Tuesday, 18 May 2021

நன்றி கெட்ட உலகம்.

நன்றி கெட்ட உலகமடா
பன்றிக் கூட்டம் பழக்கமடா..
பறித்த மரம் சாய்ந்ததிலும்
பழுத்த பழம் தேடுமடா.

கொடுக்கும் வரை கொண்டாடும்.

படுத்து விட்டால் பறந்தோடும்.

கருணன் எனப் புகழ்ந்ததெல்லாம் 

கருணாக்கின் வஞ்சமடா.

வாங்கும் வரை கெஞ்சுமடா
வாங்கிய பின் மிஞ்சுமடா.
கை நீட்டி வாங்கியதை
பொய் பேசி மறுக்குமடா.

நாளெல்லாம் உதவினாலும்
நன்றி அதை எண்ணாது.
இல்லாமல் ஒரு நாளே
இல்லை யென்றால் ஏசுமடா.

காசுக்காக வேசம் போடும்
ஆசை மோச உலகமடா
வாய் பேசும் பேசையெல்லாம்
வாக்கு என்றும் நம்பாதடா.

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 16 May 2021

போற இடம் எங்கோ!

மனசு கெட்டுப் போச்சோ-மனுசா
பழசும் மறந்து போச்சோ-நீயும்
போற இடம் எங்கோ-திரும்பி
பாரு தடம் உண்டோ!

நாக ரீக அருத்தம்-அழிஞ்சு
நாசமாச்சோ நீசனே-சமூக
பழக்க வழக்க நெருக்கம்-மறந்தும்
விலகித் தூரம் ஆச்சோ!

சாமியத்தான் மறந்து-அதனால்
சத்தியமும் மறந்து-வாழும்
பூமியத்தான் மறந்து-வெய்யில்

சுட்டெரிக்க நடந்த?

சோறூட்டக் கருவி-வேர்க்க
வேலை யில்ல சொகுசு-ஆனால்
வாயொழுக எச்சில்-புதுசா
நோயுனக்கு உறவு.

விசத்தையே கொட்டுற-நவீன
விவசாயம் பண்ணுற-அந்த
நஞ்சயே திங்கிற-பாவி
நோயத்தான விதைக்கிற.

காலம் மாறிப் போச்சுணு-பழமைக்
கோலத்த மாத்துற-நரகந்
தேடி நீயேதான்-அய்யோ
திசை மாறி ஓடுற

கொ.பெ.அய்யா.