இரவே இனிக்கிறது.!
இரவுதான் எத்ததனை சுகம்..
அப்பப்பா................................
எண்ண எண்ண இனிக்கிறதே.
ஆரவாரம் இல்லாத அமைதி.!.
அழகு அழகு!இரவே அழகு!
இதமான காற்று.....................!
பதமான சூழல்........................!..
விரும்பினால் தனிமை.
ஆஹஹா....ஆஹா..............................!
ஆகாயத்தின் அற்புதங்கள்..
அது விரிக்கும் கற்பனை.
அடடா......சொல்லி மாளவில்லை.
சுகமே சுகம் இரவே சுகம்!
தொல்லை உலகை நீ!
தொலைத்தாயோ!ஒளித்தாயோ!
எல்லைவரைக் காணவில்லை
அல்லல் அல்லாத அல்லோ!
இறுக்கம் கலைகிறது............
பரப்ரப்புத் தொலைகிறது..
இலேசாகி இதயமே
இயல்பாகி இசைக்கிறது.
குளுமையான நிலவோடு
கொஞ்சவுந் துடிக்கிறது..
பூத்து மின்னும் மீன்களையும்
பறிக்கத்தான் தோணுகிறது..
உணர்வுகள் விருந்தளிக்கும்
உன்னதப் பொழுதிது..
ஊடலை விலக்கியே
கூடுமாசை துளிர்க்கிறது.
தேடலுக்கு விடையங்கள்
தெளிந்திடும் இரவே வாழ்க!
விடிய வேண்டாம் இரவு
கதிரவா கேட்டுக் கொள்!
காதலர்கள் கனவுகளில்
கலந்து பேசும் இரவே நீள்க.
கவிஞனுக்கு கவியெழுத
கருமை ஊற்றே!
கற்ப்பனைக் களஞ்சியமே
காரிருள் இரவே வாழ்க!
கொ.பெ.பி.அய்யா
No comments:
Post a Comment