Monday, 23 December 2013

முருகா நீ சொல்.

யாமிருக்கப் பயமேன்?

என்ன நான் செய்யுவேன்!
ஏது நான் செய்யுவேன்!
உன்னை  நான் நினைப்பதற்கே
உள்ளமில்லை முருகா!

என்னைச் சுற்றுந் தொல்லைகள்
எத்தனையோ இறுக்குதய்யா!
உன்னை எண்ண நேரமில்லை
உளைகின்றேன் ஆண்டவனே!

விலைவாசி ஏறுதய்யா!
வெய்யில் போலக் காயுதய்யா!
வறுமை யென்னை வாட்டுதய்யா!
வகையறியேன் வேலய்யா!

ஏற்றம் பெற முயலுகிறான்
தோற்றதினால் திருடுகிறான்.
அச்சமின்றி போய்வரவும்
ஆவதில்லை ஆறுமுகா!

செல்லும் வழி நெரிசலாலே,
சிக்கும் போக்கு வரத்தினாலே,
காலம் வீணே போவதாலே
கவலையாச்சே கடவுளே!

௨ரிமம் பெறாச் சிறுசுளும்
ஓட்டுது பார் வாகனங்கள்.
உயிருக்கென்ன பாதுகாப்பு!
உண்டோ சொல் குமரனே!

சிவனே யென்றே கிடந்திடவும்,
சேவை செய்ய மறுத்திடவும்,
மூலை தேடிப்படுத்திடவும்,
முடியவில்லை இறைவனே!

உச்சி வெய்யில் தாக்குதப்பா!
மச்சு வெப்பம் இறங்குதப்பா!
விசிறி ஆட மறுக்கதப்பா!
வேகிறேனே சாமியப்பா!

வரவிலொன்றும் மிச்சமில்லை.
உறவுகளும் பச்சமில்லை.
விதிதிருத்தி வாழ்வதற்கே
கதியருள்வாய் கந்தனே!

யாமிருக்கப் பயமேனென
சாமி நீ காட்டுகிறாய்.
நீயிருப்பாய் சிலையாக
நானிருப்பதெப்படி?

கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment