Wednesday, 30 July 2014

நானே கேள்வி நானே பதில்.





நானே கேள்வி நானே பதில்.

பிரிக்க முடியாதது?
குடும்பமும் அரசியலும்.

பிரிக்கக் கூடியது?
அரசியலும் பொதுநலமும்.

பிரிந்தே இருப்பது?
உண்மையும் அரசியலும்.

சேர்ந்தே இருப்பது?
பொய்யும் அரசியலும்.

அரசியல் வேசம்?
ஜனநாயகம்.

அரசியல் நிசம்.
வாரிசு.

அரசியல் என்ன செய்யும்?
ஏமாற்றும்

ஏமாறுவது?
தொண்டன்.

அரசியலின் பின்னணி?
வர்த்தகம்.

உண்மையின் அடையாளம்?
அப்பாவித்தனம்.

தன் மக்களுக்காக?
அரசியல்.

நாட்டு மக்களுக்காக?
மேடைப்பேச்சு.

சந்தர்ப்பவாத அரசியல்?
தந்திரம்.

நிலைமாறா அரசியல்?
ஏக்கம்.

சுயநல அரசியல்?
உண்மை.

பொதுவாழ்வு அரசியல்?
பொய்.

அண்ணாவால் பிழைப்பது?
திராவிடக் கட்சிகள்.


அண்ணாவில் வாழ்வது?
தமிழ்.

பொய்யின் அடையாளம்?
கட்சிகள்.

உண்மையின் அடையாளம்?
தலைவர்களின் படங்கள்.

வீடென்றால்?
பாசம்.

நாடென்றால்?
வேசம்..

அஞ்சும் நெஞ்சம்.
உரிமை.

அஞ்சா நெஞ்சம்?
ஊழல்.
வெட்கம் உணராதது?
அரசியல்.

ஊழல் உதயம்?
அரசியல்.

பொய்யின் அடையாளம்?
அரசியல்.

வாக்குரிமை?
மோசடி.

நாக்குரிமை?
புலம்பல்.

எழுத்துரிமை?
கிறுக்கல்.

பாவம்?
மக்கள்.

சாபம்?
சுதந்திரம்.

கொ.பெ.பி.அய்யா.


வாழ்க்கை இரகசியம்.



ஒரு வழிப்பயணம்!

ஒருவொரு நொடியும் உன்னோட வயது
ஒருவழிப் பயணம் ஓடிக்கொண் டிருக்கு.
கடந்து தொலையும் காலம் வராது.
தொடர்ந்து முயன்றால் தோல்வி தராது.

வந்தது தெரிந்தது போவது எங்கே
வாழ்க்கையின் இரகசியம் புரியலையோ!
வாழ்ந்தோமென்ற அடையாளம் தானே
வரவா செலவா விளங்கலையோ!

காலம் உந்தன் கணக்கை எழுதுது.
நாளும் அந்த வழக்குத் தொடருது.
செலவும் வரவும் பாவ புண்ணியம்
உலகம் கூறும் முடிவும் நிச்சயம்.

இளமை இருக்கு நாற்பது வரைக்கும்.
வளமை பெருக்கு வாழ்வது நிறைக்கும்.
அப்புறம் முதுமை அதுஉனைக் குறைக்கும்.
செப்புற உறவும் புறமனை ஒதுக்கும்

வீழ்ந்தே கிடந்தால் விறகாய் சாகும்.
வீழ்ந்து எழுந்தால் அனுபமாகும்.
வாழ்ந்தவர் வாழ்க்கை படிப்பினையாகும்
வாழ்ந்து பார்த்தால் சரித்திரமாகும்.

உண்ணவும் உறங்கவும் பிறக்கவுமில்லை.
மண்ணும் சுமப்பதும் புதைக்கவுமில்லை.
எண்ணமும் செயலும் இறக்கவுமில்லை.
என்பதும் மறந்தால் உலகமுமில்லை..

கொலையும் கொள்ளையும் வெற்றியல்ல.
விலையின்றி சாபம் முற்றுவதல்ல.
உனக்கென ஒருதுளிக் கண்நீர்வீழ்ந்தால்
பிணமென உன்னை இகழாது உலகம்.

உழைப்பது ஒன்றே உயர்வின் சின்னம்.
பிழையற்ற வாழ்வே பெருமையின் வண்ணம்.
கனவுகள் விதித்து தன்னை நினைத்து
உணர்வுகள் மதித்து உன்னை உயர்த்து.

செவ்வழி வாழும் முறையுருவாக்கு!.
ஒவ்வொரு நாளும் வரலாறாக்கு!.
அவ்வழி உணர்ந்து பின்னவர் வாழ!
எவ்விதம் அடையாளம் உனைநீ ஆக்கு!

அண்ணல் செம்மல்  அறவழி தேர்க!
அன்பில் என்றும் அவர்வழி வாழ்க!
பிறப்பது எல்லாம் இறப்பதற் கல்ல
சிறப்பது வாழ்க செயல்களில் நின்று.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 29 July 2014

அக்ஷகு அழகு.



அழகு! அழகு!

அழகு அழகு ஆசை அழகு
ஆசை அதுவும் அருமையானால்.
நியாயம் என்றே எதுவானாலும்
நினைபதெல்லாம் அழகேயாகும்..

அழகு அழகு பொய்யும் அழகு.
பழகும் பொய்யும் நன்மையானால்.
நிகழும் அமைதி நிலைக்குமானால்
நிசமும் பொய்யும் சமமேயாகும்.

அழகு அழகு உண்மை அழகு
அதனால் உன்முகம் ஒளிருமென்பதால்.
இயற்கை அதனில் வாழுமென்பதால்
இறையே உண்மை என்பதேயாகும்.

அழகு அழகு கோபம் அழகு.
முளைக்கும் கோபம் உண்மையானால்.
தழைக்கும் அன்பில் ஆர்வமானால்
தீவிரம் கூட தர்மம் ஆகும்.

அழகு அழகு வேகம் அழகு.
அவசியம் அவசரம் பயனேயானால்.
உயிரொன்று காக்க உதவுமானால்.
உரியநேரம் வேகம் ஆகும்.

அழகு அழகு தாமதம் அழகு.
ஆழ்ந்த அறிவும் தெளியுமானால்.
பின்விளைவதுவும் முன்னறிவானால்
பேணும் தாமதம் பொன்னறிவாகும்.

அழகு அழகு அமைதி அழகு.
அறிவது ஊறும் ஆறதுவானால்.
விலகும் வேண்டா தீவினையதனால்
நிலவும் அமைதி நெறிமுறையாகும்.

அழகு அழகு சமூகம் அழகு.
பழகும் உறவு பண்புள்ளதானால்.
வரவும் செலவும் வகை சரியானால்.
வாய்க்கும் சமூகம் வாய்மையாகும்.

அழகு அழகு அரசியல் அழகு.
அறமென மேவும் அரசியலானால்.
சுயநலம் பொய்யும் சூத்திரமானால்
பொதுநல அரசியல் வர்த்தகமாகும்.

அழகு அழகு நாகரிகம் அழகு.
பழகிய அவரவர் ஒழுக்கமானால்.
அவரவர் நடைமுறை அதுவேயானால்
பழக்கம் நாகரிகப் பண்பேயாகும்.

அழகு அழகு குடும்பம் அழகு.
அமைந்த இடங்கள் ஊரும் நாடானால்
பழகப் பழக உரிமை அதுவானால்
பரவும் குடும்பம் உறவாகும். .

அழகு அழகு மொழியும் அழகு.
அவரவர் கூட்டம் ஒலிமுறையானால்.
தகவல் சாதனம் என்பதேயானால்
தாராளம் கற்க மொழிகளாகும்.

அழகு அழகு மதமும் அழகு.
அறிவின் நெறியாய் அதுவாகுமானால்.
சத்தியம் ஒன்றே உத்தமமானால்
சந்நிதானம் மனமே மதமாகும்.

அழகு அழகு மனிதம் அழகு.
ஆறறிவுடன் அவனாய் வாழ்ந்தால்.
ஆதியும் அந்தமும் அவனறிவானால்
நீதியில் மனிதம் நிறைவதாகும்.

அழகு அழகு கவிதை அழகு.
ஆக்கம் சொல்லும் அழகு மொழியால்.
உள்ளம் பதியும் தன்மையதனால்
வெல்லும் கவிதை அழகாகும்.

கொ.பெ.பி.அய்யா.




Monday, 28 July 2014

நான் படித்த பள்ளி.

எனது பள்ளி.
 
றிடிறிஏ உயர்தரப்பள்ளி
தேர்ந்து விளங்கும் எங்கள் பள்ளி
மேல் நிலையாக உயர்ந்திட வேண்டும்.
மேதினி சிறந்து விளங்கிட வேண்டும்.

கப்பல் ஒட்டிய சிதம்பரம் பிள்ளை
ஓட்டப்பிடாரம் வட்டத்தின் உள்ளே
பாஞ்சாலம் குறிச்சி பக்கம்தானே
பரமக் கிராமம் கொல்லம்பரம்பு .

கிறித்து ஏசு கிருபையாலே
சிறுத்த ஊரும் சீர் வாழவே
நிறுத்திய பள்ளி றிடிறிஏ
விருத்தியாக வாழ்க வாழ்கவே

இன்றும்கூட அன்றும்போலே
இருக்குதுதானே கண்டதுபோலே
கன்றது கண்ட தாயது போலே
கண்டதும் கரையுது என்மனம்போலே 1
 
கொ.பெ.பி.அய்யா.
TDTA Middle Scho

ஆசை ஆசை.



ஆசை!ஆசை!

ஆசை! ஆசை!
இன்னும் வாழத்தான் ஆசை! ஆசை!
மண்ணும் போலத்தான் ஆசை!ஆசை!
எழுதிப் பிறக்கத்தான் ஆசை! ஆசை!
இயம்பிப் பறக்கதான் ஆசை! ஆசை!

ஆசை! ஆசை!
இலக்கியம் செய்யத்தான் ஆசை! ஆசை!
இறப்பை வெல்லத்தான் ஆசை! ஆசை!
எழுத்தில் இருக்கத்தான் ஆசை! ஆசை!
கருத்தில் பரவத்தான் ஆசை! ஆசை!

ஆசை! ஆசை!
உலகம் சுருங்கத்தான் ஆசை! ஆசை!
கலகம் ஒடுங்கத்தான் ஆசை! ஆசை!
அமைதி நிலைக்கத்தான் ஆசை! ஆசை!
அகிலம் தொடரத்தான் ஆசை! ஆசை!

ஆசை! ஆசை!
எழுத்தைத் துதிக்கத்தான் ஆசை! ஆசை!
எழுத்தைப் பதிக்கத்தான் ஆசை! ஆசை!
தமிழைப் படிக்கதான் ஆசை! ஆசை!
அமிழ்தைக் குடிக்கத்தான் ஆசை! ஆசை!

ஆசை! ஆசை!
இறக்குமுன்னே எந்நூல் காணத்தான் ஆசை! ஆசை!
பறக்குமுன்னே என்பாடல் கேட்கத்தான்  ஆசை! ஆசை!
எழுத்துநட்பே எனக்காக வேண்டத்தான் ஆசை! ஆசை!
வழுத்திஅன்பே வணக்கம் கூறத்தான் ஆசை! ஆசை!

ஆசை! ஆசை!
தாயின்மடியில் தலைசாய்க்கத்தான் ஆசை! ஆசை!
தாயாய்மனைவி எனைவாழ்த்தத்தான் ஆசை! ஆசை!
உலகேஎன்னை உறவாக்கத்தான் ஆசை! ஆசை!
பிறப்பும்பின்னே தமிழாகத்தான் ஆசை! ஆசை!
ஆசை! ஆசை!
எழுதும்போதெல்லாம் பிறக்கத்தான் ஆசை! ஆசை!
எழுத்தின்கூறெல்லாம் சிறக்கத்தான் ஆசை! ஆசை!
விண்மீன்சிதறலாய் ஒளிரத்தான் ஆசை! ஆசை!
என்பேரதனிலே எழுதத்தான் ஆசை! ஆசை!

கொ.பெ.பி.அய்யா.










 .


Saturday, 26 July 2014

பாரதியின் பாரத்தி.




பாரதியின் பார்த்தி!

பெண்ணென்றும் மயங்கித்தான்
பின்னே நீயும் வந்தாயோ!என்னை
மண்ணென்றும் எண்ணித்தான்
தின்னாறத் துணிந்தாயோ!

என்னென்றும் அறியாமல்தான்
என்னையும் தொடர்ந்தாயோ!—பழைய
பெண்ணென்றும் நம்பித்தான்
உன்னைப்பிழை முனைந்தாயோ!

உனைஈன்ற ஒன்றுதானே எனக்கும்
உரியதென்றும் அறிவிலையோ!--அடே
ஈன்றாளை எண்ணாமல் நீசா
என்னைஏன் வாசம் கொண்டாய்?

போகத்தின் பொருளோ காமப்
போதைக்கும் உருவோ நான்?—அந்த
மனைவியிடம் அறியா மாமிச
சுவையென்ன கொண்டேன் நான்?

பாரதியின் பாசறையில் நான்
பயின்று வந்த புயலென்றும்—புதுமைச்
சாரதியாம் பாரதியின் தேர்
பார்த்தி என்றும் அறியாயோ!

கண்ணீரே கோலமென அந்தப்
பேதையல்ல கீசகனே—புரட்சிப்
பெண்ணெனப் புறப்பட்ட பாரதி
புதுமைப்பெண் நானே காண்!

அழுகையின் அடையாளம் தான்
அந்நாளின் பெண்ணென்பார்---இன்று
அவளருமையின் காப்பாக
அங்கமெல்லாம் ஆயுதம்தான். 

தொலைக் காட்சித் தொடர்காணும்
விலைக் காட்சிப் பெண்ணோநான்?—அவள்
அழுகையைக் காசாக்கும் குடும்ப
அவலத்தின் சின்னமோ நான்?.

வளையல்கள் கொஞ்சும் மங்கை
வலிமை கற்றேன் பாரதியால்!—பாவி
வர்மக்கலை அறிந்த என்னை
வதைக்க உன்னை வைத்தாயே!   

அன்னையவள் வடிவம் கொண்ட
பெண்ணையினி மதிக்கா விட்டால்—அவள்
கண்ணீரால் கரைய மாட்டாள்.
செந்நீரால் தலை முடிப்பாள்.

கொ.பெ.பி.அய்யா.