கண்ணீரே ஜீவ நதி!
கலந்திடக் கரைமீறும் காதல் விழியோ!
பெருகிடும் உணர்வுகளும் பேசும் மொழியோ!
செலவிலும் வற்றிடா ஜீவ நதியோ!
உருகி உள்ளாற ஓடுங்கண் ணீரோ!
உள்ளமும் கொள்ளா உடைக்கும் உணர்வதோ!
சொல்லும் அடங்கா சுரக்கும் கனவதோ!
கள்ளம் மொழியா கரவாக் கசிவோ!
எள்ளினும் காதல் இயம்பிடும் கண்ணீரோ!
வழியும் மொழியில் விழிகளில் சொல்லும்.
வலியின் வலிமை அழுகையில் வெல்லும்..
களிப்பிலும் பொங்கியும் கண்கள் ஒழுகும்.
ஒளிக்கவும் ஆற்றா துளிர்ப்பதும் கண்ணீரோ!
பிரிவின் ஏக்கமோ பார்வை கலங்கும்.
புரிந்தும் தழுவலில் பொன்னீர் துலங்கும்.
அறிவினை ஆள அறியாது வேசம்.
உறவினில் தேறும் சொரிவிழி கண்ணீரோ!
அழுகை ஆனந்தம் அடங்கிடாக் கோபம்,
விளக்கும் உணர்வும்!அளக்கவும் ஆழம்
விரித்தும் சுருக்கியும் வீங்கும் விழிகள்
அறிவாம் கடைவழி காட்டுதும் கண்ணீரோ!
படையென்ன செய்யும் தடையென்ன தேறும்!
விடையென்ன சொல்லும் அடைவென்ன கூறும்!
ஆற்றாது ஆன்மாவின் தேற்றா உணர்வுகள்
ஊற்றும் கடைவிழி நீற்றுங் கண்ணீரோ!
ஆற்றாது ஆன்மாவின் தேற்றா உணர்வுகள்
ஊற்றும் கடைவிழி நீற்றுங் கண்ணீரோ!
உழைப்பார் அழுகை பிழைப்பார் கயவர்
களைப்பது முன்னமேக் காப்பவன் ஈசன்.
விளைப்பார் பசியோ முளையிடும் நெருப்போ!
மழையென வெள்ளம் அழித்திடும் கண்ணீரோ!!
பொறுமைக் கடலாம் உரிமை மடலாம்.
இறைவன் கொடையாம் உடைவன் படையாம்
செருக்கின் கரையா உருக்கும் அமிலம்
பெருக்கும் உறவதும் பேணவும் கண்ணீரோ!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment