தமிழாட்சி!
கும்மிப்பாட்டு.
கும்மியடி பெண்ணே கும்மியடி -கூடிக்
குனிந்து நிமிர்ந்து கும்மியடி.
அம்மா சக்தி பேரைச் சொல்லி-கைகள்
அடிச்சிப்ப் பாடிக் கும்மியடி
அடைந்து கிடந்த பெண்ணல்ல--அந்த
அடிமைப் பட்ட மண்ணல்ல.
பாரதிப் புலவன் புதுமைதான்-புரட்சி
பழகி வந்தோம் கும்மியடி.
அம்மி அரைத்த பழமையோ--சிறை
பம்மிக் கிடந்த பதுமையோ!
பாவலராம் பாரதிதாசன் --எழுச்சி
பயின்று வந்தோம் கும்மியடி.
ஊழை எண்ணிய கோழையா-அடுப்பு
வேலை பண்ணிய பேதையா?
பெரியார் மீட்ட விடுதலை--பெண்
உரிமை பெற்றோம் கும்மியடி.
ஆகாயத்தில் பறக்கிறோம்-கடல்
அடிக்குச் சென்றும் ஆய்கிறோம்
ஆணுக்கு நிகர் சிறக்கிறோம்--சமம்
அடைந்தோம் என்றும் கும்மியடி.
மடமையந்த பாவையன்று--வன்
கொடுமைப் பட்ட பூவையன்று.
வாளெடுத்தும் சுழற்றுவோம்--தீமை
வேறறுப்போம் கும்மியடி.
ஈழம் சென்றும் வென்றெடுப்போம்--தமிழ்
வாழும் என்றும் ஒன்றிருப்போம்.
ஆளும் தமிழ் ஆட்சி என்போம்--அந்த
நாளும் இன்றே கும்மியடி.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment