கனியும் பருவம்.
சின்னச் சின்னக் குழந்தைதான்
திண்ணை நின்று சிரித்துத்தான்
எண்ணமெலாம் மகிழத்தான்
மின்னுவதும் அழகுதான்.
அன்னையவள் சோறூட்ட.......
அந்தவேளை நானுமே
அவ்வழியே சென்றிட...............
முன்னப் பின்னே அறியாதும்
என்னைக் கண்டும் புரிந்ததோ!
"தாத்தா" என்றும் விளித்ததேன்?
"மாமா" என்றும் அழைக்கலாம்!
"அண்ணா"வெனறும் உரைக்கலாம்!.
"தாத்தா" எனக் கண்டதென்ன!
வீட்டுக்குத் திரும்பினேன்.
வீட்டாளை வினவினேன்.
தாத்தா எனும் அடையாளம்
காட்டியது என்னடி ...........!
கண்டு சொல் என்றதும்
நாணத்தில் கோணி நின்றாள்.
நானெப்படிச் சொல்வேனென்றாள்.
"தோணவில்லை அப்படியோ!
ஆனாலும் குழந்தையோ!
அறியாது பொய்யுரையோ!
புரிந்ததென்ன மெய்யறிவோ!"
என மழுப்பி..............
சிரித்தாளோ!விரிக்காமல்
சிற்றறிவைக் கலைக்காமல்.
தெளிந்து கொள்ள துடிப்புத்தான்.
இளமை என்ன இருப்புத்தான்.
ஓடினேன் தேடினேன்.
உள்ளாறப் பாடினேன்.
கண்ணாடி முன்னின்றேன்.
என்னை நான் தேடினேன்!
வாலிபம் விடை பெறுமோ!
நாளிதுவும் நடை சொலுமோ!!
வயது போகும் பதிவுகளும்
வளருவதும் தெரிகிறதோ!
செவியோரம் வெள்ளிமுடி
சிரித்ததும் சொல்லுதடி!
முத்தலாகும் அழகுதானோ!
சத்தமின்றி பழுக்கிறதோ!!
தாடையதும் சாடையாக
தாழ்ந்த நிலை போதையாக!
ஆறுதலும் சொன்னது.
"கோடையின்னும் நெருங்கவில்லை!
தேட ஒன்றுந் தடையுமில்லை!
முத்தினால் சத்துத்தான்!
வித்தைகள்தான் பத்திரம்!
விளையாட்டுச் சித்திரம்"
விளங்கினேன் உத்தமம்.
கனிமுதிரும் பருவமோ!
இனிக்குமொரு கருவமோ!
அனுபவங்கள் முதிர்ச்சியோ!
அதிலென்ன அதிர்ச்சியோ!
இளமைதான் முத்தியதோ!
வளமைதான் மெத்தியதோ!
வாலிபம் என்பதெல்லாம்
போலிதான் புரிந்ததோ!
கொ.பெ.பி.அய்யா.
சின்னச் சின்னக் குழந்தைதான்
திண்ணை நின்று சிரித்துத்தான்
எண்ணமெலாம் மகிழத்தான்
மின்னுவதும் அழகுதான்.
அன்னையவள் சோறூட்ட.......
அந்தவேளை நானுமே
அவ்வழியே சென்றிட...............
முன்னப் பின்னே அறியாதும்
என்னைக் கண்டும் புரிந்ததோ!
"தாத்தா" என்றும் விளித்ததேன்?
"மாமா" என்றும் அழைக்கலாம்!
"அண்ணா"வெனறும் உரைக்கலாம்!.
"தாத்தா" எனக் கண்டதென்ன!
வீட்டுக்குத் திரும்பினேன்.
வீட்டாளை வினவினேன்.
தாத்தா எனும் அடையாளம்
காட்டியது என்னடி ...........!
கண்டு சொல் என்றதும்
நாணத்தில் கோணி நின்றாள்.
நானெப்படிச் சொல்வேனென்றாள்.
"தோணவில்லை அப்படியோ!
ஆனாலும் குழந்தையோ!
அறியாது பொய்யுரையோ!
புரிந்ததென்ன மெய்யறிவோ!"
என மழுப்பி..............
சிரித்தாளோ!விரிக்காமல்
சிற்றறிவைக் கலைக்காமல்.
தெளிந்து கொள்ள துடிப்புத்தான்.
இளமை என்ன இருப்புத்தான்.
ஓடினேன் தேடினேன்.
உள்ளாறப் பாடினேன்.
கண்ணாடி முன்னின்றேன்.
என்னை நான் தேடினேன்!
வாலிபம் விடை பெறுமோ!
நாளிதுவும் நடை சொலுமோ!!
வயது போகும் பதிவுகளும்
வளருவதும் தெரிகிறதோ!
செவியோரம் வெள்ளிமுடி
சிரித்ததும் சொல்லுதடி!
முத்தலாகும் அழகுதானோ!
சத்தமின்றி பழுக்கிறதோ!!
தாடையதும் சாடையாக
தாழ்ந்த நிலை போதையாக!
ஆறுதலும் சொன்னது.
"கோடையின்னும் நெருங்கவில்லை!
தேட ஒன்றுந் தடையுமில்லை!
முத்தினால் சத்துத்தான்!
வித்தைகள்தான் பத்திரம்!
விளையாட்டுச் சித்திரம்"
விளங்கினேன் உத்தமம்.
கனிமுதிரும் பருவமோ!
இனிக்குமொரு கருவமோ!
அனுபவங்கள் முதிர்ச்சியோ!
அதிலென்ன அதிர்ச்சியோ!
இளமைதான் முத்தியதோ!
வளமைதான் மெத்தியதோ!
வாலிபம் என்பதெல்லாம்
போலிதான் புரிந்ததோ!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment