Wednesday, 25 December 2013

நட்பே காதல்.

நட்பே காதல்!

துலங்குவது நட்பானால்
தொடர்வது காதலாகும்.
நட்புக்கும் காதலுக்கும்
நடப்பினில் பாலில்லை.
பொதுப்பாலே நேராகும்!

படுவது கண்களில்
படர்வது நெஞ்சினில்
நடுவது நட்பானால்
தொடரும் ஆன்மாவில்
கனிவது காதலாகும்.

சிந்திக்கும் தேடலில்
சந்திக்கும் வேளையில்
சந்தர்ப்பம் கூடலில்
முந்துவது நட்பானால்
பிந்துவது காதலாகும்.

ஆன்மாவில் உதித்தது
ஆயுளில் விதித்தது
ஆளுமை பதித்தது
பேணியது நட்பானால்
நாணியது காதலாகும்.

உயிரினில் ஊறியது
பயில்வினில் தேறியது
இயல்பினில் ஆறியது
திருந்தியது நட்பானால்
பொருந்தியது காதலாகும்
.
உதயங்களின் எண்ணமும்
இதயங்களின் சங்கமம்.
இரண்டது ஒன்றாகும்.
தோன்றியது நட்பானால்
ஊன்றியது காதலாகும்.
.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment