உள்ளம் என்பது என்ன?
தேடுகிறேன் தேடுகிறேன்
தெய்வத்தையே தேடுகிறேன்.
பாடுகிறேன் பாடுகிறேன்
பாதை தேடிப் பாடுகிறேன்.
கண்ணாடி காணாதான்
காலமதில் மனிதன்தான்
தண்ணீரில் தன்னைதான்
தான்கண்டு தொழுதிட்டான்.
எங்கெங்கோ தேடுகிறேன்.
எனக்குள் மறந்தேனே!
உள்ளத்தில் வாழ்பவனை
உணரும் வழி தவறினேன்.
உணர்ந்திடும் உபாயமோ!
உள்நினைந்து தேடுவதோ!
உள்ளுள்ள உள் வருவான்..
உள்ளம் அவன் வாசமன்றோ!
உயிரென்றால் ஆன்மாவோ!
உள்ளிருக்கும் ஆண்டவனோ!
உணராமல் எங்கெங்கோ!
ஊரெல்லாம் தேடுவதோ!
படைப்பெல்லாம் பகவானோ!
பயனெல்லாம் பிறவியோ!
அடைவதும் அவனடியோ!
அயணமதே அறவழியோ!
சுத்த சன் மார்க்கமதில்
நித்தியம் ஆற்றுவதில்
சுத்தமாம் சித்தம் ஒன்றில்
சத்தியம் மட்டும் நன்றில்.
முன்னை ஒன்றை தூலமிட்டேன்.
என்னைக் கொண்டு தூரமிட்டேன்.
உள்வளரும் சாந்திக்குள்
மெல்லவே நான் தொலைந்தேன்.
எந்த இடம் தொலைந்தேனோ!
அந்த இடம் விளைந்தேனே!
உள்ளமெனும் கோவிலுக்குள்
வெள்ளையொளி விளக்கமானேன்.
ஜோதியாய் நிறைபவனே!
நீதியாய் உறைகிறான்.
ஆதியாய் மலர்ந்தவனில்
நாதியாய் கலக்கிறான்..
கொ.பெ.பி.அய்யா.
தேடுகிறேன் தேடுகிறேன்
தெய்வத்தையே தேடுகிறேன்.
பாடுகிறேன் பாடுகிறேன்
பாதை தேடிப் பாடுகிறேன்.
கண்ணாடி காணாதான்
காலமதில் மனிதன்தான்
தண்ணீரில் தன்னைதான்
தான்கண்டு தொழுதிட்டான்.
எங்கெங்கோ தேடுகிறேன்.
எனக்குள் மறந்தேனே!
உள்ளத்தில் வாழ்பவனை
உணரும் வழி தவறினேன்.
உணர்ந்திடும் உபாயமோ!
உள்நினைந்து தேடுவதோ!
உள்ளுள்ள உள் வருவான்..
உள்ளம் அவன் வாசமன்றோ!
உயிரென்றால் ஆன்மாவோ!
உள்ளிருக்கும் ஆண்டவனோ!
உணராமல் எங்கெங்கோ!
ஊரெல்லாம் தேடுவதோ!
படைப்பெல்லாம் பகவானோ!
பயனெல்லாம் பிறவியோ!
அடைவதும் அவனடியோ!
அயணமதே அறவழியோ!
சுத்த சன் மார்க்கமதில்
நித்தியம் ஆற்றுவதில்
சுத்தமாம் சித்தம் ஒன்றில்
சத்தியம் மட்டும் நன்றில்.
முன்னை ஒன்றை தூலமிட்டேன்.
என்னைக் கொண்டு தூரமிட்டேன்.
உள்வளரும் சாந்திக்குள்
மெல்லவே நான் தொலைந்தேன்.
எந்த இடம் தொலைந்தேனோ!
அந்த இடம் விளைந்தேனே!
உள்ளமெனும் கோவிலுக்குள்
வெள்ளையொளி விளக்கமானேன்.
ஜோதியாய் நிறைபவனே!
நீதியாய் உறைகிறான்.
ஆதியாய் மலர்ந்தவனில்
நாதியாய் கலக்கிறான்..
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment