சிட்டுக்குப்பெண் பிறந்தாள்,
சிட்டுக்குப்பெண் பிறந்தாள்,
சீமைக்கெல்லாம் சேதிவிட்டாள்.
பட்டுவிட்ட இனம் வாழ
பார்வதியே பிறந்தாளென்றாள்.
பேரும் வைக்க வேண்டுமென்றாள்
ஊருக்கெல்லாம் அழைப்பு வைத்தாள்.
பெண்ணரசி வீர்மங்கை
பெயர் சூட்ட வேண்டுமென்றாள்.
வாழைக்கும் சொன்னாளே!
வரவேற்பு செய்வதற்கு.
மாவிலையும் தேடினாள்.
தோரணங்கள் கட்டுதற்கு.
மயிலோட நாட்டியம்
மட்டுமல்ல கேளுங்கள்
குயிலோட பாட்டுந்தான்
கட்டாயம் உண்டென்றாள்.
அலங்காரம் செய்வதற்கு
அன்னமே தானென்றாள்.
கோலமிட்ட ஆடைநெய்து
கொண்டு வரும் வானமென்றாள்..
கண்ணுக்கு மையெழுத
தண்ணிரவு வருமென்றாள்.
வானவில்லும் கேட்டு வந்தாள்.
பூணு வளை பூட்டுமென்றாள்.
சூரியனும் வருகின்றான்
சுட்டியொன்னு சூட்டியிட.
சந்திரனும் வந்திடுவான்-
சந்தணப்பொட்டு என்றாள்.
மின்னலும் மின்னுகிறான்.
பொன்சரடும் பண்ணுகிறான்..
மேகமும் பந்தலிட்டான்
முத்துமணி கோர்ப்பனென்றாள்.
பழங்கொண்டு கிளியும் வரும்.
பால்கொண்டு பசுக்கள் தரும்..
தென்னை இளநீரும் மொண்டும்
முன்னருந்தும் பானமென்றாள்.
முன்னருந்தும் பானமென்றாள்.
இடிமுழங்கி மேளம் தட்டும்
வெடி.சிதறி வானம் கொட்டும்.
காற்றிசைக்கும் நாதசுரம்.
ஆனை வந்தும் பெண்சுமக்கும்.
அவரவர்க்கு உகந்தபடி
அனைவருமே வந்திடுவர்.
அன்புடன் அழைக்கின்றாள்
அவசியமாய் வந்திடுவீர்.
பெண்ணாகப் பிறந்தவளை
பெருமை செய்யவேண்டுகிறேன்.
கண்ணாகப் போற்றுங்கள்
காலத்தின் தொடர்சசியவள்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment