காதல் செய்வீர்!
காவியங்கள் போற்றும் நல்ல
காதலை வாழ்த்தி
வாழ்வோம்
கோவிற் சிலைகள்
சொல்லும்
காமமும்
கற்று ஆள்வோம்.
ஓவியங்கள் மீட்டும் மென்மை
ஓசையிலா
இராகம் காமம்.
ஏவாளும் ஆதாம் தொண்மை
ஏற்றிக்கண்ட காதல் வாழ்க!
ஆவதெலாம் காதல் மூலம்.
ஆதாரம் தானது காலம்.
தேவகணம் வேதம் போலும்
தேவையோதும் வாழும் சீலம்.
ஆன்மாவில் ஊறுங் காதல்
தான்ஞாலில் மீளும் ஊழில்.
காதல் செய்வீர்!நித்தியம்.
ஆதல் உய்வீர் சத்தியம்.
கொ.பெ.பி.அய்யா...
No comments:
Post a Comment