பயமோ
பக்தியோ
எதையோ தொலைத்தோம்!
இறையைத் தேடுகிறோம்!
பயத்தில் அழைக்கிறோம்.
பகவான் சிரிக்கிறான்.
பகவான் சிரிக்கிறான்.
இருக்கிறதோ!இல்லையோ!
இலக்கென்ன முக்தியோ!
தருவனோ! இல்லையோ!
எழும் பயம் பக்தியோ!
எழும் பயம் பக்தியோ!
இல்லை யென்றியம்பலும்
இருந்தால்
நலமென்பதும்
உள்ளே ஓளிந்திருக்கும்
பயமோ!பக்தியோ!
பயமோ!பக்தியோ!
முடிவில்லாத வாதங்கள்!
முயல்வதென்ன தீர்வுகள்.
முயல்வதென்ன தீர்வுகள்.
படிப்பதெல்லாம் வேதங்கள்.
இடிப்பதெல்லாம் நீதிகள்.
எதுதான் தேடலோ!
என்னதான் ஞானமோ!
தேடாமல் கூடாது.
தேடினால் தோற்காது.
தேடாமல் கூடாது.
தேடினால் தோற்காது.
அனைத்தும்
கடந்துள்ள விந்தை
யாருக்குத்தான்
கட்டடங்கும்!
அது
இயற்கையின் இரகசியம்!
அதனால்
தேடல் தொடர்கிறது.
வாதங்கள்
வளர்வதல்ல தேடல்!
ஞானங்கள்
வளர்ப்பதே தேடல்!
சத்திய சோதனை இடர்கள்
பற்றினால் சாதனை தொடர்கள்.
சத்திய சோதனை இடர்கள்
பற்றினால் சாதனை தொடர்கள்.
விந்தையை
வியப்பதும்
சிந்தையில்
உணர்வதும்
இயற்கையை அறிவதும்
இயற்கையை அறிவதும்
பயமோ!பக்தியோ தெளியும்!
எதற்கு
முடிவில்லையோ
அதற்குத்
தீர்வில்லை!
தேடலும் தீராதது.
தெய்வ
நிலை ஆறாதது.!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment