Wednesday, 30 September 2015

யுத்தம் தொடங்கி விட்டதோ!

யுத்தம் தொடங்கிவிட்டதோ!
------------------------------
யுத்தம் தொடங்கியதோ! சித்தம் கலங்கியதோ!
பட்டும் இணையமாம் ஆப்புகளால்--செத்தும்
சத்தம் அடங்கியூழல் பேய்கள் ஒழியுதோ!
சுத்தமாகி தேறுது நாடு.

வருவாய் தருவாய் பெறுவாயென 
தெருவாசல் நின்றழைக்கும் 
வேசியென அரசுத் துறையினரும்
இழிக்கிறார் கடமை செய்திடவும்
கைக்கூலி கேட்கிறார். 

மாமூல் தாதாக்களின் வட்டார மையங்கள். 
சுங்கப் பங்குகளாய் அங்கங்கு வேட்டைகள். 
எங்கும் கொள்ளைகள் இவர்களே காவலர்கள்! . 
இதுதான் சாதனையோ! 
இதற்குத்தான் சுதந்திரமோ! 

எத்தனை தியாகங்கள்! 
எத்தனை உயிர் பலிகள! 
அடசண்டாள நீசர்களே!! 
விடுதலை பெற்றதும்
வீணாத்தான் போனதோ! 
வீணரிடம் அடிமையோ!
விதி இதுதானோ!
பாவம் நாடோ!

ஊழல் தலை விரித்தாடும்
வசூல் ராசாக்களின் கோட்டமோ
அரசு அலுவலங்கள்!.


இவர்களின் 
கொட்டம் அடக்கி
ஆட்டம் முடிக்க
வந்துவிட்டனர் .
உளவாளிகள்.
watsapp,imo,messenger


ஊழலுக்கு எதிரான 
யுத்தம் தொடங்கிவிட்டதோ!
இனிமேல் ஆப்புத்தானோ!


கொ.பெ.பி.அய்யா.

காரணம் அவசியம்.

காரணம் அவசியம்.
------------------------------
வல்லொன்று சொல்சுட்டு புண்பட்டு ஆறாது
கல்லொன்று நீர்பட்டு சூழலைபோல்--உள்ளஉள்ள
எண்ணலைகள் உள்நின்று பட்டுப்பட்டு மாளாது
முன்னாய்வீர் சொல்லொன்று நன்று.

நீரில் கல் போட்டால்
வட்டங்கள் விரிகின்ரன். 

நெஞ்சினில் சொல் போட்டால்
நினைவுகள் விரிகின்றன.
கல்லோ சொல்லோ!
எது போட்டாலும்
காரணம் அவசியம்
தேடுங்கள்

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 29 September 2015

கடந்தவனே கடவுள்!

கடந்தவனே கடவுள்!

ஆண்டும் கடந்தவன்
ஆண்டவன் தானவன்.!
துறந்தும் கடந்தவன்
துதியன் தானவன்.!
பரந்தும் கடந்தவன்
பரமன் தானவன்.!
பிறவியும் கடந்தவன்
இறைவன் தானவன்.!

இயக்கும் மூலவன்.
இயற்கை நாயகன்.
வியக்கும் வாலறிவன்.
விரிக்கிலா மேலறிவன்.
காற்றுப் போலவன்
கண்படா கடவுளவன்.
ஆற்றும் மேலவன்.
அகந்தொடும் உணர்வவன்.

அருவ மானவன்
அடங்கா மாணவன்.
பிரக தீசனவன்.
உருகும் பூசனவன்.
பெருக தியானமவன்
இரங்கும் தீனபந்தன்.
சருவம் வயணமவன்
தருமம் நயனமவன்.

கண்ணாடி தானவன்.
எண்ணுவார் ஆனவன்.
முன்னாடி கல்லவன்.
எண்ணூடி மின்னுவன்.
ஒண்ணாடி உள்ளவன்
தன்னூடி இல்லவன்.
எண்ணாடி தோணுவன்
எண்ணார்க்கும் தாயவன்.

இடிக்கும் இடியெங்கோ!
அதிரும் ஒலியிங்கோ!
தெறிக்கும் மின்னலெங்கோ!
பறிக்கும் ஒளியிங்கோ!
ஒலிமுந்தும் ஒளிகண்டோ!
வழியொன்றும் அறிவதுண்டோ!
இடியெனும் இடருண்டோ!
கடவுளவன் இடமன்றோ!

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 27 September 2015

கல்லுக்கும் உயிருள்ளது.

உயிருள்ளதே வாழ்கிறது.
---------------------------------------
ஆக்கும் சக்தி இல்லாது ஆகில்
ஆவது ஒன்றும் இல்லையே!-ஆண்டான்
காக்குள் சீவம் நீக்கும் தூலம்
கல்லு மானாலும் சாகும்

எது உயிருள்ளதோ! 
அதுவே வாழ்கிறது.
உயிர்தான் அனைத்தையும்
உருக்குலையாமல் காக்கிறது.
 எதில் உயிரில்லையோ 
அதில் வளற்சி இல்லை. 

கல்லுங்கூட உயிருள்ளவரைதான் 
கரையாமல் கடினம் பெறுகிறது. 
எப்போது அதனிடம் உயிரில்லையோ! 
அப்போதே அது பொடியத் துவங்குகிறது. 
உயிர்.............அதன் வடிவம் என்ன
உயிர்......அதன் இருப்பென்னயாரறிவார்?
அதுவே சிவம்! என்றறிவோம்.
அகிலம்  அனைத்தும் சிவ மயமே!

கொ.பெ.பி.அய்யா.
---------------------------------------------------------

அழியாத கொடை.

அழியாத கொடை!
---------------------------

அலங்காரம் ஆரவாரம் ஆண்டும் நலிந்தும்
கழறும் இழிமயிராம் குப்பை-புழங்கும்
உடலும் பிணமாம் புகழுறா உயிராம் 
மடியும்மண் வாழாது செத்து.

மனிதனுக்கு வழங்கப்பட்ட 
கொடைகளில் அழகுக்காக
அழியாத ஒன்று சிகைதான்.. 
உதிரும் வரைதான்
அது முடி.

உதிர்ந்த பின்
அது மயிர்.
அந்த மயிரை யார் மதிக்கிறார்கள்!
அது அசிங்கமாகிவிட்ட
அநாவசியமாக அப்புறப்படுத்தப்படுகிறது.

உடலும் அப்படித்தான்.
அது உயிரோடு
இருக்கும் வரைதான்
தொடரும் அலங்காரம்.
உடலும் உயிர் போனால்
அது பிணம்.

பிணமானபின்
பெயரதற்கு சவம்.
பேருக்கு சாவுண்டு.
பேரொடு புகழுக்கு
மரணமில்லை.

அதனால்
புகழோடு வாழ பேரெடு!
புகழே உயிர்.
உயிருக்கு அழிவில்லை.

மற்றெல்லாம் மயிரே!
மண்ணுக்குள் மடிவதே!

கொ.பெ.பி.அய்யா.

Monday, 21 September 2015

கூறும் புகழ் வேடநத்தம்.

இப்படியும் ஓர் ஊர்!

பாருக்கெல்லாம் கேட்கட்டும்-வாழும்
ஊரொன்றும் நாடு மெச்சும்.
நேரில்லா தேறும் பேரும்--ஊராம்
சீரும் திரு வேடநத்தம்.

தமிழ் மரபு கட்டுக்குள்--உள்ளூர்
தனி அரசு பற்றுக்குள்.
தொல் உறவு ஓட்டுக்குள்--இன்றும்
செல்லும் ஊர் வேடநத்தம்.

ஊருக்கெல்லாம் ஒரு மனம்-சிந்தை
உள்ளுக்கெல்லாம் ஒரு இனம்.
பாருக்கெல்லாம் ஒரு பாடம்--கற்றுக்
கூறும் புகழ்  வேடநத்தம்.

சாதியெல்லாம் பேருக்குத்தான்--சமூக
நீதி சொல்லும் பாருக்கேதான்.
பேதம் செய்யும் பாவமெல்லாம்--பழகு
வாதம் இல்லா வேடநத்தம்.

வேற்று மதம் பேச்சில்லை--தமிழ்
மாற்று மொழி மூச்சில்லை.
ஒன்றென்ற மக்கள் நிலை--என்றும்
நின்று வாழும் வேடநத்தம்.

வந்தாரை வாழ வைக்கும்--ஒரு
சொந்தமாய் கூடி மொய்க்கும்.
முந்தித் தேடி ஆதரிக்கும்--மனம்
ஒன்றி நீளும் வேடநத்தம்.

ஊருக்கு அழகு கோவில்கள்--கோவில்
சீருக்கு அழகு வாவிகள்.
உயர்வுக்கழகு ஒரு தலைவன்-அந்தப்
பெயருக்கழகு கரிய மாலழகன்

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 20 September 2015

என்னடி சொல்லுவ சுச்சீ

என்னடி சொல்லுவ,"சீச்சீ"!

என்னடி சொல்லுவ,"சீச்சீ"--பின்னே
எதுக்கடிடி நீயும் பொம்பள!--அப்புறம்
ஏனடி நானும் ஆம்பள!--சேச்சே!
வீணடி பேச்சு தோப்புல

என்னடா சொல்லுவ,"சேச்சே"!--உனக்கு
தின்னுற அவசரம்!ஆம்பள!--இதுக்கு
பாவம் பார்த்தா  பொம்பள!--எனக்கு
பத்து மாசம் வயிற்றுல-

எட்டும் கிட்டே இருக்குதடி!--கை
பட்டும் தொட்டே பறிக்குமடி!--கொஞ்சம்
விட்டால் மூச்சும் அடங்குமடி!--போதுமே!
செத்தால் கூட யோகமே!

அடக்கம்தானே பெண்ணுக்கு--தப்பு
தடுக்கும் காவல் கற்புக்கு--சும்மா
மடக்கு கொஞ்ச நாளைக்கு.--பொறுத்திரு!
விருந்தும் நானும் படைப்பதற்கு.

புத்தி கெட்ட பயல் நானே--என்னை
பற்றியும் மட்டம் எண்ணாதே--உந்தன்
அழகில் மயங்கிய மோகத்தில்--காதல்
பிழை படப்பாவி துணிந்தேனே!

இயற்கையின் பரிசு காதலிது--இதை
இறையென உலகம் போற்றுவது--நாமும்
புனிதம் முயன்று தேறுவது--இனிதே
மனிதம் உயர்ந்து வாழுவது.

கொ.பெ.பி.அய்யா.