ஈழத்துப்பரணி!
ஈழம் கொண்டோம்
ஈழம் கொண்டோம்
என்றே பரணி பாடுவோம்
துள்ளு துள்ளு!
சத்தியமே வென்றதென்று
முத்தமிழே கண்டதென்று
இத்தரையில் உண்மைபாடு
பள்ளு பள்ளு.
ஈழமெம் நாடுதான்
லங்காஎம் மோடுதான்.
ஆளுந்தமி ழாட்சிதான்
கண்டோம் கண்டோம்.
திசையெட்டும் எட்டவே
விசைச்சங்கம் முட்டவே
வசைஅற்ற வெற்றியே
கொண்டோம் கொண்டோம்.
சத்தியமும் ஆறவில்லை
லட்சியமும் சோரவில்லை
கத்தியெம்மை நோக்குமெல்லை
அஞ்சோம் அஞ்சோம்.
புத்தனாக வேடமில்லை
பொய்யனாக மோசமில்லை
பெற்றதெம் மண்ணைவெல்ல
துஞ்சோம் துஞ்சோம்.
போர்முடித்தோம் ஆடுகிறோம்
வேர்பிடித்தோம் பாடுகிறோம்.
ஊரெங்க ளுரிமைக்கு
கெஞ்சோம் கெஞ்சோம்.
அடிமைசெய் வஞ்சகனை
அசல்தமிழ் வென்றதனை
அறமென்றே முரசேநீ
கொட்டு கொட்டு!
கொ.பெ.பி.அய்யா.
ஈழம் கொண்டோம்
ஈழம் கொண்டோம்
என்றே பரணி பாடுவோம்
துள்ளு துள்ளு!
சத்தியமே வென்றதென்று
முத்தமிழே கண்டதென்று
இத்தரையில் உண்மைபாடு
பள்ளு பள்ளு.
ஈழமெம் நாடுதான்
லங்காஎம் மோடுதான்.
ஆளுந்தமி ழாட்சிதான்
கண்டோம் கண்டோம்.
திசையெட்டும் எட்டவே
விசைச்சங்கம் முட்டவே
வசைஅற்ற வெற்றியே
கொண்டோம் கொண்டோம்.
சத்தியமும் ஆறவில்லை
லட்சியமும் சோரவில்லை
கத்தியெம்மை நோக்குமெல்லை
அஞ்சோம் அஞ்சோம்.
புத்தனாக வேடமில்லை
பொய்யனாக மோசமில்லை
பெற்றதெம் மண்ணைவெல்ல
துஞ்சோம் துஞ்சோம்.
போர்முடித்தோம் ஆடுகிறோம்
வேர்பிடித்தோம் பாடுகிறோம்.
ஊரெங்க ளுரிமைக்கு
கெஞ்சோம் கெஞ்சோம்.
அடிமைசெய் வஞ்சகனை
அசல்தமிழ் வென்றதனை
அறமென்றே முரசேநீ
கொட்டு கொட்டு!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment