து அசைந்து நடக்கிறாய்
அழகு உள்ள சேவலே.
இசைந்து நீயும் பாப்பாவை
இறகு தந்து கூப்பிடு.

கூரை மேலே ஏறிடு
கூவிக் கூவிப் பாடிடு
சோறு உண்ணப் பாப்பாவை
சொல்லிச் சொல்லிக் கூவிடு.

கொண்டையைக் கொண்டைய ஆட்டியே
சண்டைக்கு நீ வாரியா?
சந்தோசமாய் பழகுவோம்.
சகோதராய் விளையாடுவோம்.

காலை தினம் கூவிடு!
கடமை செய்ய ஏவிடு!
எழுப்பி இந்த மனிதரை
இருளை விட்டு அழைத்திடு!

கொ.பெ.பி.அய்யா.

நிலாச்சோறு......கழந்தைப் பாடல்.

நிலாச்சோறு (குழந்தைப் பாடல்) 

நிலா வருது பாரடியோ!
நிறுத்தி.அதனைக் கேளடியோ!.
உலா போவது எங்கடியோ!
உன்னைச் சேர்க்கச் சொல்லடியோ.!

உணவு உண்ணு  சீக்கிரமே.
உனக்குப் பாட்டுச் சொல்லிடுமே.
தின்னச் சீனி மிட்டாயும்
தினமும் வாங்கித் தந்திடுமே!.

தேடித் தேடி உன்னையே
ஓடி ஓடி வருகுதே..
கூடி விளையாடத் தானுமே..
கூப்பிடுமே சாப்பிடேன்

உணவு உண்டால் வளரலாம்.
உலகம் சுற்றிப் பார்க்கலாம்.
பாட சாலை போகலாம்.
பார் ஆள ஆகலாம்.

அதோப் பாரு வருகுதே..
இதோப் பாரு சிரிக்குதே.
உன்னை நிலா பார்க்குதே!
அன்னம் உண்ணச் சொல்லுதே.

பாலுஞ் சோறு உண்டுமே
பாப்பபா உன்னைத் தேடுதே.
உண்ணு உண்ணு சீக்கிர்ம்
வெண்ணிலாவும் கேக்குதாம்.

கொ.பெ.பி.அய்யா.

..

நம்பிக்கை.


வானமும் கை கூடும்.

நம்பிக்கை வை தோழா!
நம் கைகளே துணை தோழா!
சந்தர்ப்பம் காலம் தரும்—அதை
முந்திக் கொண்டு முயல் தோழா!

சக்கரம் சுழழ்கின்றது---காலச்
சக்கரம் சுழழ்கின்றது.—அதில்
சந்தர்ப்பம் தெரிகின்றது—நாம்
விழிப்புடன் முயலாமல்—அதை
பழிப்பது இயலாமை.

தேடி வரும் போது—நம்மை
தேடி வரும் போது—அந்த
வாய்ப்பும் வாசல் வரும்—நல்ல
வரவென ஏற்காமல்—விட்டு
வருந்துதல் தேடாமை.

ஓடும் உலகம் இது---பொழுதும்
ஓடும் உலகம் இது---யார்க்கும்
தேடியும் நில்லாது—ஒரு
பாடும் செய்யாமல்—உலகம்
பரிசொன்றும் தாராது.

நம்பிக்கை நலம் வேண்டும்---தன்
நம்பிக்கை நலம் வேண்டும்.—தம்
நெஞ்சினில் பலம் வேண்டும்—பிடி
கொம்பினை விட வேண்டும்.—திட
தம்மினில் எழ வேண்டும்.

வானமும் கை கூடும்—பொறி
ஞானமும் தீ ஊறும்---பெருஞ்
சேனையும் தோள் சேரும்---மனம்
தானது எனத் தேறும்---மலை
ஆனதும் தூள் தூறும்.

கொ.பெ.பி.அய்யா.

தொ.கா.பெட்டி....குழந்தைப்பாடல்.

தொ.கா.பெட்டி.(குழந்தைப் பாடல்)
.
தொலைக் காட்சிப் பெட்டியாம்,
தூரந் தொலைத்த பெட்டியாம்.
எங்கிருந்தோ  காட்டுவதை
இங்கே  காட்டும்  பெட்டியாம்.

வண்ண காட்சி பெட்டியாம்,
கண்டு மகிழும் பெட்டியாம்,
வனங்காடு மலையெல்லாம்,,
விலங்குந் தெரியும் பெட்டியாம்.

பாட்டுப் பாடும் பெட்டியாம்
பாட்ம் சொல்லும் பெட்டியாம்.
ஆட்டம் ஆடும் காட்சிகள்,
அருகே காணும் பெட்டியாம்.

கதை கூறும் பெட்டியாம்,
கருத்துக் கேட்கும் பெட்டியாம்.
விளையாட்டுப் போட்டிகள்
வீட்டில் பார்ககும் பெட்டியாம்.

பொம்மை காட்டும்  பெட்டியாம்,
புதுமை  பார்க்கும்  பெட்டியாம்,,
நாட்டு நடப்புச் செய்திகள்
நேரே தரும் பெட்டியாம்.

கொ.பெ.பி.அய்யா.




Wednesday, 19 November 2014

சின்னப் பெண்ணே....குழந்தைப்பாடல்.

சின்னப்பொண்ணே !
-------------சேதி கேளு!(குழந்தைப் பாடல்)

சின்னப்பொண்ணே!சின்னப்பொண்ணே!
சேதி கேளம்மா----உந்தன்
அன்னை பேச்சைக் கேட்டு வளர்ந்து
அருமை கொள்ளம்மா.-----அம்மா
பெருமை அடையணும்-----நீயும்
வளமை அடையணும்.

காலம் மிகவும் கெட்டுப்  போச்சு
கருத்தில் கொள்ளணும்-----அழகுக்
கோலம் போன்றே உன்னைக் காக்க
தெரிந்து கொள்ளணும்------நீயும்
புரிந்து நடக்கனும்------பக்கம்
அறிந்து பழகணும்.

பெண்ணினந் தின்னும் பேய்கள் அலையும்
பார்தது விலகணும் ---எவரும்
அறியா மனிதர் அருகே வந்தால்
சரியா பேசி நெருங்காமலே----விட்டு
ஒதுங்கிப் போகணும்----பாப்பா
உசார் ஆகணும்

பள்ளி வீடு இரண்டுந்தவிர வேறே எங்குமே
உற்றாரன்றி உறவென்று நம்பி
மற்றாருடனும் செல்ல வேண்டாமே.----- எவரும்
தின்னும்ம் பண்டம் தந்திட்டாலும்
வாங்க வேண்டாமே-----உடனே
நீங்க வேண்டுமே.

கொ.பெ.பி.அய்யா






சின்னப் பாபா பத்திரம்.

பத்திரமாய் போய் வா!!
..
கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

சின்னப் பொன்னே!
சின்னப் பொன்னே.
சேதி சொல்லட்டுமா.
தின்னப் பண்டம்
தந்தால் வேற்றாள்
தின்ன வேண்டாமே...

மயக்க  மருந்து
கலந்திருப்பார்
நினைவில் கொளம்மா..
மயக்கியுனை
எவர்க்கேனும்
விற்றிடுவாரே..

அம்ம அப்பா
தந்தாரென்றே
பொய்யுஞ் சொல்லுவார்.
அம்மா அங்கே
இருக்கா ளென்றே
ஆசையுஞ் செய்வார்..

அப்பாவோட
நண்பனென்றும்
தப்பாச் சொல்லுவார்...
கூட்டி வரச்
சொன்னாரென்றே
கடத்திடுவாரே..
  
வீட்டு வேலை
ஆளானாலுமே
நம்பிவிடாதே.
ஒளித்து வைத்து
பெற்றோரிடம்
பணம் பறிப்பாரே.
 
பத்திரமாய்
பள்ளிக்கு நீ
போய் வரனுமே..
காத்திருப்பேன்
உனக்காக
அம்மா நானுமே.



வ.உ.சி.......குழந்தைப்பாடல்.


வ.உ.சி.///////குழந்தைப் பாடல்.

கப்பல் ஓட்டிய தமிழன் யாரு?
கண்மணி கூறு.
இப்புவியில் வெள்ளையரை
எதிர்த்த கப்பலு
இந்தியாவில் ஒருவர்தானே
என்பது பேரு.
சிங்கம் அவர் தென் தமிழன்
சிதம்பரனாரு.

வ.உ.சி. என்றாலே வள்ளல்
என்பாரே.
வரலாறு அறிந்தாலே வீரன்
என்பாரே.
பிள்ளை என்று சொன்னாலே
உள்ளம் பதறுவார்.
வெள்ளை அவன் இவராலே
வியர்த்துக் கொட்டுவான்.

பக்க ஊரு பதிந்த வீரம்
பாஞ்சாலங்குறிச்சி
திக்கெல்லாம் திகில் பரவும்
தில்லென உதிச்சு.
கட்டபொம்மன் விட்ட இடம்
தொட்ட வீரரு
ஓட்டப்பிடாரம் உலக நாதர்
பெற்ற பிள்ளையிவரு.

செக்கிழுத்த செம்மல் இவர்
சொத்திழந்தாரு.
சுதந்திரந்தான் சொத்து என
சுகமிழந்தாரு.
வக்கீலாக வாழ்ந்த இவரு
கல்லுடைச்சாரு
வாழும் நாட்டின் உரிமைக்காக
வறுமைப் பட்டாரு.

பட்டம் பதவி எல்லாத்தையும்
பறிகொடுத்தாரு.
மிச்சம் என்ன உயிர் அதையும்
துச்சம் என்றாரு.
முத்தமிட்டே பாரதத்தை
முன் மொழிந்தாரு.
கட்டாயம் விடியும் என்றே
கண் அயர்ந்தாரு.

கொ.பெ.பி.அய்யா.



Sunday, 16 November 2014

நானும் போராளி.


நானும் ஒரு போராளிதான்.

நானுமொரு போராளி மனிதனோடுதான்.
வேணுமவன் சீராளன் மனத்தினோடுதான்.
தோற்றுத் தோற்று வீழ்ந்தாலும் தோற்கவில்லைதான்.
நேற்று இன்று மாற்றம் பார்த்து வேர்த்திருக்கிறேன்..

இறைவன் என்பான் இருக்கிறானோ! இல்லையோ!
மனிதன் என்பான் பிறக்கிறானா சொல்லையா.
பிறக்கும் போது மனிதனாகப் பிறந்தவன்
பிறகு ஆவதேனோ அய்யோதனை மறந்தவன்.

கடவுளென்ன்று சொல்லக்கேட்டால் அறிவு சிலருக்கு
கடலுக்குள் பொங்கும் சுனாமி விரைவு இருக்கு.
அவனாலாகிய நட்டம் என்ன மனித குலத்திற்கு?
அறிவாளியென்ற பட்டம் இலாபம் இருக்கு.

அறிவுக்குள்ளே மறைந்திருக்கும் மனச்சாட்சிதான்.
அறியும் விதம் உள்ளேயிருக்கும் இறைமாட்சிதான்.
தனைஆய்ந்து தேடினால்தான்  வெளிப்படும் காட்சி
மனம்மேய்ந்து ஓடினால்தான்  பிழைபடும் சாட்சி.

இல்லையன்று சொல்லுவாரும் இருப்பைத் தேடுறார்.
சொல்லொன்றும் அஞ்சிநெஞ்சில் உறுத்தல் ஆகிறார்.
எதற்கு இந்த ஆராய்ச்சி என்ன பயனுண்டோ!
இதயம் ஓன்றி நேராய்ந்தால் இறைநீயன்றோ!

கொ.பெ.பி.அய்யா.

Friday, 14 November 2014

நல்லதோர் இராகம்.


புலமை ஏன்?

நல்லதோர் இராகம் செய்தாய்—அதை
நலஞ்செய ஏன் மறந்தாய்?
கள்ளமற ஞானம் தந்தாய்—எனை
களஞ்செய ஏன் நொந்தாய்?

மனிதனாய் படைத்து விட்டாய்—அலை
மனதினை ஏன் இணைத்தாய்?
சிந்தனைத் தீயை வைத்தாய்—தேடும்
வெந்தணல் ஏன் வளர்த்தாய்?

கண்களில் காட்சி ஈந்தாய்—அந்த
காட்சியில் இரசனை சேர்த்தாய்..
இரசனையின் இரகசியத்தை-பாவி
ஏனொழித்து தேட விட்டாய்.

தேடத் தான் கற்பனையோ!—உள்ளே
தேடிச் சொல்ல சொற்கணையோ!
தேடி நான் வென்றதெல்லாம்—நீயும்
தேடிவரப் பொழு தில்லையோ?

அறிந்த தெல்லாம் எழுதவே—எனக்கு
அய்யன் நீதான் ஆணையிட்டாய்.
அறிவு வரம் தந்தசாமி—ஆளும்
பொருள்தரவும் ஏன் ஒளிந்தாய்?

உயிர் படைக்கும் உன்னைப்போல்—நானும்
உணர்சசி உயிர் கடவுள்தான்.
படைப்புகளை சிறை முடக்கி---பாவம்
பார்க்க ஏன் புலமையோ?

கொ.பெ.பி.அய்யா.
 


தீரன் சகன்னமலை


தீரன் சின்னமலை வீரன்.

கண்மணி பாப்பா கதையாக நீ கேளு
பொன்மணி பாரதம் பூக்கக் காரணமாரு?
தீரன் வீரன் தென்னாட்டு சூரன்
தீர்த்த கிரிதான் சின்ன மலைதான்.

ஈரோட்டுப் பெருமை பேரான காங்கயம்
பாராட்டு அருமை ஊரான பக்கம்
மேலப் பாளையம் மேதகு சிற்றூர்
ஆளப் பிறந்தவன் ஆண்சிங்கம் பெற்றூர்.

ரத்தின சாமி கவுண்டர் அவர்க்கு
பெற்றாள் பெரியாத்தா பிள்ளை செருக்கு
அட்டியன் தொட்டய்யன் ஆண்ட பரம்பரை
கெட்டியன் தீர்த்தன் கிளைத்தான் பெரும்படை.

ஒன்னம்மாள் கருணை திண்ணமாய் உரனை
தன்னகம் பெருக வண்ணமாய் அரணை
மண்ணது பெருமை எண்ணமாய் திறனை
முன்னவர் அருமை பண்ணினான் அறனை.

வித்தைகள் எல்லாம் கற்றான் வீரன்.
வெற்றிகள் வென்றும் பெற்றான் தீரன்.
அன்னியர் எவர்க்கும் அஞ்சா சூரன்.
தன்னிலம் தமக்கென துஞ்சா போரன்.

எங்கோ எவர்க்கோ எதற்கினி வரிப்பணம்
இங்கே இவர்க்கே அதுஇனி உரிப்பணம்.
பறித்தான் அதனை பகிர்ந்தனர் ஏழை.
செறுத்தான் கொங்கன் சிங்கன் காளை.

எவனெனக் கேட்டால் இவனெனச் சொல்லன்
சிவனுக்கும் சென்னிக்கும் இடையென மல்லன்
சின்ன மலையிவன் மன்னவன் வில்லன்
என்னவர் பிழைப்பெதிர் இன்னெவர் தில்லன்

அனைத்து இனத்தையும் அணைத்தே விழித்தான்
முனைத்து பலத்தையும் வளர்த்தே செழித்தான்.
இளைஞர் படையென்று விடைகண்டு துடித்தான்.
பகைஞர் படைகொன்று தடைவென்று முடித்தான்.

கொள்ளையன் வெள்ளையன் இல்லையன் ஆக்க
உள்ளையன் திப்புடன் நல்லுற வாக்க
எல்லை விதித்து தொல்லை எதிர்த்தான்.
இல்லை சரித்திரம் சொல்முன் பதித்தான்.

மைசூர் அரசை மடக்கிய பறங்கியர்
கைவேல் தீரனை கணக்கிடத் துணிந்தார்.
கப்பம் வேண்டியே காலடி பணிந்தார்.
வெப்பம் சீண்டியே கீழடி குனிந்தார்.

பறங்கியர் மிரட்டும் பீரங்கிப் படையும்
கிறங்கப் புரட்டும் தீரன் துணிவிலும்
ஓடா நிலையவன் ஓடா நிலையில் 
கோடாய் அமைத்தான் கோட்டை அரணில்.

பற்றி அன்னியர் படையினை அணைந்தே
சுற்றிச் சூலும் சூதினை அறிந்தே
வெற்றிக் கான ரகசியம் அனுப்பிய
வேலப்பன் நட்பே வீரே வாழ்க!

வேலப்பன் சேதி ஓலை எல்லாம்
காலணிக் குதியில் பதித்து அனுப்பும்
பொல்லான் என்பான் நல்லவன் அருந்ததி
வல்லான் அவன்வழி வாழட்டும் பெரும்பதி.

நேராய் எதிர்த்து போராய் முடிக்க
வீரம் பயந்த வீணர் திகைக்க
சூழ்ச்சி ஆய்ந்தனர் சூரனை அழிக்க
தேர்ச்சி செய்தனர் நல்லான் நடிக்க.

மறைந்து தாக்கவே பதுங்கிய பழனிமலை
நிறைந்து காக்கவே விளங்கிய சின்னமலை
அறிந்து நீக்கவே புரியா பொய்நட்பால்
தெரிந்து சிக்கினான் சிறியன் நல்லனால்.

காட்டிக் கொடுத்தவன் நல்லான் என்பான்.
போற்றி அணைத்தவன் பொல்லான் என்பான்.
பேரால் என்ன புரிந்து நம்பலாம்?
யாரால் என்ன தெளிந்து வாழலாம்?

எங்கோ பிறந்தவன் இங்கே நுழைந்தவன்
தங்கிய உறவரை பங்காய் பிரித்தவன்
ஒற்றுமை குலைத்தவன் பற்றினை மறைத்தவன்
கொட்டிய கொடுமையில் குறுகிக் கிடந்தொமோ!

ஒற்றுமை மறந்தோம் உரிமையைத் துறந்தோம்.
சிற்றறி வாலே சிதைந்து பரந்தோம்.
ஒற்றொரு புள்ளி உலகில் சின்னவன்
பற்றிய எள்ளி பழிக்கும் காலம்.

கொலைப்பழி கூறி கொற்றவன் தீர்த்தனை
மலைப்புகழ் ஏறி நட்டவன் தமிழனை
விலைக்குறி என்றே வீரத்தின் வீரனை
நிலைக்கழி ஏற்றி நேரந்தான் தூக்கினை.

சங்க கிரியிலொரு பங்கம் நேர்ந்ததோ!
சிங்கக் குகையிலொரு சிறுநரி பூந்ததோ!
தங்கப் பாரதம் தன்னிலை இழந்ததோ!
சுங்கம் வரியென சுதந்திரம் மறந்ததோ!

சரணம் என்பதும் சான்றோர்க்கு இல்லை.
மரணம் என்பதும் மறவர்க்கு இல்லை
தருணம் எதிர்த்து விதைஎனப் புதைவான்
கரணம் துடித்து காலத்தில் எழுவான்.

தூக்கணை சுருக்கினை நோக்கினில் பறித்தான்.
ஆக்கினைத் தலையினை சீக்கிரம் நுழைத்தான்.
தீக்கிணைத் தன்னுயிர் போக்கினில் விடுத்தான்.
வாக்கினைப் பின்னுயிர் தூக்கிடத் தொடுத்தான்.

உரமாய் உடலை நிலத்தில் புதைத்தான்
உயிரை உணர்வாய் உலகில் விதைத்தான்
சுதந்திரத் தீயை முதலாய் வளர்த்தான்
சரித்திரப் பதிவில் ஏனோ மறைந்தான்.

எரிமலைக் குமுறலை எவர்தான் தடுப்பார்
இயற்கையின் திமுறலை எவர்தான் கெடுப்பார்.
புலவர் குழந்தை புண்ணியன் வெடித்தார்
தலைமகன் தீரன் சரித்திரம் படித்தார்.

சின்ன மலையனை எண்ணுதும் பெருமையோ!
கண்ணால் சிலையாக காண்பதும் அருமையோ!
நன்னாள் தானது நட்டதும் தமிழரசோ!
பொன்னார் புரட்சியார் புகழென வாழ்கவே!

சுதந்திரக் காற்றின் சுவாச முதல்வன்---.சின்னமலை.
உதிக்கப் பாரதம் விதைத்தான் தன்னுயிர்--சின்னமலை.
ஒற்றுமை ஒன்றே உரமெனச் சொல்வான்---சின்னமலை.
பெற்ற சுதந்திரம் பேணச் சொல்வான் ---சின்னமலை.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 12 November 2014

ஒந்து கூட பேக்கு




ஒந்து பரா பேக்கு.


ஒன்னு நின்னனா நெந்து
அனுதினா பந்து
நின்னுக் கம்பளா ஒந்து
அவசரா எந்து
முந்தி பிரிச்சித்தா கெஞ்சிக்
கேளுத்தர இந்து.
ஒந்து சேராக்கா பரிதிக்
கொடுத்தாயே பந்து.!

நீமு பந்த தாரிஎல்லா
ஒக்கலு சிந்தி
ஆவு அட்டி சிதறியக்கனா
நோவுத் தாரவ்வ
ஒந்துக் கொந்து திலோதிலா
ஒந்து சேருதிலா
ஒந்து கூட அருள்தாயே
பந்தேலு நீனே!

அனுப்பர் இனக்கூடி இல்லி
ஜனப் பெருக்காடி
கணப்பர் எனக்கோடி ஒல்லி
தணப்பர் எனநோடி
ஆட்சி அதிகாரா அனுப்பர்னா
கூங்கி மாத்தாடி
மாட்சி பரபேக்கு மக்குலு
பாழ அருள்பேக்கு.

கொ.பெ.பி.அய்யா.


Tuesday, 11 November 2014

அனுப்பர் மங்களம்.

எவ்வ ஒன்னுய மங்களா.

பாவா பாவா ஒன்னெவ்வ பாவா!
ஆவு நாமு அனுப்பரு பாவா!
மேனாடு இத்து கீநாடு பந்த
நீனோடு பேக்கு ஈனாநாடு தாயே!
பாவா பாவா ஒன்னெவ்வ பாவா!
ஆவு நாமு அனுப்பரு பாவா!

மங்களா ஆடி கம்பளா கூடி
பந்திரி நின்னோட குடியினா நோடி
அட்டி தொட்டய்யா ஒன்னு நிமிய
உட்டித மக்குலு பட்டி அனுப்பரு
ஒருடி நின்னனா கூங்குத்ர ஒந்தா
பரபேக்கு தாயே கொடபேக்கு சொகத்தா.

கெறனக் காத அரணுள்ள தெவ்வு
பறனக் கொடுவ்வா பாழத்தா அனுப்பரு.
துலுக்கரு ஒஞ்ச வாதாடி பந்த
அனுப்பரு குலதெவ்வு அரசாண்ட நீனு
அக்கினி தொலது சத்தியக் காத
பத்தினி தெவ்வு மங்களா நினிய.

சிந்து கங்க யமுனா நீனே
ஒங்கு காவிரி பொன்னி நீனே!
பெண்ணை வைகை தாமிரபரணி
விந்திய இமய மேரும் நீனே!
இந்து வங்கா அரபி நீனே
முந்து தெவ்வு மங்களா நினிய!

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 8 November 2014

காதலும் காமமும்.




காதலும் காமமும்.

இரு பத்தைந்தில் தொலைத்த என்னை
அறு பத்தைந்தில் தேடுகிறேன்—அவள்
கரு விழிஓரம் சுருங்கிய வரிகள்.
எழுதும் கவிதை புரிகிறேன்.

ஒரு பத்தைந்தில் ஊறிய புதுமை
இரு பத்தைந்தில் தேறிடுமே--.முதுமை
அறு பத்தைந்திலும் ஆறாது இளமை
பல பத்தைந்திலும் வாழ்ந்திடுமே!!

பிறவிக் குருடர் புறமென்ன அறியார்
அறிவால் அறிவார் உள்ளம்—உண்மைக்
காதலும் குருடே கண்களில் அழகே
காதல் உருவம் ஒன்றே!

இரு மனந்தேர்ந்து ஒருநிலை இணைவில்
உருகச் சேர்ந்தது காதல்—அது
பெருகும் பண்பில் இருகும் அன்பில்
பருகும் இன்பம் காதல்.

காதலின் உச்சம் காமம் என்பார்.
காமம் மெச்சும் காமுகர்—அந்தக்
காதல் எல்லாம் காதல் அல்ல
கட்டுடல் மேயும் மோகமே!.

காதலுக் கென்ன வயதுண் டென்று
கந்தன் சொன்னான் பாடம்—அன்பு
மோதலுங் கூட காதல் என்றே
முடித்தான் பொய்மை வேடம்.

காதலும் காமமும் கலவை அல்ல
சேர்மம் தானது நிலையிலே—மோகக்
காமம் என்பதொரு காலம் மட்டும்
காதல் வாழ்வதோ உயிரிலே.

கொ.பெ.பி.அய்யா.

Friday, 7 November 2014

பாவம் பலி தீர்கும்.


பாவம் பழிதீர்க்கும்!

பாவிகளே! பாவிகளே! சிங்களப் பாவிகளே!
பாவம்சும்மா விடுமோடா சண்டாளப் பேய்களே!
சாபமென்றும் பொய்க்காது சாவும் வீணாகாது.
தீபம்அதும் தீயும்முன் தீவிழுங்காத் தீராது..

உயிரோடு விளையாடி வயிரிங்கு எரியுதடா!
உயிரென்ன மயிராடா!உருப்படாப் பாவிகளா!
தின்னஉயிர் எத்தனை தீரலையோ பசியுனக்கு?
இன்னுமாபலி வேண்டும் என்னதான் வெறியுனக்கு?

தமிழென்றால் இளக்காரமா தர்மத்தின் திருவுரு.
கலிகாரக் கயவனே கணக்குண்டு காத்திரு!
பதிலென்ன கூறுவாய் பலிகொண்ட உயிர்களுக்கு.
விதியென்ன ஆறுமா வினையறுக்கப் பொறுத்திரு!

வெள்ளையர்க்கே கொள்ளிவைத்த வீரத்தமிழ் புதல்வருக்கு
புள்ளியொரு சல்லிநீ சொல்லுவாயோ போடுந்தூக்கு?
எண்ணுதற்கும் தூரமில்லை ஏவிடவும் கணையுனக்கு
பின்னெதற்காம் யோசனை உன்னெதிர்க்கும் உயிரங்கிருக்கு.

கோடிகோடி உயிர்களை கொண்டமகா சக்தியை
கூடிக்கூடி ஒன்றென குவிந்தமாக் காளியை.
தேடித்தேடி அழித்தாலும் கூடிக்கூடி தழைக்குமே!
ஓடிஓடி ஒளியவும் உனக்குஇடம் ஏதடா?

சூலம்தேடி வருகுதோ காலம்கூலி தருதற்கே!
நாளும்கூடி தீர்ப்பினை வேளையொன்றில் எழுதுமே!
பாவம்பழி தீர்க்குமே சாபம்பலி ஏற்குமே!
தீபஒளி அதுவரை தவமேற்று முடிக்குமே!

கொ.பெ.பி.அய்யா.


Thursday, 6 November 2014

தாதா லொள்ளு


எப்பவும் ஆம்பளநான்.!(நாட்டுப்புறப்பாடல்}

தாத்தாதாத்தா போயிரிச்சா டண்டணக்கா போட்டிரிச்சா
ஆத்தாவுக்கு சேதிபோச்சா ஆளனுப்பி விட்டாச்சா.
ஊரெல்லாம் கூடியாச்சா உறவுகூவி அழுதாச்சா
பாடையேறி படுத்தா பரலோகம் அடுத்தா?
வாடைநாறும் முன்னே வாரிப்போட வாங்க.

வாடிவாடி அன்னக்கிளி ஓடியென்ன தேடிவந்த!
கூடிக்கூடி பேசலாமா ஓடிஓடி ஆடலாமா?
பாட்டியில்லா நேரம்பாத்து லூட்டிபண்ண வந்தாயடி.
தூக்கிஎன்ன நிறுத்து தோதுபாத்து பொருத்து.
வாக்குப்படி நானும் வயலெழுதித் தாரேன்.

காலயிப்படி விரிச்சிக்கிட்டு கோலஅப்படி கிடத்திக்கிட்டு
வாசப்படி அடச்சிக்கிட்டு வழிவிடாம மறிச்சிக்கிட்டு
பெணம்போலக் கெடந்தீருன்னா மனம்போல எண்ணாதோ?
வாயுங்கிழிஞ்சி போச்சு பாயுங்கிழிஞ்சி போச்சு
சாயுங்காலம் ஆச்சு மேயுங்காலம் போச்சு.

சின்னக்கிளி சிறுக்கிநீ சிக்குனுதான் இருக்குரீயே!
என்னப்பிடி எழுப்பிநீ இக்குனுயேன் சிரிக்கிரீயே!
சின்னவீடு நீயானா என்னவேணும் நீகேளு
கன்னக்குழி கெரக்கம் கரைக்கும்ஒரு மயக்கம்!
உன்னத்தொட நெனப்பும் உருகுதடி எனக்கும்.

வயசான பெரியவரே வாய்க்கொழுப்பு சின்னவரே!
இளசான வயசுப்பொண்ண நைசுப்பண்ண பாக்குரீரே!
பாட்டிஎங்க போய்த்தொலஞ்சா பழையமோரு தீந்த்துருச்சா?
எழும்பி நிக்கிமாவிறப்பு எதுக்குஇந்த மொறப்பு.
அழைக்கு அங்ககாடு அய்யாபோயி படுங்க!

வயசென்ன ஆயிப்போச்சு பழசென்ன ஆறிப்போச்சு?
எனக்கென்ன தேஞ்சிபோச்சு இருப்பென்ன மாறிப்போச்சு?
இப்பக்கூட ஆம்பளதான் எப்பவும்நான் மாப்பளதான்.
பழக்கமெனக்கு இருக்கு பாட்டிசொன்ன கணக்கு.
பழுத்தபழம் இனிக்கும் பழசுதாண்டி ருசிக்கும்.

கொ.பெ.பி.அய்யா.

விழுவது எழுவதற்கே.


துணிக எழுக!

விழுந்தாயா எழுந்தாயா விடைக்கிங்கு நேரமில்லை.
அழுதாயா சிரித்தாயா அதற்கிங்கு அவசியமில்லை.
விழுவதற்குள் எழுந்திட மறந்துநீ கிடந்தாலுன்மேல்
உழுதிங்கு பயிர்செய்து அறுவடை முடித்திருப்பார்.

விழுவதெதற்கு எழுவததற்கு அழுவதற்கல்ல எழுகவே!
அழுவதெதற்கு சிரிப்பததற்கு முடிவதற்கல்ல துணிகவே
முடிப்பதெதற்கு தொடர்வததற்கு மறப்பதற்கல்ல வளர்கவே!
மறப்பதெதற்கு நினைப்பததற்கு துறப்பதற்கல்ல மலர்கவே!

தவறுமொன்று பழகும்நன்று திருந்துமென்று நிச்சயம்.!
எவருமிங்கு உலகம்கண்டு பிறக்கவில்லை சத்தியம்.
பதறுமொன்று சிதறுமென்று இதயம்கொண்டு துணியனும்.
எதையும்வென்று எடுப்பேனென்று இறங்கிச்செய்யத் தெளியனும்.

அவசரஉலகம் அவரவ்ர்பணிக்கு அவசியமிருக்கு உணர்கவே!
சுவராய்சும்மா இருந்தால்சுமையே சொரனைமுறுக்கு முனைகவே!.
காலமெவர்க்கும் கைகட்டியில்லை நாளுமதுவும் வேகம்பெருக்கும். 
சூலம்கணித்தும் சுழல்வதில்லை வேலையொன்றே விதியெனநெருக்கும்.

மனிதம்கெட்டு புனிதம்பட்டு தர்மமிங்கே சாகுதே!
இனியும்நட்டு இளமைவிட்டு கர்மமென்ன  ஆவதோ!
வினையேவிதியே வேறேகதியோ விரைவெனப்புயலே  செல்கவே!
துணிகவெழுக தொடர்கஇணைக முனைகமுடிக்க வெல்கவே!

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 4 November 2014

பம்பர இரகசியம்.


எது அறிவு?

எல்லாமே பம்பரமே வல்லானால் ஆடிடுமே!
சொல்லாமல் நின்றதுமே மல்லாந்து சாய்ந்திடுமே!
எந்நாளோ அந்நாளே எவறிவார் இரகசியமே!
சொன்னாலோ என்னாகும் அவனறிவான் அவசியமே!

சுற்றி விட்டால் பூமியில் சுழன்றாடுமே!
தட்டி விட்டால் சாமியில் கழன்றோடுமே!
பற்றவொரு இடமுண்டு பரமன் அடியே!
பற்றவேறு பொருளென்ன நிலமண் மடியே!.

ஆட்டி விட்ட ஆண்டவனும் பார்த்திருக்கிறான்.
ஆடும் போது மாற்றும்விசை சேர்த்திருக்கிறான்.
ஆளும் விதம் சுதந்திரமும் கொடுத்திருக்கிறான்
ஆசை மனம் அடக்கிடத்தான் அறிவிருக்கிறான்.

ஆடும் வரை வாழும்முறை ஞானமென்கிறான்.
தேடும் வழி கூடுமிடம் மோனமென்கிறான்.
இறை எனும் நம்பிக்கை வேதமென்கிறான்.
திரை இடும் தன்னிச்சை பேதமென்கிறான்.

மூடமென அறிவதெல்லாம் தொலைந்து சாகட்டும்.
வேடமென புரிவதெல்லாம் கலைந்து வேகட்டும்.
பாடமென படித்ததெல்லாம் பழகி வாழட்டும்.
பாவமென பழித்ததெல்லாம் அழுகி வீழட்டும்.

பழியென நெஞ்சறிந்தால் பாடம் தப்பாது.
பயமென ஒன்றிருந்தால் பாவம் செய்யாது.
பக்தியென அதுஇருந்தால் பண்பில் தப்பேது?
யுக்தியென தெளிந்திருந்தால் புத்தி பொய்யாது.

சட்டம்  ஒழுங்கு காப்பாற்றுமா புறக்காவலும்?
திட்டம் விளங்கு தீர்வாற்றும் அகக்காவலே
புத்திமுத்திப் போனதாலே அச்சம் விட்டதோ!
பக்திவிட்டுக் கெட்டதால  ஒச்சம் பட்டதோ!

இயற்கைதான் மூலமென போற்றி வாழுவோம்.
செயற்கையின் சேதம்தனை மாற்றித் தேறுவோம்..
இயற்கைதான் இறையெனவும் மார்க்கம் பழகுவோம்.
செயற்கையை வரமெனவும் ஏற்று வணங்குவோம்.

பகுத்தறிந்து புதுமைகளை கண்டு வாருங்கள்.
தொகுத்துணர்ந்து புதுமைகளை கொண்டு சேருங்கள்.
வகுத்துவைத்த பழமைகளை வாழ விடுங்கள்.
புகுந்தநல்ல வழமைகளை ஆள விடுங்கள்.

எதுஅறிவு எதுதெளிவு என்றே தேடுங்கள்.
எதுபுரிவு எதுதெரிவு நன்றே கூடுங்கள்.
மலர்ச்சியென்றும் மயங்கியொன்றில் மாறும் முயற்சி
வளர்ச்சியென்றும் வழங்கிநன்றும் வாழும் பயிற்சி.

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 2 November 2014

உயிருண்ணும் காதல்.



காதல் போர்.

இருக்கும் இடம் தேடி பெண்ணே
பறக்கும் மனம் பாடி உன்னை—நான்
இறந்தும் அலையும் முன்னே--ஒருமுறை
பறந்து வருக கண்ணே!

பிரிந்த உயிரே மறந்தும் பறந்தாயோ?
சரிந்த உடலாய் கிடந்தும் இறந்தேனோ?
உணர்வே நீயே உணர மறந்தாயோ?
கனவே ஏனோ பிணத்தில் வளர்ந்தாயோ??

உண்ணும் நினைவே தின்னும் தீர்ப்பாயோ?
எண்ணும் கனவே கொன்னும் தூர்ப்பாயோ?
விண்ணும் மண்ணும் நிறைந்த காதலோ!
உன்னுள் என்னை தொலைத்த சாதலோ!

காதல் போரிலுன் கண்ணம்பு பட்டேனோ!
மாதுன் மார்பிலென் எண்ணம்பு விட்டேனோ!
என்னம்பு பட்டநீ என்னதான் ஆனாயோ?
உன்னம்பு பட்டுநான் உன்னுள் வீழ்ந்தேனோ!

கொ.பெ.பி.அய்யா.