Thursday, 26 December 2013

தற்கொலை பாவம்.

ஒரு கணம் சிந்தியுங்கள்.!

இனியேன் இருப்பது எல்லாம் முடிந்தபின்
    என்றேநீ எண்ணியும் முடியுமுன்
நுனிநொடி தன்நின்று நெஞ்சம் துணிந்துபின்
    நுண்ணறி வாய்ந்து நெறிமுன்
மனிதர் தோற்றும் முயன்றுமே வென்றார்பின்
     மின்னும்பார் ஆயிரமே பாதைமுன்.

உயிரும் விலையோ உள்ள பொருளோ!
  உன்னால் பெறவும் ஒன்றோ !
மயிரோ மழிக்கவும் மீட்டவும் வருமோ!
      மன்னுயிர் போக்கலும் நன்றோ!
வயிறொன்றுந் தானது வாழ்வில் பொறுப்போ
     வெங்கான் விலங்கது வென்றதோ!

பொறுமை யிழந்த புரியாஉணர்ச்சியோ! 
    பூமி விடுதலை பயனோ!
வறுமை பயந்துமே வாழ்வை மறுப்பதோ!
  வட்டந்தன் சுற்றம் விடுவையோ!
உரிமை உனக்கார் உடைமை குறித்ததோ!
உன்னுயிர் நீக்கல் உனதோ!

கொலையும் தற்கொலை கொல்வதே பாவம்!
இலையோ துணிவு எதிர்க்கவும்.
அலையோ மீள அவசரக் கோவம்
நிலையோ ஆள நிலமும்.
தொலையோ வாழ்வு தொலைப்பது சாபம்
கலையாம் உலகம் கடக்கவும்.

கொ.பெ.பி.அய்யா





No comments:

Post a Comment