Sunday, 16 December 2018

அம்மா இரஙகற்பா.

அம்மாவிற்கு இரங்கற்பா

அம்மா அம்மா வா என்றே
அகிலம் இன்று அழுகிறதே.
தாயே தாயே நீ என்றே
தமிழே உன்னை தொழுகிறதே.

அம்மா உன்னை இல்லை என்றால்
நம்ப மனமும் மறுக்கிறதே.
சும்மா சொல்லும் சொல்லாக்கி
அம்மா நீயும் எழுந்து வா!

ஜே என்றாலே ஜெயம் என்பார்.
ஜெயம் என்றாலே நீயென்பார்.
எமனிடம் தோற்றதும் பொய்தானோ!
இமயம் சாய்ந்ததும் மெய்தானோ!

புரட்சித் தலைவர் ஆன்மா நீ
புரட்சித் தலைவி புகழே நீ
உழைத்துக் களைத்து அவர்நிழலே
அழைத்து அமரம் ஆனாயோ!

நிரந்தரம் முதல்வர் நீ என்றோம்.
வரந்தரும் இறைவி தானென்றோம்
நிறைந்தும் தமிழகம் நீயாக
பரந்தும் துணைசெய் தாயாக.

கொ.பெ.பி.அய்யா.

Friday, 7 December 2018

சிந்திக்க ஒரு நிமிடம்.

ஒரு கணம் சிந்தியுங்கள்.!

இனியேன் இருப்பது எல்லாம் முடிந்தபின்
    என்றேநீ எண்ணியும் முடியுமுன்
நுனிநொடி தன்நின்று நெஞ்சம் துணிந்துபின்
    நுண்ணறி வாய்ந்து நெறிமுன்
மனிதர் தோற்றும் முயன்றுமே வென்றார்பின்
மின்னும்பார் ஆயிரமே பாதைமுன்.

உயிரும் விலையோ உள்ள பொருளோ!
  உன்னால் பெறவும் ஒன்றோ !
மயிரோ மழிக்கவும் மீட்டவும் வருமோ!
      மன்னுயிர் போக்கலும் நன்றோ!
வயிறொன்றுந் தானது வாழ்வில் பொறுப்போ
     வெங்கான் விலங்கது வென்றதோ!

பொறுமை யிழந்த புரியாஉணர்ச்சியோ!
    பூமி விடுதலை பயனோ!
வறுமை பயந்துமே வாழ்வை மறுப்பதோ!
  வட்டந்தன் சுற்றம் விடுவையோ!
உரிமை உனக்கார் உடைமை குறித்ததோ!
உன்னுயிர் நீக்கல் உனதோ!

கொலையும் தற்கொலை கொல்வதே பாவம்!
இலையோ துணிவு எதிர்க்கவும்.
அலையோ மீள அவசரக் கோவம்
நிலையோ ஆள நிலமும்.
தொலையோ வாழ்வு தொலைப்பது சாபம்
கலையாம் உலகம் கடக்கவும்.

கொ.பெ.பி.அய்யா

Monday, 12 November 2018

சும்மா இரு!

சும்மா இரு ஆனால்
சோம்பலாய் அல்ல.
சொல்லே இல்லாத
நல்லவனாய் சும்மா இரு.

ஐம்புலன்கள் அடக்கி
சும்மா இருக்க!
சும்மா பயிற்சி
சும்மா வெல்க!.

சும்மா என்றால்
சுமை இல்லாமை.
சும்மா ஆகினால்
சுபம் ஆகவாம்.

சும்மா மறைந்து
சுயநிலை மறக்கும்.
ஐம்புலன் ஒடுங்கி
ஆகாயம் பறக்கும்.

சும்மா சும்மா
சொல்லாமை அடங்கு.
சும்மா சும்மா
இல்லாமை ஒடுங்கு.

சும்மா சும்மா
உள்ளமை சும்மா.
சும்மா சும்மா
எல்லாமே சும்மா.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 7 November 2018

சின்ன வயசு உறவுகள்

சின்ன வயசு உறவுகள்.

என்னமோ தெரியல 
இன்னமும் மறக்கல.
சின்ன வயசு உறவுகள்
நெஞ்ச விட்டு அழியல.

பள்ளிக் காலம் பழகிய
கள்ளம் போல் அரும்பிய
உள்ளம் ரெண்டு நெருங்கிய
வெள்ளை க்காதல் மறக்கல.

அண்ணன் தம்பி பிறவிகள்
வண்ணம் இல்லா உறவுகள்
ஒன்று பட்ட பரிவுகள் 
துண்டு பட்டும் அழியல.

வாண்டுகளாய் நண்பர்கள்
கூண்டு விட்ட அன்பர்கள்
ஆலமர ஊஞ்சல் ஆட்டி 
ஆடியதும் மறக்கல.

பாலினம் வேற்றுமையை
வாலிபக் கதைகளை
தோழமை அரட்டைகள்
கேளிக்கை அழியல.

பள்ளி செல்ல மறுத்ததும்
துள்ளி ஆட துடித்ததும்.
வில்லர்களாய் விடலைகள்
அள்ளியதும் மறக்கல.

பள்ளிப் பாடம் பிடிக்கல.
வீட்டுப் பாடம் முடிக்கல.
வாத்தியாரு பயத்தில
ஓட்டம் இன்னும் அழியல.

கொ.பெ.பி.அய்யா.

யார் ராஜபச்.சே

யார் ராஜபச்சே?

என்ன இது அநியாயம்

என்ன இது அநியாயம்

உன்னிடமும் இல்லை நியாயம்.       

சொன்னதெல்லாம் நிசந்தானோ!-உனக்கு.

சொந்தந்தானோ ராஜபச்சே!

கண்ணீரில் கடல் பெருக்கி

கப்பல் விடும் சண்டாளன்

உன் முடிசூட்டு விழாவிற்கு-பாவி

உற்ற திருஷ்டி பூசணிதான்.

செந்நீரில் குளம் நிறப்பி

செழிக்கக் குளித்தவன்தான்

காட்டேரி அவனேதான்--மனித

காவுபூஜை முடித்தவன்தான்.

பூதம் வந்து முடி சூட்ட

பாவம் என்ன செய்தாயோ!

வேதம் கற்ற நீ கூட—பாவம்

விதிவசம்ஆனாயோ!  

புண்ணியர் வாழ்த்தினால்

புகழ் இன்னும் கூடுமன்றோ!

பாவியரை அழைத்தாயோ!-தமிழ்

பாவம் உன்னைச் சூழுமன்றோ!

தமிழன் என்றால் ஏளனமோ!

தமிழினம் வேண்டாமோ!

தமிழ் இல்லா இந்தியாவோ!-அய்யா

தமிழ் செய்த பாவம் என்ன?

உடன் பிறந்த இந்தியனை

திடங்கொண்டு கொன்றவனை

கடன் என்று அழைப்பாயோ!-எம்மை

ஜடம் என்றும் நினைப்பாயோ!

அவன் செய்த இலாபம் என்ன?

நாங்கள் செய்த பாவம் என்ன?

எம்முணர்வைக் கொல்வதற்கு—நீயும்

எத்தனை நாள் தவமிருந்தாய்?

பாவியர்கள் தொலைந்தாரென்று

பகல்கனவா கண்டிருந்தோம்.

ஆவியாய் உன்னுருவில் –மீண்டும்

அவர் வந்தும் பூந்தனரோ!

என்றுதான் விடியுமோ!

எங்கள் தமிழ் ஆளுமோ!

அன்றுதான் பாரதம் –தமிழ்

வென்றும் ஒரு அங்கமாமோ!

கொ.பெ.பி.அய்யா.

வெற்றிக் கனிகள்.

வெற்றிக் கனிகள்.

வெற்றிக்கனிகள்.

முப்பத்து ஏழு வெற்றிக் கனிகள்.

இப்போது ஆளும் இந்திய மணிகள்.

செப்பம் அம்மா சீர்வளர் பணிகள் 

எப்போது மேற்றும் நேர்மன அணிகள்.

இந்திய வரலாறு இன்றும் எழுதும்

முந்திய தமிழின் முன்னுரை முழுதும்.

பிந்திய நாளில் ஒன்றென அம்மா

சந்தியா மகளென சாதனை பதிக்கும்.

ஒற்றை அல்ல ஓராயிரம் கோடி

பற்றிய தமிழின தாயிடம் தேடி

வெற்றி வெற்றி எனவீரம் பாடி

சுற்றினோம் முப்பத்து ஏழும் சூடி.

தமிழினம் இன்று தரணியில் வென்று

தலைநேர் நிமிர்ந்து பரணியில் பகிர்ந்து  

உலகம் வியந்து உற்றுப் பார்க்க

திலகம் சூட்டிய அம்மா வாழ்க!

கொ.பெ.பி.அய்யா.

Thursday, 25 October 2018

நாளை நமதல்ல.

நாளை என்பது சமாதானமல்ல.

நாளை என்பதும் சமாதானமல்ல.

நாளை என்பது சமாதானமல்ல.
கோழையின் நழுவலே நாளை எனும் சொல்லே.
பாலைக் வனத்தில் நீர் தேடல் போலே
நாளை என்பதும் கானல் நீர் தானே.

வாய்ச்சொல் வீரன் வாய் மொழி வாக்கு.
மாயமான் மாரீசன் பொய் வழி போக்கு.
தேனாய் ஒழுக்கும் தான்பேசும் அடுக்கு
தானாய் விழுங்கும் மீன்பாயும் வழுக்கு.

எல்லாம் அறிந்தவன் என்பவன் கூற்று
வல்லான் அறிவும் மழுங்கிடும் மாற்று.
நல்லவன் போன்ற நாடகப் பேச்சு.
நம்பினால் ஆண்ட நாடும் போச்சு.

கற்றதும் மற்றதும் கலைகளில் தெளிக.
உற்றதும் பெற்றதும் நிலைகளில் புரிக.
செத்ததும் உத்ததும் உணர்வினில் அறிக.
முத்ததையோ சொத்தையோ முனைவினில் முடிக.

கொ.பெ.பி.அய்யா.

Pitchiah Kpp at 23:48
சின்ன வயசு உறவுகள்.

என்னமோ தெரியல 
இன்னமும் மறக்கல.
சின்ன வயசு உறவுகள்
நெஞ்ச விட்டு அழியல.

பள்ளிக் காலம் பழகிய
கள்ளம் போல் அரும்பிய
உள்ளம் ரெண்டு நெருங்கிய
வெள்ளை க்காதல் மறக்கல.

அண்ணன் தம்பி பிறவிகள்
வண்ணம் இல்லா உறவுகள்
ஒன்று பட்ட பரிவுகள் 
துண்டு பட்டும் அழியல.

வாண்டுகளாய் நண்பர்கள்
கூண்டு விட்ட அன்பர்கள்
ஆலமர ஊஞ்சல் ஆட்டி 
ஆடியதும் மறக்கல.

பாலினம் வேற்றுமையை
வாலிபக் கதைகளை
தோழமை அரட்டைகள்
கேளிக்கை அழியல.

பள்ளி செல்ல மறுத்ததும்
துள்ளி ஆட துடித்ததும்.
வில்லர்களாய் விடலைகள்
அள்ளியதும் மறக்கல.

பள்ளிப் பாடம் பிடிக்கல.
வீட்டுப் பாடம் முடிக்கல.
வாத்தியாரு பயத்தில
ஓட்டம் இன்னும் அழியல.

கொ.பெ.பி.அய்யா.

அம்மா.

பாவம் அந்தப் பெண்மணி.!

ஜனநாயகம் பேசுவோர் பலர் ஜனநாயகம் மதிப்பதேஇல்லை.அது வெறும் பேச்சுக்கலை என்பதைப் புரிந்து கொள்ளாதவள் பாவம் அந்தப் பெண்மணி!

பழைய வரலாறை தெரிந்து புரிந்து கொள்ளாமல் ஒருவழி பாதையில் நுழைந்தவள் மறுவழிப் பாதை இல்லை என்று அறிந்து கொண்டபோது எந்த வழிப் பாதையில் நுழைந்தாளோ அந்த வழிப் பாதையில் எப்படியோ ஒருவிதமாக திரும்பி வந்ததும் அவள் நல்லநேரமே.எஞ்சியுள்ள நாட்களில் இனி தான் எண்ணியதைப் பெற முயற்சிக்கலாம்.அல்லது தனக்காகக் கொஞ்சம் வாழ்வதோடு நாட்டு மக்களுக்காகவும் வாழ்வது பற்றியும் யோசிக்கலாம்.

மகளே!நீ இருந்த இடம்.ஒரு தனியொரு ஏகாதிபத்தியம் நிறைந்த இடம்.அங்கே அவர்களின் சொந்தத்திற்கே எல்லா உரிமைகளும்.மற்றவர்கள் அவர்களுக்காக தங்களைத் தியாகம் செய்துகொள்ளத் துணியவேண்டும்.யாரும் தங்களுக்காக வாழக் கூடாது.அவர்களுக்காகவே மற்றவர்கள் வாழ்ந்தாக வேண்டும்.அதுதான் அவர்களின் இயக்கம் கொண்டுள்ள கொள்கை லட்சியம் எல்லாம்.அப்படி இருந்தால் அவர்களிடம தாக்குப்பிடிக்கலாம்.எப்போது அன்னியர் ஒருவர் அவர்களின் வாரிசை மிஞ்சுவதாக முந்துவாரோ அல்லது மக்கள் செல்வாக்கைப் பெறுகிறார் என்று தோன்றுவாரோ.அப்போதே அவர் ஓரம் கட்டப்படுவார் அல்லது தூக்கிவீசப்படுவார்.அப்படி வீசப்பட்டவர்கள்தான் புரட்சியார்,போர்வாளார் எனப்போற்றப்பட்டவர்கள் எல்லாம்.இன்னும் எத்தனையோ லட்சியவாதிகள் எல்லாம் அப்படித்தான் கழட்டிவிடப்பட்டனர் என்பதை நாடறியும்.ஆனால் பாவம் நீ ஏன் அறியவில்லை.

நீ ஏதோ ஒன்றை எதிர் பார்த்துக் காத்திருந்திருப்பாயானால் அது இதுவாகத்தான் இருந்திருக்கும்.ஏனென்றால் என்றும் இவர்களிடம் பொதுவான எதிர்பார்ப்பு எல்லோர்க்கும் இது ஒன்றுதான் நிச்சயம்.பாவம் யாரை நீ முந்த நினைத்தாயோ.?நூறோடு நூற்று ஒன்றாக இருந்திருந்தால் நீயும் வேரோடு விழுதாக அவர்களுக்கு தாங்கலாகவே இருந்து காலத்தை ஓட்டியிருக்கலாமே.சரி விடு என்றிருந்தாலும் ஒருநாள் இது நிகழ்வது உறுதிதான்,அது இன்று நிகழ்ந்த்ததும் நல்லதுதான்.

இனிமேல்தான் உனக்கு நல்லநேரம் ஆரம்பம்.நல்லஇடமாகபார்த்துஉன்னை இணைத்துக்கொண்டு இனியாவது உனக்காக முடிந்தால் நாட்டுக்காகக் கொஞ்சம் பயனுள்ள வகையில் வாழ்வாயாக.

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 22 September 2018

விடியும் வேளை.

விடியும் வேளை.

விடியும் விடியும் வேளை விடியும்.
முடியும் முடியும் நம்மால் முடியும்.
மொழியே இனமாய் உணர்வாய் படியும்-உயிர்
தமிழால் மட்டும் பேதங்கள் மடியும்.

சாதியால் மதத்தால் சிதறிய தேசியம்
ஆதியாம் பிறப்பால் அடையாளம் தமிழாம்.
உதிரம் ஊறிய தமிழால் உறவாம்-தமிழ்
உணர்வால் தமிழினம் உரிமையை காப்போம்.

தாயும் தன்பால் தமிழ்வழி மரபால்
சேயும் 


கொ.பெ.பி.அய்யா





Thursday, 19 April 2018

காந்தி நாடு

பெருமமை இந்தியா.

கொண்டெழுந்த கொள்கையில்
நின்று அதை வென்றதில்
என்றும் அது பாடமாய்
அண்ணல் வழி அகிம்சைதான்.

சூது என்ன செய்யுமோ
நீதி தானே வெல்லுமே!
தர்மத் தலைவர் காந்தியை
வர்மங்கூறி வென்றதார்?

ஒன்றுபட்ட  இந்தியா
வென்றுவிட்ட  மகாத்மா
கண்கண்ட தெய்வமாய்
மண்கொண்டு காலம் வாழும்.

புரட்சி என எழுந்தது
அறம் என தொடர்ந்தது
உரிமை என மலர்ந்தது
பெருமை அதில் சிறந்தது.

கவிஞர்கொ.பெ.பி. அய்யா

Friday, 13 April 2018

ஈடேறும் காலம் உண்டோ!

ஈடேறும் காலம் உண்டோ!

நான் ஈடேறும் காலம் உண்டோ பராசக்தியே!
என் பாடாறும் நாளும் என்றோ மீனாட்சியே!
கண்ணீராய் சிந்துகிறேன் காணிக்கை தாயே-அது
வெண்ணீராய் சுட்டதோ விழித்திடு நீயே!

உழுபவன்தான் நிலம் காய்ந்து நொந்து அழுகிறான்.
உழைப்பவன்தான் சுமைதாங்கி இத்து விழுகிறான்.
களைத்தவனின் மூச்சிலேதான் கொடிகள் பறக்கிறது-உழைத்து
அலுத்தவனின் வீட்டிலேதான் அடுப்பு உறங்குகிறது.

தொழிலாளர் வர்கம்தான் தூணாய் தாங்குகிறது.
தூக்கமின்றி வாழ்வுக்காக தானாய் ஏங்குகிறது.
கொழுத்தவனின் நாய்கூட மெத்தை கேட்கிறது-உழைப்பால்
இளைத்ததவனின் நோய்தாதானே சொத்து ஆகிறது.

பணக்கார இனம்தானே அரசியல்வாதிகள்
உனக்காக இழந்ததென்ன உரசிப் பாருங்கள்.
கட்சிகளை மறந்துவிட்டு கரையேறுங்கள்-சுதந்திரப்
பட்சிகளாய் சுயமாக விடை தேடுங்கள்.

காவிரியைப் பூட்டி வைத்து காவல் காத்தவர்
சாவியையும் தொலைத்துவிட்டு ஊரை ஏய்ப்பவர்
பாவவினை தீருமென்ற பரிகாரமோ-விட்ட
சாபக்கணை மாற்றத்தான் பரிவாரமோ!

கவிஞர். கொ,பெ,பி .அய்யா.


Wednesday, 21 February 2018

பத்திரமாய் பழகு.

பத்திரமாய் பழகு.

எங்கேயோ இருப்பான் ஒரு நல்லவன்.
அங்கேயும் அவனைக் கெடுப்பான் வல்லவன்.
வாசங்காட்டி நாசமாக்கப் பழகுவான்.
மோசம் வந்தால் வாசல் தேடி விலகுவான்.

எவருக்குமே இருக்கும் ஒரு பலஹீனம்
அவருக்குமே தெரியாதது இரகசியம்.
ஆனாலும் கண்டறிவான் சண்டாளன்.
தோணாமல் தூண்டிவிட்டு தீர்ப்பானவன்.

பத்திரமாய் பழகவேண்டும் பாவபூமியில்
சத்தியமாய் உலகமின்று சாபநாளிதில்.
நல்லவராய் வாழ்வதிங்கு நல்லதில்லையோ!
உள்ளவராய் ஏய்த்தாலே திலகம் சூட்டுமோ!

கொ.பெ.பி. அய்யா