நிழல்!!!
ஆண்டாண்டாய் ஆண்டாலும்,
ஆடியோடி சேர்த்தாலும்,
மாண்டபின் என்ன வரும்--இந்த
மண்தானே மூடவரும்.
தீண்டி நீ கொண்டதோ!
தீண்டுந் தீ காக்குமோ!
கூண்டு விட்டுப் பறப்பதோ!-ஆவி
கோடி கண்டும் திரும்புமோ!
உடன் பிறந்த சோதரனோ!
ஒரு சால் நிலத்துக்கோ!
திடமாகிக் கொலை செய்வான்-அவனும்
தேடியென்ன ஆள்வானோ!
போராடி வாழ்வதேனோ!
பொய்யான மெய் சுகமே!
படுக்கும் குழி சொந்தமோ!--அதையும்
அடுத்த பிணம் பிடுங்குமே!
ஆனதெல்லாம் ஆகட்டுமே!
போனதெல்லாம் போகட்டுமே!
நிழல் போலும் நிலமிதே!-உடல்
நிசமென்றும் மயங்காதே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment