பறக்கும் படகு
கடற் கரைக்குப் போகலாமா சோடியா!
காற்று வாங்கி வரலாமா சாலியா!
கரை மணலில் ஆடலாமா பாடியும்
கடலை போட்டுத் திண்ணலாமா கூடியும்!
கரை தழுவும் அலையையும் கேட்கலாமா!.
காலைக் கொஞ்சி வருடுவதும் பார்க்கலாமா!
கூடிவிளை யாடத்தேடி அழைக்குதோ!.
சோடிசேரக் காலைவாரி இழுக்குதோ!.
கடலோடு உடனாடக் குளிக்க லாமா!.
உடலோடு அலையாட களிக்க லாமா!
காற்றோடு உடலாட நின்றாடவோ!
பாட்டோடு படகாட கொண்டாடவோ!
மீன்களுந்தான் துள்ளி யுன்னை பார்க்குதோ!
கண்களதன் சாதி யென்றும் எண்ணுதோ!
பார்த்துக்கோடி முந்தானையை அள்ளுது
காற்றுமுன்னை தொட்டுஞ்சதி பண்ணுது.
ஊஞ்சலாக மேலுங்கீழும் ஆட்டி மகிழுது..
சாஞ்சுக் கோடி தோளுனக்குக் காத்திருக்குது.
மயக்கமோ மாதுனக்கு மடியிருக்குது.
மறந்ததடி உலகமே பறந்துலாவுது.
கொ.பெ.பி.அய்யா..
No comments:
Post a Comment