காதலும் தொல்லையோ!
காதலொருத் தொல்லையோ-ஐயோ
கசப்பதும் இல்லையே!
ஊடலும் வெல்லமோ-ஊடியும்
கூடினால் இன்பமே!
தும்மலும் மோசமோ--பம்மி
செம்மலும் வேசமோ!
எண்ணுவள் கூறென்றால்-நெஞ்சில்
எவளுண்டு யாரென்பேன்.
பாராட்டும் மாறாமோ-நான்
யாராட்டம் கூறென்பாய்!
மெய்கூறும் ரசனையும்--நீ
பொய்யென்றால் என்செய்வேன்!
அலங்காரம் செய்வதற்கும்-உன்
அனுமதியும் வேண்டுமோ!
வீதிவழி நிமிர்ந்தாலும்-அறியார்
விழிபட்டால் எச்சமாமோ!
தழுவலென்ன சந்தேகம்--ஏன்
வழுவுகிறாய் உந்தேகம்!
மறந்தேனோ நினையவும்--கடவுள்
வரந்தானே வாழ்வதற்கு!
நெஞ்சமுன் கட்சியோ-பாவி
கெஞ்சுதடி வெக்கமின்றி.
வஞ்சியுன் அடிமையாகி-பாவம்
விஞ்சுதடி கொஞ்சுதடி.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment