Wednesday, 31 December 2025

கோபம் பொல்லாதது.

கோபம் பொல்லாதது.

கோபம் பொல்லாதது--அது
கொலை செய்யவும் தயஙகாதது.
சிந்திக்கச் செய்யாதது--நொடியில்
செய்பிழை உணராதது.

அறிவினை மழுக்குங் கோபம்--புத்தி
தெளிவினைக் கலக்கி விடும்
புரிவினைத் தடுக்குங் கோபம்--உண்மை
அறிவினைக் கெடுத்து விடும் .

யோசிக்க மறுக்குங் கோபம்--உற்ற
நேசத்தை மறக்கச் செய்யும்.
தோசத்தைத் தோண்டுங் கோபம்--நிச
வேசத்தைக் காட்டி விடும் 

சமரசம் ஆகாக் கோபம் --மன
சமநிலை சிதைத் தழிக்கும்.
அமைதியைக் கலைக்குங் கோபம் --உள்
ஆன்மாவை அடக்கி விடும்.

விழிகள் சிவக்குங் கோபம் --இரத்த 
அழுத்தம் அதிகம் ஆக்கும்.
இதயத்தை இறுக்குங் கோபம் --செயல்
இயல்பினை சிதைத்து விடும்.

ஆராய அவசரக் கோபம்--அப்புறம்
ஆவதையும் ஆராயாது.
நேர்வதை எண்ணாதக் கோபம்---பின்
பார்வையை மறந்து விடும்.

பகைமைக்கு வித்தாகுங் கோபம்--உறவு
பசுமைக்கு பஞ்சம் ஆக்கும்.
அழிவுக்கும் ஆரம்பம் கோபம்--உயர்
வளர்ச்சியைத் தடுத்து விடும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

ரெட்டைச் சடைக்காரி

ரெட்டைச் சடைக்காரியே

கொல்லுறியேக் கள்ளியே!

வட்ட விழிக் கொள்ளியே--சுட்டு

வாட்டுறியே  என்னையே!


உன்னப் பெத்தவ யாரடி

எனக்கு அத்தை  அவளடி.

மச்சான் எவனோ பாக்கல!

மாமன் குணத்தக் கேக்கல!


முன்னப் பின்ன அறியல

முறையப் பத்தியும் நினைக்கல.

எப்படி நுழைஞ்சக் கனவுல

இப்படிப் படுத்துற உசுறல.


காந்தக் கண்ணோ இழுக்குற! 

காரணம் புரியலக் கவுக்குற. 

சிரிச்சும் சிரிக்காம சிரிக்கிற 

பறிச்சது மனசு பாவன்டி.


இடுப்பு எங்கடிக் காணல. 

மடிப்புச் சுங்கடி மறப்புல.

வெடுக்கு நடையின் மிடுக்குல

படபடக்குது மனசுல.


நடப்பது எதுவோ நடக்கட்டும்.

நடந்தும் நலமே விடியட்டும்.

பழனிச்சாமி அருளாலே

பாலும் பழமும் கிடைக்கட்டும்


காத்துல பாவாடை பத்திரம் பாத்துக்கோடி அள்ளுது.

மானம் போகுமோ அஞ்சாதே!

மாமன் என்னை மிஞ்சாது.


கொரனா ஒழிஞ்சும் போனது

குடும்பம் ரெண்டும் கலந்தது.

கோவில் வாசல் திறந்தது.

ஆவது எல்லாம் ஆகட்டும்.


Saturday, 27 December 2025

சாதனை


சாதனை.

அறிவால் செயலால் உலகம் பயன்பெற சாதிப்பது சாதனை
சாதனைதான் புகழ். புகழே பேர் சொல்லும்.
இறப்புக்குப்பின்னும் வாழ என்ன நீ சாதித்தாய்?

இறந்தபின் உடலோடு பேரும் அழிகிறது.
இருக்கும்வரை அழைக்கத்தான் பேரும் உடலும்.
புகழுடையார்க்கு மரணமில்லை
புகழுடையார் மட்டுமே பேருடன் வாழ்கின்றனர்.

உயிர் இருந்தால் பணக்காரன்.
உயிரற்றால் பிணந்தானே.
பிணத்துக்கு
பேருமல்ல உறவுமல்ல.
உயிருக்குத்தான் உறவும் பேரும்
உடலுக்கல்ல.

உயிர் பிரியும்போதே உலகமும் உன்னை மறந்து போகும்
உயிருள்ள வரைதான் உறவும் உரிமையும்
மரணம் வரைதான் வசதியும் வாழ்க்கையும்
மரணம் வரைதான் பகையும் வெறுப்பும்

மரணம் ஒரு தண்டனையல்ல விடுதலை.
பாவியின் மரணத்தைக்கூட நியாயப்படுத்தல் பாவம்.

கொ.பெ.பி.அய்யா

அண்ணன் என்னடா தம்பி என்னடா!

அண்ணன் என்னடா தம்பி என்னடா!

அண்ணன் என்னடா! தம்பி என்னடா!
கொஞ்ச நாள் உறவினிலே
தன்னோடு ஒருத்தி துணையா வரும்வரை,
பெண்சாதி பிள்ளைகள் 
குடும்பம் ஆகும்வரை
தன்னோட குடும்பம் தனியே பிரியும்வரை,
அண்ணன் தம்பி உறவும் அதுவரைதானடா.

சொந்தம் பந்தம் சுயநலமாகிச் சுருங்கிப் போனதடா.
பற்று பாசம் எல்லாம் விலகி
பகையாய் உறவும் விசமாய் ஆனதடா.
என்ன சொந்தம் என்ன பந்தம்
எல்லாம் கொஞ்சநாள் பழக்கம் போலானதடா.

சின்னஞ்சிறு வயசுலதான்டா.
அண்ணந் தம்பி உறவுந்தான்டா,
அடிச்சாலும் புடிச்சாலும்
துடிச்ச இரத்தன்டா,
அடிபுடியாகிக் கொலைவெறிக் கோலம் ஏனடா?

பள்ளிக்கூடம் போகையில
துள்ளி நாம விளையாடயில
அள்ளி அள்ளி முத்தமிட்ட
அண்ணன் தம்பி உறவுதானடா.
சொல்லிச் சொல்லி வியந்த உறவடா,
சுற்றம் பேசக் கசந்து போனதடா.

தாயவள் சொல்லைக் கேட்டோமடா.
தந்தைச் சொல்லை மதித்தோமடா.
பாய் ஒன்றில்தானே படுத்தோமடா.
பகுத்துண்டு சேர்ந்து மகிழ்ந்தோமடா
வளரும் போதிருந்த
பாசமெங்கடா?
வாழும் போது மட்டும்
வழிமாறிப் போனதென்னடா?

கருவறை ஒன்றில்தானடா
உருவாகிப் பிறந்தோமடா.
ஓருயிரில்த் தானே உதித்தோமடா
பிரிவின்றிப் பாசமாய் வளர்ந்தோமடா.
அந்நியர் எவரும் பகைக்கும் போதிலே
ஒற்றுமைப் பலமா நின்னோமடா.
வாலிபமாகி விளைஞ்சோமடா.
குடும்பங்கள் பலவா கலைஞ்சோமடா.

தின்பண்டம் பகிரயில
தன்பங்குச் சண்டை இல்லடா.
வன்னெஞ்சப் பகையென்ன
சின்னெஞ்சில் தெரியலடா.
பிரிஞ்சிருக்க அறிஞ்சதில்ல
அறிஞ்சதொன்னும் மறைச்சதில்ல.
சொத்துண்ணு பிரிக்கையில
சொந்தம் பந்தம் நிசமேயில்லடா.

கூட்டமா வாழ்ந்தோமடா.
குடும்பமா ஆண்டோமடா.
நிலங்கூடி இருந்தோமடா
நிறைஞ்சது களஞ்சியன்டா.
முழமுழமா பகுந்தோமடா
களஞ்சியமேக் காணோமடா.
மச்செல்லாம் குச்சியாச்சி
மனைபலவா பிச்சாச்சிடா.

பங்காளி என்பவன் பகையாளிதானோடா.
நம்பியிடக் கூடாத நயவஞ்சகந்தானோடா
நண்பன் மட்டும் என்றுமே நல்ல துணைஆவானடா.
அண்ணன் தம்பி பாச மெல்லாம்
அறியாத வேசமடா.

கொ. பெ. பிச்சையா.









Wednesday, 24 December 2025

கரங்கள் கோடி மறித்தாலும்....

கரங்கள் கோடி கூடி மறித்தாலும்

கரங்கள் கோடி கூடி மறித்தாலும்
காலம் ஓடித் தேடி ஒளியாது.
ஓராள் என்று மாறாக எண்ணாதே.
ஒன்று பத்து நூறு ஆயிரம் 
இலட்சம் கோடியெனப் பல்கும்.
ஓரனுப் பரிமாண உண்மை விளங்கும்.

அதிகாரப் போதை கதிமாறி அழிக்கும்.
சதிகாரச் சூதை விதிசாடிப் பழிக்கும்.
வரலாற்றுப் பாதை அரக்கரை இழிக்கும்.
கொலைப் பாவங்கள் காலத்தில் விழிக்கும்.

நல்லவன் எதுவோ வல்லவன் அதுவே.
உள்ளதும் உண்மை வெல்வதும் நிசமே.
சொல்லும் சத்தியம் வல்லமை அதுவே
வெல்லும் சாத்தியம் உள்ளதும் நிசமே.

மக்கள் சக்தி மகத்துவ வெற்றி.
சகத்துவ உத்தி சரித்திர உண்மை.
அகத்துள் ஒருவன் அன்பின் வெற்றி.
முகத்திரை கிழித்து முடிப்பதும் உண்மை

துரியோன் கூட்டம் அரியணை ஆசை.
மதியாத ஆட்டம் புடுங்கியாச்சு பீசை
ஆகாத ஆசையில ஊத்துகிற தோசை.
வேகாத விரசத்தில  வீசுறாங்க கேசை.

கிழட்டு நரிக்கூட்டம் ஓடுதுபார் ஓட்டம்.
விளையாடி முடிஞ்சது கலைஞ்சதவர் ஆட்டம்.
வாலிபச் சிங்கங்கள் வந்தனக் களமாட
காலியிடம் நிறைஞ்சாச்சி நாளையெம் வசமாச்சு.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Wednesday, 10 December 2025

அப்பாவைப் போலயாரு?

அப்பா அப்பாதான்.

அப்பா உன்போல் யாருனு சொல்ல.
ஆண்டவனுங் கூட உன் போல் இல்ல.
சொப்பனமே உனக்கு நானே 
அப்பா உனக்கு எல்லாம் நானே.

நடையைப் பழக்க விரலைப் பிடித்தாய்
உலக வழக்கைச் சொல்லித் தந்தாய்
வளர்ந்து படியேறக் கரம் கொடுத்தாய்
படிக்க வைத்து ஆளாக்க உழைத்தாய்.

விடியலை வேர்வையில் ஏற்றினாய்
படிகளில் ஏற்றி ஞானம் ஊட்டினாய்.
தோள்மீது உயர்த்தி ஞாலம் காட்டினாய்.
நீ காணா உலகை நான்காணச் செய்தாய்

உன்னுயரம் அதனில் என்னுயரம் கண்டாய்.
பின்னுயரம் கண்டு பெருமை கொண்டாய்
கனி கொடுக்கும் வரையும் காத்திருந் தாயோ!
கனிகொடுக் கும்போது நீ பறந்தாயோ!

ஆல மரமாய் நிழல்  தந்தாயே!
நாலும் அறிய நீ நிறைந் தாயே!
என்னென்ன ஆசைகள் என்மீது வைத்தாய்
எனக்காகத் தானே ஓடியோடி 
உழைத்தாய்

திருத்த் தானே வருத்தி நிமிர்த்தாய்
நிறுத்தி என்னை நிமிர்ந்து பார்த்தாய்.
பொருத்திப் புகழோடு வரைந்து வார்த்தாய
செருக்கில் என்னில் பெருமை சேர்த்தாய்.

கோவத்தில் அடித்துப் பின்னே
குழுங்கித் துடித்து அழுவாயே!
தீபம் வாழ்வில் ஏற்ற நீயே!
யோக மெல்லாம் ஏற்றாய் நீயே!

பக்கத்திலே படுக்கவைத்து
பழக்கம் விட்டு ஆற்றுவாய்
கக்கத்தில் தூக்கி வைத்து
கதைக ளெல்லாம் சொல்லுவாய்.

பாவி நான் அடிச்சேண்ணு
நீவி விட்டுக் கெஞ்சுவாய்.
கோவித்ததும் குத்தமுண்ணு
ஆவிக் கொஞ்சி முத்துவாய்.

தப்பு செஞ்ச என்னை நீ!
தண்டிக்காம விட்டுட்டு
ஒப்புக்கு அம்மா முன்னே கண்டிச்சாப்புல நடிச்சுருவ!

நல்லதொரு கூட்டாளி நீ!
நாளெல்லாம் பாட்டாளி நீ!
சுமைதாங்கிக் கல்லா நீ!
சுமந்து சுகம் கண்டாய் நீ!

என்ன நான் கேட்டாலும் நீ
இல்லயிண்ணே சொல்லமாட்டாய்.
கையில் காசு இல்லைண்ணாலும்
கடன் வாங்கக் கூச மாட்டாய்.

கொழுத்து நின்ன ஆலமரம்
உலுத்தப் பின்னே ஓய்ந்தது போல்
விழுது என்னை நம்பினாயோ!
தொழுது என்னைக் கடன் செய்தேனோ!

அப்பாவப் போலொரு 
தோழன் இல்ல 
அப்பாவப் போல் நல்ல 
ஆசானும் இல்ல
அம்மாவப் போலே சொல்ல 
ஆகாயம் நீயே அப்பா!

உன் நிசத்தை மதியாத நான்
உன் நிழலைக் கண்டு தொழுகிறேன்.
இருக்கும் போது புரியாத உன்னருமை
இல்லாத போதே அறிந்தேன் உன் பெருமை.
சும்மா சொன்னாப் போதாதப்பா.
அம்மை அப்பன் நீதானப்பா!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Wednesday, 3 December 2025

தனிமை இனிமை

கனவில் கலந்தோம்.

தனிமையில் நான் நினைவில் நீ 
இனிமையில் நாம் கனவில் கலந்தோம்
இளமை விருந்தில் இணைந்து உண்டோம்.
நிலைமை மறந்து நினைவை இழந்தோம்.

உலகைத் தொலைத்தோம் நிலவைப் படைத்தோம்.
நிலவில் மிதந்தோம் நித்திரை மறந்தோம்.
சொர்க்கம் கண்டோம் சுபமே உணர்ந்தோம்.
பக்கம் நெருங்க நெருங்கி ஒன்றுணர் வானோம்.

ஆசை கரைந்து மோகம் நிறைந்து
ஓசை மறைந்து பாசை மறந்து 
இலேசாகி ஈருடல் ஓருருவாகி
உலாவி வானில் உயரேப் பறந்தோம்.

காட்சிகள் அழித்ததுக் கண்கள்
கற்பனை ஒளித்தது எண்கள்
சூன்யம் ஆனது அண்டம்
சுதந்திரம் ஒன்றே கண்டோம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


சுகமான தோல்விகள்

சுகமான தோல்விகள்

நிலவிடம் தோற்கிறேன்.
------------------------------------------
நீருள் சிரிக்கும்
நிலவினைத்தானே
நீந்திப் பிடிக்க முயன்றிடும் போரில்
நித்தமும் நானும்
தோற்றுத்தான் போகிறேன்.
=====================================
தாயிடம் தோற்கிறேன்.
-----------------------------------------
பசியில்லை அம்மா எனக்கு
பால் மட்டும் போதுமென்றாலும்
புசிக்கும் வரையும் ஓயாத
பெற்றத் தாயிடம் நானும்
தோற்றுத்தான் போகிறேன்.
=====================================
காதலியிடம் தோற்கிறேன்.
-----------------------------------------------
கனிந்த மொழியாள்
காதலி என்னாளிடம்
நினைந்தொரு கோபம் காட்டிட முயன்றும்
அணைந்திடும் அன்பில்
அன்றாடம் நானும்
தோற்றுத்தான் போகிறேன்.
======================================
மழலையிடம் தோற்கிறேன்.
--------------------------------------------------
சிரிக்கும் மழலை
சிந்தும் மொழியால்
பறித்திடும் ஆசை பால்கோவா அதிலே
முறிந்தும் வீழ்ந்தே
முழுமையாய் நானும்
தோற்றுத்தான் போகிறேன்
=====================================
நண்பனிடம் தோற்கிறேன்.
----------------------------------------------
துன்ப வேளையில்
தோள் தந்தானை
இன்பம் கண்டு மகிழ்ந்திடும் நாளில்
மறந்தும் தனிமை
கொண்டாட நானும்
தோற்றுத்தான் போகிறேன்.
====================================
மகனிடம் தோற்கிறேன்.
------------------------------------------
அன்றாடச் செலவுக்கு
அணுகிடும் மகனை
அதட்டித் திருத்தத் துணிந்திடும் போதில்
அப்பா என்றதும்
தப்பாது நானும்
தோற்றுத்தான் போகிறேன்.
======================================
மகளிடம் தோற்கிறேன்.
-----------------------------------------
கொஞ்சும் மகளிடம்
அஞ்சாமல் அழைத்து
காதல் கண்டு கடிந்து மொழிகையில்
கண்ணீர் விழிகள்
மொழியில் நானும்
தோற்றுத்தான் போகிறேன்.
====================================
மனைவியிடம் தோற்கிறேன்
---------------------------------------------------
ஆருயிர் மனைவி
அவளிடம் நயந்து
ஆகும் செலவுகள் அதிகம் என்றால்
பிள்ளைகள் காட்டி
பேசிட நானும்
தோற்றுத்தான் போகிறேன்.
===================================
தமிழிடம் தோற்கிறேன்.
-----------------------------------------
எழுதி என்னதான்
கிழிக்கப் போகிறேன்
என்றே பேனாவை ஒளித்தே வைத்தால்
கருத்துக்கள் வந்து
உறுத்திட நானும்
தோற்றுத்தான் போகிறேன்.
==================================
கர்வத்திடம் தோற்கிறேன்.
----------------------------------------------
பிறரைப் படித்திட
பேணாக் கர்வம்
கருத்துப் பஞ்சம் கவிதை படைத்திட
வருத்தும் போது
தேடிடும் நானும்
தோற்றுத்தான் போகிறேன்.
==================================
அன்பரிடம் தோற்கிறேன்.
------------------------------------------
அன்பும் திறமையும்
அகிலம் நிறையவும்
அடையும் வெற்றியும் அவரே கிட்டவே
விட்டும் கொடுக்கலாம்
வெற்றி உரியவர்க்கும்
தோற்றும் வெல்லலாம்
தோல்வியும் சுகமே!
=================================
தோல்வியும் சுகமே!
-------------------------------------
தோல்வியும் கூட
சுகமாய் இருக்கும்
விட்டுக் கொடுத்தும் வாழும் போதே.
அதுதான் தோல்வி
எனறால் நானும்
ஆயுள் முழுவதும் 

கவிஞர். கொ. பெ. பிச்சை யா.

அம்மா

அம்மா

அம்மா எனும் சொல்லுக்கு
அகராதித் தேடல் எதற்கு?
அவள் மொத்த அன்பதற்கு.
அவள் விடுத்து பொருளெதற்கு?

என்னோவு அவள் வலிக்கு
தன்னிலை மறந்தாளுக்கு
என்ன பொருள் சொல்வதற்கு
இருக்குமோ அகராதிக்கு?

என்னழுகை வேண்டலுக்கு
கண்ணீரோ அவளுக்கு!
என்ன பதம் காண்பதற்கு
எழுத்திருக்கும் நூலிற்கு?

அன்னையவள் பாசத்திற்கு
அடுத்தென்ன இணையிருக்கு?
அவள் கொடுத்தக் கடன் கணக்கு
அடையுமோ சொல் எனக்கு!

அம்மா தந்தப் பால்க் கணக்கு
அதற்கென்ன எழுத்திருக்கு?
அதியற்புதத் தடுப்பு மருந்துக்கு
அதற்கென்ன விலையிருக்கு?

தூங்காமல் விழித்ததற்கு
தூக்கியென்னை அணைத்ததற்கு
ஏங்கி வாசல்க் காத்ததற்கு
ஏது செய்தேன் அவளுக்கு?

தூளி சொன்னப் பாட்டுக்கு
தோள் சுமந்தப் பாடுக்கு
வாழ்ந்த அவள் கருவறைக்கு
வரிக்கென்ன கணக்கிருக்கு?

என் பசி உணர்ந்தாளுக்கு
தன் பசி மறந்ததெதற்கு?
ஊட்டியாளை ஊட்டுதற்கு
ஒரு கடன் தீர்ந்ததெனக்கு.

கழுவிக் காத்தத் தாயாளுக்கு
கடன் குறையச் செய்தெனக்கு
வேறுக் கடன் முடிப்பதற்கு
வறுமைப்பட்டேன் காலத்திற்கு.

மொழி தந்தாள் புரிவதற்கு.
வழி சொன்னாள் வாழ்வதற்கு.
பழிநேராக் காத்தாளுக்கு-கடன்
கழிப்பதெப்போ ஆத்தாளுக்கு?

மஞ்சம் நான் அயர்வதற்கு
பஞ்சமான வள்ளலுக்கு
வெஞ்சாமரம் வீசுதற்கு
வேண்டலும் தானெனக்கு!

எனையீன்ற தாயுனக்கு
என் பிள்ளை பரிசுனக்கு.
உன் பெருமை சொல்லுதற்கு
உன் பேரே காப்பதற்கு!

கடன் பட்டேன் தாயுனக்கு!
கலங்குதே நெஞ்செனக்கு!
உடன் பட்டேன் நானுனக்கு
உற்ற தெய்வம் வேறெதற்கு?

தாயினும் சிறந்ததற்கு
தவம் உண்டோ பெறுவதற்கு?
கோயிலும் நீ எனக்கு!
குல தெய்வம் நீ எனக்கு!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Tuesday, 2 December 2025

காமராஜர்

தமிழ் குலத்தின் நட்சத்திரம்.

தமிழர் குலத்தின் நம்பக நட்சத்திரம்.
நம்ப முடியாத அதிசய விசித்திரம்.
ஈடாகாது எந்த மனிதரும்--வளர்
நாடார் குல அடையாளம் காமராஜர்.

எத்தனை உலகம் இன்னும்
தோன்றினாலும்
அத்தனை மனிதரில் மொத்தம் தேடினாலும்
சத்தியம் யாரவர் சரிநிகர் காமராஜர்
சாத்திய மாகுமோ சரித்திரம் காட்டு மோ!

விருது நகர் கண்ட விருது தானவர்.
அரிதானவர் அவர் போல் யார் மனிதர்?
நெறிதவறாப் புனிதர் நேர்மை  இனிதர்
நிசமாய் கண்ட காமராச ராவார்.

தாயானாலும் தள்ளி வைத்தவர்.
தேயம் பெரிதெனத் தனியே வாழ்ந்தவர்.
தன்னலம் பாராது தமிழகம் ஆண்டவர்
தனக்கென யெதுவும் தானே தேடாதவர்.

நாடாண்ட வம்சம் பாண்டியக் குலத்தின்
நாடார் பெருமை நா

படிக்க வைத்துப் பாடம் சொன்னவர்.
விடியலைக் காட்டி வேளாண்மை காத்தவர்.
அணைகளைக் கட்டி வெள்ளம் தடுத்தவர்.
மனையும் தொழிலும் தந்த தந்தை யவர்
.
பிரதமப் பதவியை பெரிதென மதித்தவர்
பிறரைத் தேர்ந்தே சரியென விதித்தவர்
ஏழையாய் பிறந்து ஏழையாய் ஆண்டு 
ஏழை சிரிப்பில் இறைவனாய் ஆனவர்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


Monday, 1 December 2025

கொல்லம்பரும்பு

கொல்லம்பரும்பு

வெல்லங் கரும்பு வாசனை
கொல்லம் பரும்பு ஊரினை
சொல்ல விரும்பும் பாட்டினை
மெல்லிசை அரும்பப் பாடுகிறேன்.
சொல்லிசைப் பிச்சையா சூடுகிறேன்.

நெல்மணம் வாசம் நெடுவயல் தோட்டம்
நல்மனம் பேசும் நடுவனர் கூட்டம்.
நீர்வளம் மேவும் ஏரிகுளங்கள் சூழும்
நேர் குணம் யாவும் சீர்வளம் ஆளும் 
ஓர்ஊர் கூறும் உலகம் கொல்லம் பரும்பு

ஊராளும் தேவியர் சந்தண மாரிகள்
ஊர்காவல்  ஐயன் கருப்பு சாமி கள்
மேலும் உச்சி பத்திர காளிச் செல்வி 
வாழும் ஆளும் நல்லருள் வாரி நல்கி
காக்கும் தெய்வங்கள் வாழி!வாழி!

சுற்றம் ஒன்றாய் பற்றும் நன்றாய்
உற்றம் உறவு உரியோர் வரவாய்
கற்றுக் கனிந்தோர் கடமை பணிந்தோர்.
நல்லோர் கூடி வல்லோர் மேவி
உள்ளோர் எல்லாம் உதவுவார் தேடி.

ஊரென்ற உணர்வு ஊரொன்ற வாழ்வு
யாரேன்று வினவா சீரொன்ற வாழ்வு
ஊரென்ற பேரை மார்தட்டிச் சோல்வார்.
பாரொன்ற வாழ பறைசாற்றி வெல்வார்.
ஏர்த்தொழில் மறவா ஊர்வாழ வாழ்வார்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Friday, 28 November 2025

ஆலமரம்.

ஆலமரம்

குளக்கரையில் ஒரு ஆலமரம் --செழித்து 
கிளை பரப்பி வாழும் மரம்.
நிழல் அகற்றி இலை நிரப்பி--அகன்று
வளம் கொழித்து ஆளும் மரம்

தேடி வந்த பறவைகளை--ஒன்றாய்
கூடி வாழ்ந்த உறவுகளை.
ஓடி வந்த கழுகு ஓன்று --உறவை
ஓட்டி விடப் பார்க்குதம்மா.

கலைத்து விடக் கத்துதோ--பந்தம்
உலைத்துக் கெடச் சுற்றுதோ.!
பழுத்து விட்ட இலைகளே--உழுத்து
நிலை குலைந்து உதிர்ந்தனவோ!

தேடி ஓடிக் கலைத்துப் போன--திருட்டுக்
கழுகு மட்டும் பறந்தது.
பொன் மனத்துச் சொந்தங்களை--எந்த
வன்மனந்தான் குலைத்திடுமோ!

ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும்--நன்றி
ஆராரும் மறந்தும் போனாலும்.
அம்மாவால் காத்த மரம்--இதை
ஆரசைக்கக் கூடும் அம்மா.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Monday, 24 November 2025

உழைத்து வாழ்க!

தமிழைப் பிழைக்காதே!

உழைத்து வாழ வேண்டும்---பிறர்
உழைப்பில் வாழ்தல் பாவம்.
பிழைத்துப் பேசுந் தமிழில் --பிற
மொழிக் கலப்பென்ன இலாபம்

தாய்மொழி தவிர்த்தல் பாவம்--பேசி
பிறமொழி இழித்தலும் நோகும்.
தாயை மதிப்பது யோகம்--அதுபோல்
தாய்மொழிக் காப்பதும் தாகம்.

தாய்மொழி கழிப்பது வேசம் --பெற்ற 
தாயை இழிப்பதும் மோசம்
பிறமொழி கலந்து பேசி--தனது
பிறப்பை இழிப்பாள் தாசி.

தூய்மைப் பாசம் தாய்மை--தாய்
வாய்மொழி மணக்கும் மேன்மை,
நோய்மைப் பிறமொழி வாசம்--ஈன்ற
தாய்மை மறக்கும் நாசம்.

அம்மா என்ற சொல்லில்---உயிர்
ஆன்மா உயிர்க்கும் உள்ளில்.
சும்மாப் பிறமொழி மோகம்--வீண்
சுமையாய் சுமக்கும் ரோகம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


Sunday, 23 November 2025

சின்னக்குட்டி.

சின்னக்குட்டி.

அடியே சின்னக்குட்டி செல்லம்மா!
விடிஞ்சிரிச்சா சொல்லம்மா
விடியலுனு சொன்னாங் களே
விடிஞ்சிரிச்சா பொன்னம்மா.?

அடைஞ்சு போன ஆதவனோ!
அடைஞ்சி எங்க தொலைஞ்சானோ!
காந்தி சொன்ன விடியலைப் போல்,
காரிகையரும் காண்பா ரோ!

நடு இரவே ஆனாலும்
நகை யோடு நங்கையர்
சுதந்திரமாய் உலாவி வர
நிரந்தரம் விடிஞ்சிரிச்சா.?

பால் குடிக்கும் பிஞ்சுகளை
பாலியல் வன் கொடுமை.
காமக் கொடூ ரர்களின்
களி யாட்டம் குறைஞ் சிரிச்சா?

கொலைக் களவு கொள்ளைகளும்,
நிலை குலைந்து முடியவில்லை.
விலை இல்லா சலுகைகளும்,
தலை குனிந்து முடங்கவில்லை.

அடங்க வில்லை விபத்துக்களும்,
அரங்கேறுது தினம் தினமும்.
அடக்கிட நாளை இல்லை.
விடியலுக்கு வேளை இல்லை.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


.


Friday, 21 November 2025

கரை மேல் காக்க வைத்தான்.

கரை மேல் காக்க வைத்தான்.

தரை மேல் பூக்க வைத்தான்--இறைவன்
கரை மேல் காக்க வைத்தான்--என்னவரை
தண்ணீரில் ஓட விட்டான்--பெண்ணை
கண்ணீரில் கரைய விட்டான் 

கட்டிய கணவர் கடலில் உழைக்கிறார்.
தொட்டில் குழந்தை தூக்கத்தில் விழிக்கிறான்
தட்டில் சோற்றைத் தட்டிக் கழிக்கிறான்
தந்தை எங்கென எட்டி உதைக்கிறான்.

வைகறைக் காலைப் பொய்கரைப் போனவர்
மைபொழு தாகியும் மறுகரைக் காணோம்
சிங்களப் பாவியர் செய்வார் பிணை
வங்கக் காவல் ராமசாமி துணை.

நிச்சயம் ஆழ்கடல் நீளும் எல்லை
இலச்சத் தீவை இழந்ததால் தொல்லை.
இறைவன் படைத்த கடலுக்கும் சண்டை 
உடைவது நாளும் மீனவர் மண்டை.

உலகத்து உறக்கம் கலையவும் இல்லை.
கலகத்தின் கலக்கம் விலகவும் இல்லை
உழைப்பவர் கவலை ஓயவும் இல்லை.
பிழைப்பது எப்படி புரியவும் இல்லை.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Thursday, 20 November 2025

மீனவர் உலகம்.

மீனவர் உலகம்.

வானே காவல் தானேத் துணையாக
மீனே வாழ்வாக கரையே கனவாக
நாளும் பிழைக்கும் மீனவக் கூட்டம்.
ஆளும் அரசுகள் வேணும் நோட்டம்

வேர்வைக்  குளியலில் விளைந்த உப்பு
கரைந்து கடலில் நிறைந்தது உவர்ப்பு
கரை சிந்தும் கண்ணீர் கடலில் கலப்பு.
தரை வந்தே சுவைப்பர் நந்நீர் இனிப்பு

பார்வை யாவும் வீசிய வலையில்
தீர்வை இறைவனில் தேடும் பிழைப்பில் 
வாழ்வைத் தினமும் தொடுகின்ற நிலையில்
வாழும் சமூகம் மீனவர் கனவில்.

நாட்டுக்கு உணவளிக்கப் போருக்குப் போகிறார்.
சீட்டுக்குப் பணமளிக்கக் கடலுக்குள் நோகிறார்.
தனக்கென என்னதான் தன்பாடு தேடுகிறார்.
மனக்குறை நோவுக்கு  யாரைத்தான் நாடுகிறார்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.



Wednesday, 19 November 2025

எங்கோ மின்னொளி தோணுதே

தங்கம் தாரகை நாணுதே!

எங்கோ மின்னொளி தோணுதே!
தங்கம் தாரகை நாணுதே!
திங்கள் எழுந்திடத் தயங்குதே!
எங்கும் ஒளிமயம் விளங்குதே!

பொழுது புலருதோ! மலருதோ!
நிழல் வளருதோ! நீளுதோ!
வழி தெரியுதோ! புரியுதோ!
விழி !பேசுதோ! கூசுதோ!

அதி காலைப் பொழுதென அகவுதோ!
புது வேளை நாளெனக் கூவுதோ!
விடியல் தானென வாசல் திறந்ததோ!
வீதிகள் கோலங்கள் நிறைந்ததோ!

காலங் காட்டி நேரம் மறந்ததோ!
கோலம் பார்த்து ஓரம் மறைந்ததோ!
நாளும் இதுபோல் இல்லையே!
யாவும கடந்தது எல்லையே.!

இதுவவென்ன நிகழ்ந்தது அதிசயம்..
எதுவெனக் கசிந்தது இரகசியம்.
புதுப்பெண் ஒருத்தி வரவுதான்.
அதுவெனப் புகழ்ந்தது தரவுதான்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Tuesday, 18 November 2025

செம்மொழி வாழ்த்து.

செம்மொழி வாழ்த்து.

முதல் ஒலியாம், 'அம்மா '
வளர் மொழியாம் செம்மை
வாய்த்தயிரு, 
கண்ணாம், கருவிழியாம், 
தமிழே வாழி!
கன்னல் இனிமை, வளமை, 
நாளும் இளமை, 
தமிழே வாழி!

பிறக்கும் பொழுதே பிறக்கும் ஒலி
பிறக்கும் உறவு அம்மாவாம். 
சிறப்பிதுபோல் உண்டோ!
பிறமொழி ஏதும் சொல்வீரோ!
உறியது செம்மொழி 
தமிழே வாழி!.

அறம்பொரு ளின்பம் 
அதன்பின் பெறும்பேறும்,
திருக்குறள் பொதுமறை 
ஞாலப் பெருமை 
தமிழே வாழி!
அனைத்தும் திறமாய்,
அமைந்தும் வளமாய் 
அவனியில் வாழும் 
அருமைத் தமிழே வாழி!

பன்மொழி ஏற்றுப் 
பதித்த இலக்கியங்கள், 
வண்பொலி வேற்றி 
வளர்ந்துமே 
தன்னிலைத் திண்ணமும் 
தேறியும் முன்னிலைப் 
போற்றியும் செந்தமிழ் 
வாழி வழுத்து!
வாழி!வாழி!வாழிய 
செந்தமிழே வாழி!

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

செல்லக் குழந்தைகளே!

பாப்பாப் பாட்டு.

செல்லக் குழந்தைகளே
வெல்லக் கட்டிகளே!,
நல்லப் பேரெடுத்து
நாளைவழி நடத்துவீர்!

காந்தித்
தாதாப் போல உண்மை 
கட்டாயம் பேச வேணும்--நீ
சாந்தமாக அவர்போல 
சரித்திரம் படைக்க வேணும்.
அகிம்சை யெனும் ஆயுதமே--பொது
அறப்போர்கு கொள்ள வேணும்.

பாட்டெழுதிப் பாரதி போல்
பாரதத்தை மீட்டது போல்--உலக
நாட்டு மக்கள் நலம் வாழ
நலம்பாடிக் காட்ட வேணும்.
படைக்கப் பட்ட அத்தனையும்--சொந்த
உடைமை போல் காக்க வேணும்.

உரிமைக் காகப் போராடி
உயிர் நீத்த  உத்தமர்கள்--நமக்குப்
பெற்றுத் தந்த சுதந்திரத்தை
பேணி நன்றுக் காக்க வேணும்.
சனநாயகம் உயிர் மூச்சை--பாரில்
சமூகத்தில் போற்ற வேணும்.

வீடுகளே நாடுகளாம்
நாடுகளே மாநிலங்கள்---ஒன்றிய
உலகமே மைய்யமாக
ஓராட்சி ஆளவேணும்
மக்கள் ஒன்றுகூடி--- அமைதியில்
ஓரணியாய் வாழவேணும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Monday, 17 November 2025

கனவு காணுவீர்

கனவு காணுவீர்!

கனவு காணுவீர்! கனவு காணுவீர்
புதிய பாரதம் கனவு காணுவீர்!
கலாமின் இளைஞர் காந்திய இந்தியாக் கனவு காணுவீர்!

விதியென வெம்பி வீணாகிக் கிடக்காமல்,
கனவு காணுவீர்! கனவு காணுவீர்!
உலகின் முதன்மை உன்னத இந்தியாக் கனவு காணுவீர்! 
கலாமின் கனவு நினைவாகிடக் கனவு காணுவீர்.

ஊழல் ஓழிந்த உன்னத உலகைக் கனவு காணுவீர்.
ஆளுமை உண்மை  ஆளும் நன்மை
அடையக் கனவு காணுவீர்.
மேலும் மனிதம் வாழும் புனிதம் கனவு காணுவீர்.
நாளும் புதுமை போலும் இளமை இந்தியாவைக் கனவு காணுவீர்

ஏழ்மை யில்லா உலகினைக் கனவு காணுவீர்! 
இந்தியத் தலைமை ஏற்கு முலகைக்
கனவு காணுவீர்! 
அறிவியல் மேலாண்மை இந்தியாவைக் கனவு காணுவீர்.
பாழ்மை யில்லாப் படைப்பு உலகைக் கனவு காணுவீர்! 

இயற்கை வேளாண்மைக் கனவு காணுவீர்!
தரிசில்லாப் பசுமைப் பூமிக் கனவு காணுவீர்! 
பசுமை யெங்கும் பரவிய நிலங்கள்
கனவு காணுவீர்! 
நதிக ளெலாம் கைகோர்த் தோடிடக்
கனவு காணுவீர்!

வரண்ட பூமி வையம் காணாக் கனவு காணுவீர்.
பரந்த வயல்கள் பாரெங்கும் பரவக் கனவு  காணுவீர்.
பகைமை அறியாப் பாச உலகைக்,
கனவு காணுவீர்! 
சுயநலம் இல்லாச் சுற்றம் சூழக் கனவு காணுவீர்!

அச்சம் மறந்த உலகைக் காணக்
கனவு காணுவீர்! 
வீடுவாசல் பூட்டிடா விடுதலை காண
கனவு காணுவீர்! 
நடுச் சாமமும் பெண்கள் நடமாடிடக்
கனவு காணுவீர்! 
நகைப் பணம் ஆசை ஒழியக்  கனவு காணுவீர்! 

விலைவாசி ஆளுமை விவசாயி ஆளக் கனவு காணுவீர்! 
வேளாண்மைச் செருக்குத் தாளாண்மைக் கனவு காணுவீர்! 
வேலையிலா அவலம் ஒழியக் கனவு காணுவீர்! 
உழையாத் திருடர் உழைத்து வாழக்
கனவு காணுவீர்! 

இலவசச் சலுகை  ஏங்காச் சமூகம் கனவு காணுவீர்! 
விலையில்லா ஓட்டு விளங்கும் அரசியல் கனவு காணுவீர்!
பிச்சைக்கு அலைந்திடும்  பாவம் ஒழியக் கனவு காணுவீர்!
நடைபாதைக் குடும்பம் நாடறியா 
உண்மைக் கனவு காணுவீர்!

சமாதானம் சமத்துவம் உலகைக்
கனவு காணுவீர்!
சாதி மதப் பேதம் ஓழியக் கனவு காணுவீர்! 
அந்நியம் மறந்த ஒன்றியம் உலகை
கனவு காணுவீர்!
எல்லோ ரெல்லாம் பெற்றோ மென
கனவு காணுவீர்!

பாலியல் வன்கொடுமை வேறோ டழியக் கனவு காணுவீர்! 
கொலைக் களவுக் கொடுமைக் குற்றம் நீங்கக் கனவு காணுவீர்! 
தனியொரு மனிதர்கும் உணவிலா வறுமை ஒழியக் கனவு காணுவீர்!
பிணி யில்லா உலகம் பேறாய்க் காண கனவு காணுவீர்! 

வானங் கீழேவாழும் உயிர்கள் யாவும் உறவெனக் கனவு காணுவீர்! 
நல்லோர் வல்லோர் நாடாளும் உண்மை கனவு காணுவீர்!
காந்தி காமராசர் கக்கன் போன்ற
கடவுள்கள் ஆளக் கனவு காணுவீர்!
இளைய பாரதம் இதுவே சமயம்.
இப்போதே கண் விழியுங்கள்.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

வாய்ப்பு

வாய்ப்பு 

வாய்ப்பு வாய்க்கும் ஒரு முறை
வருந் தருணமும் ஒரு முறை
போனால் திரும்ப வாராது
ஆனால் அதுவே உனக்கான நேரம்.

தானாத் தானே அழைக்கும் 
வீணாப் போனாத் தொலைக்கும்.
யோகம் இருந்தால் திரும்பும்
ஆகுமென்றால்  மறுமுறை விரும்பும்.

வாய்ப்பு என்பது மழையது போல
ஏய்க்கும் பலமுறை பேய்வது போல
அதனால் மெத்தனம் கூடாது வீழ
எதனால் என்பதை யோசிக்க ஆழ.

தருணம் அது கணப்பொழுதுச் சலனம்
திரும்பாத சகுனம் அழுதென்ன பலனும்
மடியில் விழ நொடியில்  தவறக் கரணம் 
விடியல் முடிந்தும் தொடராது சரணம்.

வாய்க்கும் வாய்ப்பு ஒரு முறை
வாய்த்தது அதனை பற்றி அடை
வரவை விட்டு வருகைக்குக் காத்திராதே
இறைவன் ஆணை இதுவென விடாதே.

கவிஞர்.கொ. பெ. பிச்சையா.

Saturday, 15 November 2025

மனிதனைத் தேடி.........,...........!

மனிதனைத் தேடி,...............!

மனிதன் எங்கே வாழ்கிறான்
மனிதனைத் தேடி அலைகிறேன்.
மனிதன் போன்ற படைப்புக்களில்
மனதனைத் தொலைத்தே தேடுகிறேன்.

மனிதன் என்ற அடையாளம் 
மறந்து தொலைத்தான் இறைவனோ!
மனிதர் போன்ற படைப்புக்களில்
மனதை மறந்து விட்டு விட்டான்

மனிதரில் மனிதனைத் தேடுகிறேன்
இனம் தெரியாமல் வாடுகிறேன்.
ஆறறி வொன்றில் ஓரறிவை
தூரறிவாகத் துடைத்து விட்டான்.

மனதே இல்லா ஓருருவை
மனதன் என்றும் நம்புவதோ!
மனமும் குணமும் இருந்தவரை
மனிதன் என்றே வாழ்ந்திருந்தான்.

அன்பும் கருணையும் இரக்கமும்
பண்பும் பழக்கமும் அடையாளம்.
எலும்பும் தோலும் போர்த்தியதால்
உலவும் ஓரினம் மனிதமாமோ!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Friday, 14 November 2025

நிமிர்ந்து நில்லடா தம்பி!

நிமிர்ந்து நில்லடா தம்பி 

நேரம் நலமே நமிர்ந்து நில்லடாத் தம்பி!
ஊரோடு நீ உறுதிக் கொள்ளடாத் தம்பி! 
நேரும் யாவும் உன்வச மாகுந் தம்பி! 
யாரும் வரட்டும் வெற்றி உனக்கே தம்பி! 
துணிந்து தொடர்ந்து செல்லடாத் தம்பி!
பேரும் புகழாகி வெல்லடாத் தம்பி!

தருணம் நிகழ்வதும் தாராளம் அல்ல
வருணம் போலதும் வருகையும் அல்ல.
எப்போது வருமோ எவரும் அறியார்
அப்போது அதுவுன் கதவைத் தட்டும்
திறந்து பாரு வாய்ப்பதைச் சொல்லும்.

உன்னை நம்பித் தன்னைச் செலுத்து.
முன்னைப் பின்னை யோசனை நிறுத்து.
தருணம் அழைப்பதைத் தவற விடாதே.
கரணம் தப்பிக் காரியங் கெடாதே.
திரும்பாது மீண்டும் இழந்து விடாதே.

காலம் வரையும் கோலம் மாறாது
வாழும் முறையும் நாளும் தீராது.
எண்ணம் மாறி வண்ணம் நேராது
திண்ண மாகினால் எண்ணம் சோரது.
தருணம் இதுதான் மீண்டும் வராது.

கவிஞர். கொ. பெ.பிச்சையா.

Thursday, 13 November 2025

உள்ளம் ஒரு கோவில்

உள்ளம் ஒரு கோவில்.

உள்ளம் ஒரு கோவிலாம்.
உள்ளே உள்ளான் இறைவனாம்.
உள்ளம் தூய்மை யானதால்
உள்ளே வந்தான் இறைவனாம்.
கள்ளமில்லை கபடமில்லை
உள்ளிருக்கும் அவனால்.
பள்ளிக்கூடம் உள்ளேதான்
சொல்லித்தரும் சன்மார்கம்.

ஒளி நிறைந்த உள்ளம்.
வழி திறந்த இல்லம்.
மூடாத ஆலயம்.
வாடாத மாலையாம்.
ஓதாத மந்திரங்கள்.
வேதங்கள் பசனைகள்.
ஓயாத பூசைகளும்
தேயாத திருவிழாவாம்

அங்கிங் கெண்ணாது
ஆண்டவன் அவனையே
எந்நாளும் எப்போதும் 
என்னையே தொழுகிறேன்.
என்னுள்ளே இருக்கிறான்.
எங்கும் நான் செல்லேனே
உறைகிறான் என்னுள்ளே
இறைவன் எனை உணர்கிறேன்.

உள்ளத்துள் ஒளிர்கிறான்.
இல்லமதில் மிளிர்கிறான்.
வள்ளல் அவன் வாழ்கிறான்
அள்ளி யள்ளி வழங்குகிறான்
தெய்வீகம் நானானேன்.
திருமகன் ஆகினேன்.
பெய்வதும் அருள் மழையில்
மெய்வழியே நானானேன்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Wednesday, 12 November 2025

உன் வீடப் பாரு!

உன் வீடப் பாரு"

உனக்குனு ஒரு வீடு 
இருக்குனு தெரியுமா?
ஊருல உலகத்துல எவன் 
எப்படினு அலையாத.
ஏனிந்த ஆராய்ச்சி எதற்கிந்த 
வீண் பேச்சு.
அடுத்தவன் வீட்டுல 
மூக்கை நுழைக்கிற எதுக்கு?

வீட்டப் பாரு எங்கெங்கே 
ஓட்டை இருக்குனு பாரு. 
ஊரென்ன பேசுது 
உறவென்ன சொல்லுது கேளு
வீடு வீசுது கேட்கக் கூசுது  
வெளியில என்ன மோப்பம்?
உன்னோட அழுக்கு 
ஊரெல்லாம்  சிரிக்குது பாக்குது.

ஊரான் வீட்ட எட்டி எட்டிப் 
பார்க்குற நாயே நீ!
உன் வீட்டப் பாருடா 
பயலே பேயே நீயே!
அடுத்தவன் மனச 
அழவச்சு ரசிக்கிற உனக்கு.
கெடுத்தவன் கேடுக்கு 
கடவுளின் தீர்ப்பும் இருக்கு.

நினைச்சுப் பாத்தா நெஞ்சம் 
பதறுது கொதிக்குது பாவி
கெடுத்தே திரியும்  வஞ்சகப் பேய்கள்
அலையுதிங்கே சாமி.
பசுத்தோல் போர்த்தி புலிப்போல் 
பாயும் தெரிஞ்சுக்கோ!
பார்த்துப் பழகி பாதை விலகி 
சமத்தா வாழனும் அறிஞ்சுக்கோ

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Tuesday, 11 November 2025

வெறி கொண்டு முன்னேறு.

வெறி கொண்டு முன்னேறு.

வெறி கொண்டு முன்னேறு.
நெறி கண்டு உன்னோடு.
இலக் கொன்று வைத்துக்கொள்.
இலட்சியம் நோக்கிச் செல்.

அவலங்கள் அவமானங்கள்
அதுதான் வழிகாட்டிகள்.
சபலங்களைக் கடந்து செல்
சன்மானங்கள் தூரமில்லை.

அக்கம் பக்கம் திரும்பாதே
அது உன்னைத் திசைமாற்றும்.
சக்கரங்கள் கால்கள் சுழற்று
நிற்பதற்கு நேரமில்லை.

நோகாமல் நுங்கில்லை
வேகாமல் சோறில்லை
நிழல் தேட முயலாதே
உழைப்புக்குத் தோல்வியில்லை.

வெற்றியாளர் வரலாறு
கற்றுநீக் கரையேறு
வெற்றுக் கதைப் பேசாதே
பற்றியதை விட்டிடாதே.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

வாழ்க்கைக் கணக்கு

வாழ்க்கைக் கணக்கு.

நல்லோர் சேர்க்கை கூட்டிக் கோ!
தீயோர் உறவைக் கழித் துக்கோ!
அறிவை நாளும் பெருக்கிக் கோ!
நேரத்தை நலமாய் வகுத்துக் கோ!
இன்ப துன்பங்கள் சமமாக்கு.
இதுதான் வாழ்க்கை அமைச்சுக் கோ!

பழக்கத்தைப் பொறுத்தே பண்பாடு.
பாதையும் அப்படி நிலைப்பாடு.
பூவைப் பொறுத்தே மணம் நாறும்.
பழக்கத்தின் வழியே குணம் மாறும்.
பழக்க தோசமே இனங் கூறும்.
நல்லதும் தீயதும் மனம் போலும்.

வாழ்வந் தாழ்வும் இரு பாகம்.
பகலும் இருளும் சம பாகம்.
அறிவே வாழ்க்கையில் ஒளியாகும்.
அறிவைப் பெருக்க வளம் பெருக்கும்.
நேரத்தை நலமாய் வகுத்திட்டால்
தேரும் புகழது தீர்வாகும்.

வாழ்க்கை என்பது வாய்ப் பாடு
கூட்டல் கழித்தல் பெருக்கி வகுத்தல்
வாழ்வுந் தாழ்வும் நேர்பாடு.
வாழ்க்கைக் கணக்குத் தீர்வோடு
இன்பமும் துன்பமும் சமம் பாடு
இறைவன் தீர்ப்பான் கணக்கோடு.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Monday, 10 November 2025

வறுமை வந்தால்.

எண்ணத்தில் தூய்மை.

வறுமையில் வருந்தி வாடி விடாதே!
வசதியில் பொங்கி ஆடிக் கெடாதே!!
விட்டுப் போனோரை வேண்டித் தேடாதே!
விலக்கி வைத்தோரை ஊடிக் கூடாதே!

விரும்பி வந்தால் சிரிக்கக் கூசாதே!
விரும்பா ரோடு பழகிப் பேசாதே!
பழகும் முன்னே அவசரம் கூடாதே!
பழகிய பின்னே யோசனை ஆகாதே"

நன்றியை என்றும் மறந்து விடாதே!
நன்றி மறந்தாரை நெருங்கிப் பழகாதே!
கூடி வாழுங் கொள்கை விலகாதே!
பாடி ஆடும் பண்பில் நழுவாதே!

நம்பி வந்தோரை வெறுத்து விடாதே!
கும்பி பசித்தாற்கு கொடுக்கத் தவறாதே!
ஏழைப் பாழையரை இகழ்ந்து பேசாதே!
கூலி வேலையரைக் குறை காணாதே!

வஞ்சத் துரோகம் நெஞ்சிற் கொள்ளாதே
அஞ்சும் எளியரை ஆணவம் செய்யாதே!
எண்ணத்தில் தூய்மை ஏற்றிருந் தாலே
வண்ணத்தில் வாய்மை மாற்ற மிராதே!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Saturday, 8 November 2025

வண்டிக்காரன்.

வண்டிக்காரன்.

நானொரு வண்டி நீயோ ஓட்டி!
என்னை எங்கே ஓட்டிப் போகிறாய்?
ஆன்மா உள்ளே இறையோ நீ!
ஆட்டிப் படைப்பவன் நீயோ!

பூட்டிய வண்டி நான் உடலாக
மாட்டிய காளைகள் உயிராக,
வண்டிக் காரன் ஓட்டுகிறாய்.
பயணம் எங்கே செலுத்துகிறாய்.

வண்டிக்காரா வண்டிக்காரா"
வண்டியை ஓட்டும் வண்டிக்காரா!
சண்டிக் காளை நானானுலும்,
சுண்டி ஓட்டுநீ வகையாக.

வண்டி மாடுகள் எப்படியோ!
வண்டிக் காரன் நீ தானே.!
சேரும் ஊரை சேர்ப்பது நீ
செல்லும் முறைமை பொறுப்பு.நீ

திமிரும் எருதுகள் விலகினால்
அமரும் உன்னிலை பிசகினால்
ஓட்டும் பாதை தவறினால் 
ஓட்டி நீதான் தவறிவிட்டாய்.

நல்லதும் கெட்டதும் நீ பொறுப்பு.
அல்லல் நேராதே ஓட்டு நீ!
விடைதான் என்ன இரகசியமோ--வண்டி
அடைவதும் ஆவதும் உன்வசமோ!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

உம்மும் கம்மும்.

உம்முனும் கம்முனும் இரு

மம்மி பேசுனா உம்முனு இரு
மனைவி பேசுனா கம்முனு இரு.
குடும் பத்துல குழப்பம் வேண்டாமுனா
இடும்ப னாட்டம் டம்மியா இரு.

அங்கிட்டா இங்கிட்டா எங்கிட்டுச் சாயலாம்.
எங்கிட்டுச் சாஞ்சாலும் உங்கிட்ட வச்சிக்கோ
முதுகுல தலையணை இருத்திக் கட்டிக்கோ.
ஆம்பளயா சமத்தா அழாமப் பாத்துக்கோ.

தாயும் வேணும் தாரமும் வேணும்
தனியா புலம்பவும் தைரியம் வேணும்.
அய்யோ பாவம் ஆம்பள சாபம்
குய்யோ முறையோனு கத்துனாலும் கேவலம்.

நூறு வயசு வாழுற ஆசை
வேறோடு புடுங்கி விட்டெறிஞ் சாச்சு.
இன்னைக்குச் செத்தாலும் சந்தோச 
மாச்சு 
என்னைக்கும் சாவுறது இன்னையோடு போச்சு.

வீடுனு இருந்தா வாசலும் இருக்கும்.
வாசல் திறந்தா வழியும் பிறக்கும்.
விளையுற பிரச்சனைக்கு விடியலும் கிடைக்கும்
தலையாட்டுந் தந்திரம் தாராளம் செயிக்கும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Friday, 7 November 2025

வானை நம்பி.........

வானை நம்பி......

விண்ணை நம்பி பொன்னை வச்சோம்
பொன்னை மீட்ட விதை விதைச்சோம்.
விதை விதைச்சி வானம் பாத்து 
மழைய வேண்டித் தவம் கிடந்தோம்.
 
அம்மான்னு அழும்புள்ளய 
அமத்தத் தாய்க்குப் பாலு வல்ல.
சும்மா சும்மா சப்பிச் சப்பி
சோந்து புள்ள அசந்து போச்சு.
அசந்த புள்ள முழிச்சதுன்னா 
ஆறுதலா என்ன சொல்ல.
வானத்தையே பாத்துப் பாத்து 
தான தர்மம் விழுது செத்து.

கண்ணா மூச்சு விளையாட்டா
கடவுளுக்கு என்ன ஆச்சு.
என்னதான் நினைச்சிருக்கான்
என்ன செஞ்சு முடிக்கப் போறான்.
மண்விளைய மழை இல்லேன்னா
பொன்னிருந்தும் என்ன செய்ய.
கையிருந்தும் காலிருந்தும்
கஞ்சிக்கென்ன வழிசெய்ய.

இலவசங்கள் வாங்கி வாங்கி
இரும்புப் பெட்டி நிறைஞ்சாலும்
பலம் குறைஞ்சு வலிமை கெட்டு
பாடுபட மறந்து போச்சு.
வாயில் சுட் ட வடை எல்லாம்
வயித்துப் பசி தீத்துடுமா.
காய்ஞ்சு போன பூமியையே
கண்ணீரே நனைச்சிடுமா.

காமராஜர் கக்கன் அந்தக்
கடவுள்கள் பிறக்க வேணும்
காலத்தில் பெய்யும் மழை
கடல் மறக்கத் தடுக்க வேணும்.
நீர்நிலைகள் பெருக்கி எங்கும்
வானம் பொய்த்தால் திறக்க வேணும்.
பசுமை செய்து பூங்காற்றால்
பார்குளிர்ந்து செழிக்க வேணும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.






Wednesday, 5 November 2025

ஒற்றையடிப் பாதை.

ஒற்றையடிப் பாதை.

ஒற்றை யடிப் பாதை வழி
மெல்ல மெல்லப் பார்த்து நட
முந்தப் பார்கும் முன்னாலே--கேடு
தள்ளப் பார்க்கும் பின்னாலே.

கூப்பிடாமக் கூட வரும்
கோபப்படத் தூண்டி விடும்
அவசரத்தில் ஆசை ஊட்டி --கேடு
ஆழ் குழியில் தள்ளி விடும்.

கேடுகெட்டக் கெட்ட நேரம்
தேடிவந்து ஒட்ட வரும்.
பாடு பட்டுச் சேர்த்ததெல்லாம்--கேடு
ஓடவிடும் உன்னை விட்டும்.

தன்பேச்சைக் கேளாமல்
தன் முயற்சி நம்பாமல்
மனம்மயக்கி மாற்று வழி--கேடு
வனம் விலக்கித் தொலைத்திடும்.

தேவையற்ற பழக்க தோசம்.
தீயவர்கள் சக வாசம்
குறுக்குவழி மோக மோசம்--கேடு
உருவாக்கும் தன்னீசம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Monday, 3 November 2025

தம்பி பாலா

தம்பி KPYபாலா!

தம்பி பாலாநீ தரமத்தாய் பிள்ளை நீ!
அம்பி போலநீ அக்கரை சேர்வள்ளம் நீ!
நம்பி முயன்றோர்கு நல்கும் வள்ளல் நீ!
எம்பி என்போர்கு உள்ளம்வாழ் செல்வம்நீ!

அழைப்பவசர ஊர்தி நீ ஆதரவுக் காவலன்நீ!
தொலைதூர மக்களின் மலைப்புறச் சேவகன்நீ!
நிலைகுலைந்த கலைஞர்களின் நலம்தந்த நாயகன்நீ!
உலையேறா இல்லங்களில் இலைபோட்ட அன்னவன்நீ,!

இருப்போன் அல்லான்நீ இருப்பதைக் கொடுப்போன்நீ!
பிறப்பால் கரணன்நீ சிறப்பால் வர்ணன்நீ"
மனமுள்ள மனிதன்நீ குணமுள்ள பாரிநீ!
இனமான மனிதம்நீ தனமான தானன்நீ!

குலம்போற்றும் உரியன்நீ!விளம்பிடாப் பிரியன்நீ
நலம் விளையும் விருச்சம்நீ! குலங்காக்கும் மருத்துவம்நீ!
அறஞ்செய் தர்மன்நீ கரம்பெய் நண்பன்நீ!
புறம்பேசும் பொய்யர்கும் சிரங்காக்கும் சீராளன்நீ!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.



தமிழ் நாடு வாழ்த்து

தமிழ் நாடு வாழ்த்து.
--------------------------------------------------
தமிழ்நாடே திருவே வாழ்க!
தமிழே!எமையாள் தாயே வாழ்க!

பல்லவம் கொங்கு பாண்டியம் நாஞ்சில்
வல்லவம் சேது ஈழம் சோழம்
சேரம் செழித்த இலக்கியத் தமிழகம்
சீராம் சிறப்பாம் தமிழே வாழ்க!

காவேரி பொன்னி பாலாறு பெண்ணை
தாமிரபரணி வைகை பெரியாறு
பூமூன்று விளைய பொங்கிடக்கருணை
நீ தந்தாளும் வளநாடு வாழ்க!

வங்கம் மன்னார் இந்துமாக் கடல்கள்
பங்கமாகா கீழ்தென் அரண்கள்.
மங்கா உன் புகழ் பாடிடும் அலைகள்
சங்கம் பாடும் செம்மொழி வாழ்க!

மேற்கும் கிழக்கும் மலைத்தொடர்க் கூட்டம்
ஈர்ககும் வாசனை இந்திரத் தோட்டம்.
பார்ககும் உலகின் பரவச ஆட்டம்
தீர்க்கம் பொழிலாம் எழிலே வாழ்க!

இனிக்கும் தன்மை இயலிசை நாடகம்.
கணக்கின் செம்மை தொகையும் பாட்டும்.
காவியம் காப்பியம் தொன்மை போற்றும்
மேவிய செந்தமிழ் புகழே வாழ்க!

கவிஞர் கொ.பெ.பிச்சையா.

Thursday, 30 October 2025

சுதந்திரம் என்னாச்சு?

சுதந்திரம் என்னாச்சு

சுதந்திரம் என்னாச்சோ ஏதாச்சோ!
அதுக்கான பலனுமே யாருக் காச்சோ!
அரசியல் வாதிக்குத்தான் சுதந்திரமோ!
அப்பாவி சனங்கதான்  பாவங்களோ!

பாடுபட்ட உயிரெல்லாம் பாவிங்களோ!
பட்டபலன் அனுபவிக்க யோகமில்லயோ
போராடி மாண்டோர்குப் பேரில்லையோ!
சீரோ சிலையோ சிறப்போ  இல்லயோ!

அப்பன் வீட்டுச் சொத்துப் போலவே
அவங்க அவங்க பேரு வைக்குறாங்க.
ஆட்சி மாறி வேற வந்தா அழிக்கிறாங்க
அதை மாத்தி மாத்திச் செய்யுறானுங்க.

விடுதலையே வேண்டாம் இப்போனு
வெள்ளக் கொக்கப் பறக்க விட்டாங்க.
சுதந்திரமே கூடாதுனு தடுத்தவங்கதான்
பதறாம கனிமக் கொள்ளை பன்றாங்க.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.






Wednesday, 29 October 2025

அத்தை மவனே!

அத்தை மவனே!

அத்தை மவனே!

அத்தை மவனே அத்தானே--என்
ஆசை முகமே மச்சானே!
பித்து ஆனேன் உன்மேலே--என்
பிரியக் கண்ணா உன்னாலே!

மொத்த மனசும் சுமந்தேனே--என்ன
ஆளப் பிறந்த ராசாவே!
சொத்து சுகமும் நீதானே --கண்ணில்
சொக்க வச்ச சுந்தரனே!

நான் பிறக்கும் முன்னாலே--அழகா
நீ பிறந்தே இருந்தாலும்.
எனக் காகவே பிறந்தாயோ--நானும்
உனக் காகவே பிறந்தேனோ.

கண்ணே மணியே கரும்பேனு--என்னக்
கட்டி அணைச்சது போதுமே.
காலம் பூராம் வாழ்ந்தசுகம்--நான்
கண்ட கனவும் கண்டுட்டேனே.

நாம பெத்த பிள்ளைகளே--நாட்ல
நம்ம பேரே சொல்லோனும்.
சாமம் ஏமம் பாராம--யாருக்கும்
சேமஞ் செஞ்சே வாழோனும்

காலம் பூராம் வாழ்ந்தாலும்--கண்ட
கனவு அம்புட்டும் நிறஞ்சாலும்
வாழ்ந்து செத்து மடிஞ்சாலும்--மறுபடி
மீண்டும் மீண்டும் பிறக்கோனும்.
சேந்து நாம வாழோனும்

இன்னுஞ் 
செத்தாக்கூட மோச்சந்தான்--உன்னோட
இருந்த இந்த நிமிஷந்தான்.
பிறந்தக் காரணம் அடைஞ்சிட்டேன்--நான் 
பிறந்த காரணம் அடைஞ்சிட்டேன்--
உன்னோட
இருந்தும் சேந்தும் வாழ்ந்திட்டேன.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

இறைவனை அடைவது எப்படி

இறைவனை அடைவது எப்படி 

கடையக் கடையப் பாலில் நெய்யே!
அடைய அடைய உள்ளில் மெய்யே!
அறிய அறிய உள்ளுள் ஒளியே!
தெரியத் தெரிய ஒளிர்வான் இறையே.!

உள்ளம் ஒளிர இல்லம் துலங்கும்
உள்ளே மிளிர இறையும் விளங்கும்.
தெய்வம் தானெனத் தெளிந்து உணர்க.
தேடி அலைவது வீணெனப் புரிக!

மருண்ட இதயம் இருண்டு கிடக்கும் 
திரண்ட மாயைத் தேடலை அடைக்கும் 
ஆசைக் களவுக் கோபப் பேய்கள்
பூசைப் புண்ணியம் பலனை அழிக்கும்.

எண்ணம் வண்ணம் தூய்மை யானால்
எண்ணும் செயலும் நல்லற மானால்
இதயக் கோவில் ஒளி மயமாகும்
இறைவன் உள்ளே சுடராய் ஒளிர்வான்.

கோவில் தனக்குள் கட்டிய புலவன் 
கும்பா பிஷேகமும் செய்து முடித்தான்.
பக்தியில் இறையைக் கொண்டா டினால்
முக்தியும் தனக்குள் கண்டாகலாம்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Monday, 27 October 2025

சொந்தமுன்னா என்ன?

சொந்தமுன்னா என்னடா?

சொந்த முன்னா என்னடா?
சொன்ன தெல்லாம் சும்மாடா.
வந்தது தான் எதுக்கடா?
வாழ்ந்த வரை அதுக்கடா.

கோடி கோடி சேத்து வச்சு
வீடு வாசல் கட்டி வச்சு 
கோடி மூடித் தூக்கும் போது
கூட வர என்னடா?

மனைவி ஒருத்தி இருந்தான்னா 
மந்தை வரை அழுதிடு வாள்.
காடு வரை பிள்ளை வரும்.
வீடு திரும்பி தலை முழுகும்.

தலை முழுகி துவட்டி யாச்சு
அழுத சோகம் முடிஞ்சு போச்சு.
வந்த சொந்தம் திரும்பி யாச்சு
இந்தப் பந்தம் கடந்து போச்சு.

பெத்துப் போட்டுத்  தொலைஞ் சாங்கடா,
சொத்தும் விட்டு மறைஞ் சாங்கடா,
நானும் விட்டுப்  போறேனடா
யாருக் கிங்கு சொந்த மடா?

ஊரு மட்டும் இருக்குமடா!
ஒன்னு ஓன்னாப் பறக்குமடா.
யார் யாரோ வருவாங்கடா.
பேரழிஞ்சும் போவாங்கடா.

சொந்தம் ஏது சொல்லடா?
சொன்ன தெல்லாம் சும்மா டா.
வந்த வழி அழிஞ்ச பின்னே
எங்கே ஏது சொந்த மடா?

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

உள்ளம் துலங்குதய்யா.

உள்ளம் மகிழுதய்யா!

உள்ளம் துலங்குதய்யா--முருகா 
உன் புகழ் விளங்குதய்யா.
கள்ளம் விலகுதய்யா-கந்தா
இல்லம் பழகுதய்யா.

தேடித் திருமகனை--பாலா
ஓடி வருவேனய்யா.
பாடி உன்னருளை--வேலா 
நாடி வந்தேனய்யா.

இதயம் இருண்டதய்யா--கடம்பா
உதயம் பொருந்திடய்யா.
ஆசை அகற்றிடய்யா--குருபரா
பூசை ஒலித்திடய்யா..

தண்டம் கொண்டவன் நீ--ஞானப்
பழம் நீ தந்தவன் நீ.
தந்தைக்கு உபதேசம்--சுப்பையா
தந்திட்ட குருபரன் நீ

ஔவைத் தமிழ்க் கிழவி-- தமிழ்
செவ்வேள் சிறுவனிடம்
வாதிட்டு தோற்றிட்டாளோ!---செய்த
சோதனை வென்றிட்டாயோ!

குன்றங்கள் தோரும்--குமரா
குடி கொண்டாயோ!
மன்றங்கள் கண்டும்---அழகா
மழழலை செய்தாயோ!

உள்ளம் மகிழுதய்யா--சரவணா
உள்ளி உருகையிலே.
வள்ளி மணாளனே--மருகா
வெள்ளியன் மைந்தனே.

கூப்பிட்ட குரலுக்கு--சாமி
ஓடி வருவாயே!
கூவி அழைக்கின்றேன்--குகனே
தாவி வந்தருள்வாயே!

கவஞர். கொ. பெ. பிச்சையா.






மயிலாட்டம்

மயில் ஆட்டம் 

தோகை விரித்துத் துணையைத் தேடும்
பாகை அகற்றிப்  பரப்பி ஆடும்
மேகம் கண்டு மெய்யது சிலிர்த்து 
தாகம் காட்டித் தன்னாளை ஈர்க்கும்.

கார்மேகம் கழன்று சுழன்று நேர்வசம் 
ஊர்மீது இரங்கி உழன்று சூழ்வாசம்
கண்டு மகிழ்ந்து குளுமை நயந்து
செண்டாடும் நீர்த்துளி தண்மை வியந்து

அழகில் அழைத்து ஆரோக்யம் காட்டும்
பழகும் விதத்தில் பகட்டைத் தோற்றும் 
உலகில் என்போல் அழகினில் யாரோ!
தலைக்கனம் ஏற்றி தள்ளாடு வாரோ!

பெண்ணழ கென்றே பெருமை பேசும்
பெண்ணவள் வியந்து அருமை கூசும்
என்னே எழிலெனத் தன்பால் கவர்ந்து
முன்னே பின்னே நடமிடும் பயின்று.

அழகு நடனம் ஆண்மை மயங்கி
அதனது உதிர்வு பெண்மை கவர்ந்து
தன்சினை ஏந்தி தன்னினம் பெருகப்
பெண்ணின் பெருமை கொண்டாள் அருமை.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.



Sunday, 26 October 2025

விரதம்

விரதம்..........!!

வரதட்சனைப் பெற்றுத்தான்
வரனாவேன் என்போனே--உனது
கரம் பற்றுவதைவிட
உரமாகி மண்ணுக்கு
உயிர் கொடுப்பதே மேல்!

பணம் வாங்கி ஒருத்தி
படுக்கை விரித்திட்டால்-அவளை
இனம் கெட்ட வேசியென
இழிக்கும் சமுதாயமே
இவனும் வேசைப் பயலே!

கல்யாணச் சந்தையில்
காசுக்கு விலையாகும்---ஒரு
நெருப்பு விதையை
புருசனாக்கி எரிவதோ!
விரதமிருப்பேன் வீட்டிலே!

சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.

பெண்ணடிமை ஏன்?

அடிமைகளோ
பெண்ணினம்!

பாரதியும் மறைந்தானோ!
பெண்ணுரிமையும் மறந்ததோ!
அன்றே சொன்னேன் நானுமே!
ஒன்றாய்ப் பெண்கள் கூடினால்,
உலகை வென்றும் ஆளலாம்
இன்னும் ஏன் அடிமையாம்?
பெண்ணுரிமை மடிந்ததா?
என்ன இதுக் கொடுமையோ!

தன்னறிவும் இல்லையோ!
துணிவும்  எழ வில்லையோ!
தொன்மையின் மடமையோ!
பணிவதே பெண் விதியோ!
கண்களை விலை கொடுத்தா?
வண்ணோவியம் வாங்குவது!
பெண்ணவளை அலங்கரித்து
பேயிடத்துக் கொடுப்பதோ!

என்னதான் சுகங்கண்டாள்.
எல்லாமே இல்லமென்றாள்.
தன்னையே அர்ப்பணித்தாள்
தனக் கென்று என்னக் கொண்டாள்?
தியாகத்தின் வடிவமாக
வியாதியின் விளக்க மாக
தவறிடுஞ் செயலுக்கும்
தானேதான் பொறுப்பானாள்.

தொட்டதுக்கும் குற்ற மென்பார்.
பட்டதுக்கும் பழி சுமப்பாள்.
கெட்டுக் குப்பை அடியாளென்பார்.
பட்டமரம் அளென்பார்.
அஞ்சனம் கொஞ்சும் விழி
அஞ்சி வழியக் கருத்ததோ!
மஞ்சனம் மணக்கும் மேனி
வெஞ்சூட்டால் வெளுத்ததோ!

பூச் சூடும் கார்க் கூந்தல்,
நாய்களாடும் குப்பை மேடோ!
ஏச்சுக்கும் பேச்சுக்கும்,
இவளென்ன விலைமகளோ!
சமைக்க வந்த வேலைக் காரியோ!
சாப்பாட்டுக்கு பிச்சைக் காரியோ!
விலை கொடுத்து வந்தவளோ
விலை மகனுக்கு அடிமையோ!

பெண்ணுக்குப் பெண்ணெதிரி.
கண்ணுக்கு கண்ணெதிரி
மருமகளா வந்தவளே மாமியார் 
மறுபறவிக் கொடுமைக்காரியோ!
அவள் கொண்ட கொடுமைகளே,
இவள்தலையில் விடிந்ததோ!
நாளை இவள் அப்படித்தான்
நிலைமை மாறிச் செய்வாளோ!

எத்துணைப் பெண்ணுக்கு!
இப்புவியிற் கொடுமைகள்!
செத்தொழியும் வேளைக்கூட
சீவனுக்கு அமைதியில்லை!
பெத் தணைத்தப் பிள்ளையும்
பெரு மைக்கான கணவனும்
ஊர் உறவுக்குப் பொய்யாக
தேரனுப்பப் பாலூற்றுவார்.

அனைத்தையும் அவள் மறந்து
அப்போதும் கண்ணொழுகி
பிணை துறந்து ஏகுவாளோ!
பெண்ணெனும் பாவ மகள்!

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.

சுவாசக் காற்றே நீ

நீ என் சுவாசக் காற்றே!!

மண்ணிற்பல் அருமை 
உயிரினங்களை
கண்ணிற் படாமல் தொலைத் திட்டோம்!
மண்ணின் உயிரான பெண்ணினமும் அதுபோல் ஆமோ!
எண்ணிட அச்சம் விஞ்சுதே இதயம் வலிக்குதே
விண்ணிடம் வேண்டிக் 
கெஞ்சிட லாமோ! papa qApppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

காலத்தின் சுழற்சியை  நிறுத்தும் முயற்சியில்
நாளும் பாலியல் வன்மங்கள் 
நடந்தேறுகின்றன!
வாழும் உலகின் சுவாசத்தை 
அடைத்து விட்டு
வாழப்போவதும் இங்கு யாரோ எதுவோ!
கோலமில்லாப் புள்ளிகளாய்  
குன்றுகளே மிஞ்சுமோ!

வாசலை அடைத்த வீட்டில் 
வரவுக்கு யாரப்பா!
வாரிசும் பெண்ணின்றி வருவதுண்டோ கூறப்பா!
வாயு மட்டும் அலையுமிங்கு 
வரலாறு சுமந்தப்பா!
பேயுங்கூடத்திரியாது பெண்ணில்லா 
பூமியப்பா!
ஓயுமுன் உணர்ந்து நீ பெண்ணினம் போற்றப்பா!

கடலிருக்கும் காற்றிருக்கும் 
மலையும் இருக்கும்!
நிலமிருக்கும் நீரிருக்கும் 
வளமும் இருக்கும்!
இயற்கை தந்த எல்லாச் செல்வங்களும் இருக்கும்!
ஆணின ஆதிக்கமும் 
ஆங்காங்கே ஒளிந்திருக்கும்!
ஆனால் மனிதத்தடம் மட்டும் 
மறைந்திருக்கும்!
  
அருகித்தான் சுருங்குது அருமைப் 
பெண்ணினம்!
ஆராய்ச்சி மணியொலியின் 
எச்சரிக்கை தினந்தினம்!
கருவிலே கொன்றழிக்கும் 
கருமந் தொலையவில்லை!
திருமண வன்மைகளும் 
தேசத்தில் குறையவில்லை!
ஒருமனப்பட்டு உயிராம் பெண்குலம் 
காப்போம்!

நீ என் சுவாசக் காற்றே!
நீ வாழ வேண்டுமே!
நீயே சக்தி!சாமி நானே!
நீயும் நானும் சேராவிட்டால்
ஏது காதல் பக்தி!!

இரண்டில் ஒன்று
எது குறைந்தாலும்
வரண்டு விடாதோ காதல்
வரமாய் கொண்டேன்
வாழ்வில் கண்டேன்
வாழ்வோம் இனிதே சுபமே!

உலகம் நமது கையிலே
ஒப்படைத்தான் இறைவனே!
விலக்கும் பொருளோ நீ!
வேர்நீ உலகுக்கு.
உலகம் உனையன்றி
நிலைக்குமோ உயிரன்றி!

உயிர்கள் செய்வோம்!
பயிர்கள் வளர்ப்போம்!
உலகம் நிலைக்க
உமையாள் துதிப்போம்.
உறுதியில் இருப்போம்
உணர்விலிது சத்தியம்!

இது ஒவ்வொரு இளஞனும்
இதயம் கொள்க!
புதுப் பிரளயம் தவிர்த்திட
பெண்ணினம் காக்க!
                   
கவிஞர்.கொ.பெ,பிச்சையா.

வளமென்ன இனி

வளமென்ன இனிவேண்டும்?

பொன்னே பூச்சரமே புன்னைமர இளங்காற்றே
கண்ணே கண்மணியே காலையிளங் கதிரொளியே
பெண்ணே பெண்ணரசே பேசுமொழி சித்திரமே
எண்ணே என்மகளே எழுந்துவா என்னிடமே

தந்தைநான் தவமிருந்து தனித்துவரம் பெற்றேனே
எந்தைவழி பேரெடுக்க உந்தாயில் கண்டேனே
முந்தைநாள் நான்தந்த முத்தங்களை சேர்த்துவைத்து
இந்தைநாள் மொத்தமாய் இன்பமுனைத் தந்தாளே!

ஆழ்கடல் தேடலிலே ஆனிமுத்து பெற்றதுபோல்
வாழ்ந்தயெம் வாழ்க்கை யுன்னால் வரலாறாய் மலர்ந்ததம்மா.
தேர்ந்தயெம் பந்தமிது தேனாகிக் கனிந்ததம்மா.
நேர்ந்தயெம் நன்மை யெலாம் நீயாகி வந்தாயம்மா.

குலம்செய்த புண்ணியமோ குலமகளேநீ கிடைத்தாய்.
நலமெல்லாம் நீயென்றே குலம்வாழ அறம்படைத்தாய்.
வளமென்ன இனிவேண்டும் வள்ளல் நீ வந்துவிட்டாய்
பலமென்ன பெறவேண்டும் படை நீயே 
செல்லம்மா.

கவஞர்.கொ. பெ. பிச்சையா.

Thursday, 23 October 2025

நாடே கடனில்......

நாடே கடனில்.............!

நாடே கடனில் நாடாள்பவன் அம்பானி.
பாடே வாழ்வான பாமரனோ பட்டினி.
ஓட்டை விற்றவன் ஓட்டைக் குடிசையில்
ஓட்டை வாங்கியவன் கோபுர மாளிகையில்.

நமக் கெதற்கு வம்பென நாலாம் தூண்
அமுக்கி வாசிப்பதும் அடங்கியதும் ஏன்?
பணநாயகம் வென்றும் சனநாயகம் தோற்றும்.
அநியாயம் ஆனதோ ஆகாத சுதந்திரம்.

பாவங்கள் மேயாட்டம் பகற்கொள்ளை பேயாட்டம். 
சாபங்கள் கோபங்கள் தியாகமெங்கே போராட்டம்.
உரிமைக்கு விலைபேசும் வறுமைக்குச் சாவிலையோ!
பெருமைக்குப் பேர்சொல்லும் மகான்கள் பிறப்பிலையோ!

அடிபட்டு மிதிபட்டு ஆயிரங்கள் பலியிட்டு,
விடியலைப் பெற்றுத் தந்தார் தியாகிகள்
விடியாமல் விடியுமுன்னே வேட்டையர்
நுழைந்திட்டார்.
அடைந்தது ஆகாசம் முடிந்தது இதிகாசம்.

சுற்றிச்சுற்றித் திரிகிறாள் சுதந்திரத் தாய் அழுகிறாள்.
நோகாமல் நுங்குதின்போர் சாகாமல் வாழுகிறார்.
மீண்டும் ஒருபாரதம் வேண்டும் வேண்டுமே
விஷ்ணு மறுஅவதாரம் கிருஷ்ணரே வருகவே!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


எம்மதமும் சம்மதம்

எம்மதமும் சம்மதம் 

எம்மதமும் சம்மதம் ஏற்போமே
அம்மதமும் நம்மதம் தீர்ப்போமே
மனம் கோணாமல் மதம் பேணுவோம்
இனம் பாராமல் இணைந்து வாழுவோம்.

ஆன்மாக்கள் போலவே ஆறுகள்
அதனதன் வழியே தீர்வுகள்.
சேரும் இடங்கள் சங்கமம்.
நேரும் விதமோ சம்மதம்.

கடல்களில் வேற்றுமை காட்டுமோ!
கண்டங்கள் தோற்றமும் மாற்றமோ
பெயர்கள் தானே பலப்பல
பிரிவினை ஏது உலகிலே.

ஆறுகள் என்னும் வழிகளை
பேருகள் சொல்லி அழைக்கிறோம்.
சேரும் ஓரிடம் கடலது போல்
மார்க்கங்கள் சங்கமம் இறையொருவன்.

அதனதன் வழியில் ஆறுகளே
மதங்கள் நம்பிக்கை இருக்கையிலே
மோதல் ஆகுமோ உலகினிலே
யாதும் நம்மதம் சம்மதமே

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

தியாகத் திருநாள்.

தியாகத் திரு நாள்

இஸ்மாயில் அம்சம் காணுங்கள்--அவன்
இஸ்ஸலாமிய வம்சம் தானுங்கள்
அஸ்ஸலாமு அலைக்கமலா முங்கள்
அனைவர்க்கும் வணக்கம் சொல்லுங்கள்

துல்ஹஜ்த் திங்கள்
பத்தாவது நாளில்
பக்ரூ ஈத் கொண்டாட்டம்.
அல்லாவின் கருணை
அனைவர்க்கும் அருளும்
பாய்களுக்கு வாழ்த்துக்கள்.

நபித்தூதன் இப்ரஹிம்
தவப்புதல்வன் இஸ்மாயிலை
அல்லாவின் கட்டளையில்
அர்ப்பணிக்கத் துணிந்த நாள்.

இறைவனுக்குத் தியாகமாய்
தலைகொடுத்துத் தனை ஈய
நிறைந்தவன் பக்தி மெச்சி
விரைந்தவன் அல்லா வாழி!

தூயபக்தி வாழ்த்த வந்தான்.
நேயமதைப் போற்றிச் சொன்னான்.
பக்ருவே போதுமென்றான்.
பலியேற்று மனிதங் கண்டான்.

குர்பானிச் சமபந்தி
கூடியே உண்டிடுவோம்.
சர்வமும் சமமாவோம்
தர்மமேக் காத்திடுவோம்.

உலகமதன் நலம் வாழ
உயிர் கொடுக்க விழைந்தானை
உளம் மகிழ விருந்தளித்து
உறவுகொண்டு வணங்கும் நாள்.

அனைவரும் சகோதரரே!
அன்பு மொழித் தான் பாயே!
அப்பனென்றும் மாமனென்றும்
அத்தனையும் உறவானோம்.

சொந்தமான இரத்தங்களே!
பந்தமான உறவுகளே!
எந்தபேதம் இல்லாமலே
இந்த மண்ணில் வாழுவோமே!

தியாகத்தின் திருநாளே!
தேவனல்லாப் பெருநாளே!
இறைத்தூதன் இப்ரஹிமே!
இதயங்கொள் நந்நாளே!

மெக்காவுக்கும் மதினாவுக்கும்
முகமத் நபி யாத்திரையே,
இக்காலும் ஹஜ்பயணம்
இறைக்கடன் திருப்பயணம்.

இஹ்ஹாமை அணிந்திருப்பர்.
எல்லோரும் சமமென்பர்,
ஒற்றுமை விளக்கமாக
ஹஜ்ஜுக்குப் போய்வருவர்

கஃபாவைச் சுற்றிவந்தால்,
சம்சம் நீர் குடித்துவிட்டால்,
பிறவிப்பயன் பெற்றிடலாம்;
பிறவிக்கடல் நீந்திடலாம்.

ஹஜியாக ஆகிவிட்டால்,
கடமைகள் நிறைவுற்றால்,
அல்லாவின் அமைதியில்;
அவன் சரண் ஆகிடலாம்.

கவிஞர். கொ.பெ.பிச்சையா.

பின்குறிப்பு
பி.கு::பக்ரு--செம்மறியாடு.
இஹ்ஹாம--ஹஜ்பயணச் சீருடை.
கஃபா--மெக்கா புனிதத்தலம்.
சம்சம்--இஸ்மாயில் தோற்றுவித்தப் புனித நீரூற்று.
ஹஜி---ஹஜ் பயணம் சென்று வந்தவர்.

Tuesday, 21 October 2025

இறைவனே உரிமையாளன்.

வண்டிக்காரன்.

இறைவா நீ வண்டிக் காரா"
எங்கே வண்டி ஓட்டிப் போகிறாய்?
உறையும் உள்ளே ஆன்மா.நீ!--வண்டி ஆளும் அறிவே நீதான்.

பூட்டிய வண்டி உடலாக
மாட்டிய காளைகள் உயிராக,
வண்டிக் காரன் ஓட்டுகிறாய்--வண்டி
பயணம் எங்கே செலுத்துகிறாய்.

வண்டிக்காரா வண்டிக்காரா"
வண்டியை ஓட்டும் வண்டிக்காரா!
சண்டிக் காளைக ளானாலும்--வண்டி
சுண்டி ஓட்டுநீ வகையாக.

வண்டி மாடுகள் எப்படியோ!
வண்டிக் காரன் நீ தானே.!
சேரும் ஊரை சேர்ப்பதுநீ--வண்டி
செல்லும் முறைமை பொறுப்பு.நீ

திமிரும் எருதுகள் விலகினால்
அமரும் உன்னிலை பிசகினால்
ஓட்டும் பாதை தவறினால் --வண்டி
ஓட்டி நீதான் தவறிவிட்டாய்.

நல்லதும் கெட்டதும் நீ பொறுப்பு.
அல்லல் நேராதே ஓட்டு நீ!
விடைதான் என்ன இரகசியமோ--வண்டி
அடைவதும் ஆவதும் உன்வசமோ!

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


Monday, 20 October 2025

கொடுப்பது கொடுத்து எடுப்பது எடுத்து படுப்பதுதானே வாழ்க்கையடா.

இதுதான் வாழ்க்கை.

கொடுப்பது கொடுத்து எடுப்பது எடுத்து படுப்பதுதானே வாழ்க்கையடா.

அடிக்கிற கொள்ளை முடிப்பது இல்லை
படிப்பது மட்டும் நீதியடா.

கொடுத்ததும் எடுத்ததும் சரியாப் போச்சு
படுத்ததும் கணக்கு முடிஞ்சு போச்சு
வந்ததும் வாழ்ந்ததும் கொண்டதும் என்ன?
எந்ததும் எவர்க்கும் சொந்தம் என்ன?
முந்தியும் பிந்தியும் போவது தவிர இருந்தது நிலையென எவரடா?

அறுசுவை ருசியும் அனுபவக் காமமும்
புரிந்ததும் என்ன சொல்லடா.
அருத்தம் திருத்தம் பழகிய தெல்லாம்
ஆசைத் தூண்டல்  சொல்லுமடா.
அப்பன் ஆத்தா செய்த பாவங்கள் ஆக்க மகி வந்தமடா.
தப்புனு தெரிஞ்சும் மப்புலத் தப்புச் செஞ்சது தொடரும் உலகமடா.

வாழ்க்கை என்பது பூஜ்யம் ஆண்டதும் என்னடா இராஜ்யம்?
பணமா குணமா எதுதான் நிசமோ கண்டதும் என்ன சொல்லடா.
தானா விரும்பி பூமியில் பிறந்து வேண்டிய சுகங்கள் கண்டவரார்?
சமதள மில்லா மேடு பள்ளங்கள் எவர்தான் வாழ்ந்தார் விருப்பங்கள்.

பிறந்த நாள்முதல் வளரந் தோமே.
இறக்கும் நாளதை அறிந்தோமா.
ஆளா வளர்ந்ததும் சோறால
நாளாம் இறப்பதும் யாரால?
பிறந்ததும் இறப்பதும் நாமல்ல
இறைவன் இரகசியம் நமதல்ல.
இருப்பது எதுவரை தெரியல.
இரப்பதும் வாழ்நாள் வரமல்ல.
வாழும் வரைதான் வாழ்க்கையடா.
போகும் வரையும் சேவையடா.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.



Sunday, 19 October 2025

நரகாசுரன் வதம்.

நரகாசுரன் வதம்

தந்தை தாயின் சிந்தை நோக/
தந்தான் பாவங்கள் பிள்ளை நரகாசுரன்//
பிந்திய பாசம் முந்திய நீதிவழி//
நொந்த தாயின் நெறிப்படிக் கணைபட//
மாண்டு மடிந்தான் ஆண்டு முடிந்தான்//
கிருட்டினர் சத்யா தந்தை தாயார்//
திருந்தா மகனை பொருந்தாக் குலனை//
வதம் செய்து முடித்து வரமொன்றும்
வழங்கிப் பாவியிவன் பலியான நாளை//
தீபாவளித் திருநாளெனத் தேசம் கொண்டாட//
தேவர்கள் கூடித் தீபங்கள் ஏற்றினர்.//

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Thursday, 16 October 2025

இளஞனே விழித்தெழு!

Wednesday, 15 October 2025

இளைஞனே விழித்தெழு"!!

இளைஞனே நீ விழித்தெழு!!

இளைஞனே நீ விழித்தெழு.
எதிர் காலமுன்னை அழைக்கிறது.
நாளைய சமூகம் உனதானது
வேளை இதுதான் உணர்வானது.

எதிரே பாரது தெரிகிறதா.?
புதிராய் விடுகதை புரிகிறதா?
உன்னைச் சுற்றி சதிவலைகள்
கண்ணை மறைத்து விரிகிறதா?

உல்லாசம் சல்லாபம் எதற்காக?
எல்லாமே கெடுவினை அதற்காக.
எஃகு வலிமை உள்னுடலை
சிதைக்கும் செயலே சூழ்ச்சிவலை.

அடிமைப் பழக்கம் அபாயம்
குடிமது போதை பெரும்பாவம்
மயக்கிக் கொல்லும் சிற்றின்பம்
மயங்குதல் பாதகச் செயல்வன்மம்.

உடம்பை இரும்பாக் கட்டிடனும்
நரம்பை வலிமைப் படுத்திடனும்.
சுவரில்லாத சித்திரமா!
தவறில்லாத செயல்த் திறமா!

உடம்பு தானே பிரதானம்
கடமை அதற்குள் சன்னிதானம்.
உடலும் அறிவும் வலுவிருந்தால்.
முடிக்கும் செயலும் தெளிவிருக்கும்.

காலம் வெகுதூரம் எதிரிருக்கு.
காத்துக் கிடக்கு கனவதுக்கு.
இலக்கைக் குறிவை,! ஓடு!
அடையும் வரைக்கும் ஓயாதே.

விதைக்குங் காலம் விதையாதது,
விளையுங் காலம் விளையாது.
முளைக்கும் காலம் நோய்ப்பட்டால்
வளரும் காலமே முடிந்து விடும்.

படிக்கும் நேரம் படித்திடனும்.
பயனுறுங் காலம் கணித்திடனும்.
அறிவை ஏற்றி வளர்ந்திடனும்.
திறமை காட்டி உயர்ந்திடனும்.

உன்னை நம்பி முயன்றிடனும்
உன்னையே நம்பி வென்றிடனும்.
வலிமை தானே நம்பிக்கை
எளிமைத் தயர்வை அகற்றிடனும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Wednesday, 15 October 2025

கண்ணும் கண்ணும்.

கண்ணும் கண்ணும்

கண்ணும் கண்ணும் கண்டும் பேசும்
கண்டவர் காண கண்களும் கூசும்.
இதயம் பேசும் இரகசிய மொழிகள்
உதயமாகும் விழிகளின் வழிகள்.

அக்கம் பக்கம் ஆரிருந் தாலும்
தர்க்கம் செய்யும் தாமிரு காதலும்.
குறிப்பால் அறியும் குறிப்புணர் பயிற்சி 
இறைவனுங் கூட இயற்றிடா முயற்சி..

உண்ணும் கண்கள் உணரும் மொழிகள்
கண்ணும் கண்ணும் கலந்திடும் வழிகள்
ஓசை  அறியா உணர்வின் பாசைகள்.
ஆசை அறிந்த கனவின் .பூசைகள்.

நேருக்கு நேரே சந்திக்கும் ஏக்கம்
நேரத் தருணம் கலந்திடக் கூச்சம்.
நோக்க நோக்கக் கவிழ்ந்தும் திகைக்கும்
ஆக்கும் மொழிகள் மறந்து நகைக்கும்.

ஆசைகள் தூண்டி அளாவத் துடிக்கும்
பாசைகள் வேண்டிப் பழகிட நடிக்கும்.
ஓசைகள் தாண்டி ஒளிந்திட மடிக்கும்.
மசியச் சுணங்கி ஒருகண் படிக்கும்.

மௌனம் பேசி சகுனம் கூறும்
கவனம் கூறி கணணில் தேறும்.
கண்கள் கசிந்து தன்னிலை ஆறும்.
எண்ணம் மசிய ஏது ஊறும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Tuesday, 14 October 2025

சாமி சரணம்.

சபரிமலை சரணம்

சபரிமலை வாழும் நீ
சாமி ஐயப்பா-உன்
சரணக்கலை நாடிவாரேன
சாமி ஐயப்பா!
பள்ளிக்கட்டுக் கட்டிக்கிட்டு
சாமி ஐயப்பா--பேட்டைத்
துள்ளி ஆடி வாரேன்
சாமி ஐயப்பா!
சாமி ஐயப்பா!
சரணம் ஐயப்பா!

பதினெட்டு மலைதாண்டி
சாமி ஐயப்பா!
பதினெட்டுப் படியேறி
சாமி ஐயப்பா!
கதியென்று உனைவேண்டி
சாமி ஐயப்பா
அருளென்று தேடினேன்
சாமி ஐயப்பா!
விரதம் ஏற்று நடந்து வாரேன்
சாமி ஐயப்பா---உன்னால்
சாதி மதம் மறந்துவிட்டேன்
சாமி ஐயப்பா!
சாமி ஐயப்பா"
சரணம் ஐயப்பா!

சரணம் சரணம் கூறிக்கொண்டு
சாமி ஐயப்பா!
உச்சிமலை ஏறிவந்தேன்
சாமி ஐயப்பா!
எண்ண மெல்லாம் வாழும் நீ
சாமி ஐயப்பா!
எனக்குள்ளே கண்டு கொண்டேன்
சாமி ஐயப்பா!--உன்னால்
சமத்துவம் பழகிக்கொண்டேன்
சாமி ஐயப்பா!
சாமி ஐயப்பா!
சரணம் ஐயப்பா!

சாமிசாமியே! சரணம்சரணமே!
சாமியெல்லாமே!சகலமெல்லாமே!
ஐய்யன்ஐய்யனே!மெய்யன்மெய்யனே!
அகிலமெல்லாமே!அன்பிலெல்லாமே!

துளசிமாலை சத்தியமா போடுவேன்.
பழகிப் போச்சு நிதமுன்னைப் பாடுவேன்
சாமி சாமி சாமினு சொல்லிச் சொல்லி
சாமி ஆயிட்டேன்
சரணம் சரணம் சரணஞ் சொல்லி
சரணடைஞ் சிட்டேன்.
சாமி ஐயப்பா!சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா!சாமி ஐயப்பா!

கவிஞர் கொ.பெ.பிச்சையா.

Monday, 13 October 2025

காலத்தின் கோலம்.

காலத்தின் கோலம்.

காலம் போறப் போக்கப் பார்த்தா
கணக்குப் புரியல.
கோலம் அதைப் படிச்சிப் பார்த்தா எனகுப் புரியல.
ஜன நாயக நாடகத்த ரசிக்க முடியல--இங்கே
பண நாயகர் தானே நம்ம ஆளு றானுங்க

எலக்ச னுன்னா ஓட்டுக் கேட்டு தேடி வாராங்க?
எலக்சனுல ஜெயிச்சப் பின்னே கலக்சன்
பன்றாங்க.
ஓட்டுக் கேட்டு வரும்போது கும்புடு றானுங்க----அப்புறம்
ஓட்ட வாங்கி ஜெயிச்சா  எங்கே அம்புடு றானுங்க.

தேர்தலுனு வரும்போது நடந்து வாராங்க
ஊர் ஊரா ஓட்ட வாங்கக்.கூடி வாராங்க
தேர்தலுக்கு அப்புறங்கார் சன்னல் மூடு றாங்க--பழசு
இறங்கி நடந்த கோலம் மறந்து பறந்து போறாங்க.

அஞ்சு வருஷம் முடிஞ்சதுன்னா  கெஞ்ச வருவாங்க 
செஞ்ச தென்ன சொன்ன தென்ன மறந்து போவாங்க.
மானங் கெட்டு மேடை யேறக் கூச மாட்டாங்க--எப்படி!
ஆனாலும் ஜெயிக் கிறாங்க ஏன்னும் புரியல.

உண்மையிலே ஓட்டுப் போட்டுச் ஜெயிப்ப தாருங்க?
நன்மை செய்ய மக்களுக்கு உழைப்ப தாருங்க?
விலை கொடுத்து ஓட்ட வாங்கி ஜெயிக் கிறானுங்க--அவங்க
தலையக் கண்டா கும்பிடனுமாம் உசந்து போனாங்க.

வீடுமேல வீடு காடுமேல காடு காருமேல காருன்னு
வேட்டை யாடிக் கூட்டி அள்ளிச்  சேர்க்கி றானுங்க.
ஓட்ட வித்தக் கூடடம் நாமம்  போட்டுக் குறாங்க--இது
கேடு கெட்ட ஜனநாயகக் கேலிக் கூத்துங்க.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.







மணிகண்டசாமி.

மணிகண்ட சாமி ஐயப்பன்.

கழுத்தில் மணிமாலை,
மணிகண்ட சாமிக்கு.
அழகிய திருமுகம்,
ஐயப்பன் சாமிக்கு.
ஆணுக்கும் ஆணுக்கும்,
அவதாரம் ஐயப்பன்.
அரிகர புதல்வனாக,
தவக்கோலம் ஐயப்பன்.

குழந்தை வேண்டி வருந்தியப் பந்தளன்,
அழுதிடும் குழந்தை  அரவம் கேட்டான்..
அருகிய அரசன் அள்ளி முகர்ந்தான். ஆனந்தம் பெருகி ஆசை முத்திட்டான்..
துள்ளிக் கொண்டாடி வீடு விரைந்தான்.
வெள்ளித் தங்கம் அள்ளிக் குவித்தான்.
அரண்மனை முழுக்க விழா எடுத்தான.
இருகரமள்ளி ஏழையர்குக் கொடுத்தான்


இரண் டாவது மனைவி பந்தள ராணி
வேண்டா வெறுப்பா கண்டாள் கோணி 
தன்குல வாரிசுத் தடங்கல் நினைந்தாள்
வன்ம வஞ்சனை மந்திரிக் கலந்தாள்.

வாராத் தலைவலி வந்ததோ!
வந்ததாக நடித்தாள்.வஞ்சகி.
பெறாத மகனான பிள்ளையை,
பலியிட முடித்தாள்.வஞ்சனை..
புலிப்பால் கேட்டொரு கதையை, தொடுத்தாள்.பாதகி சண்டாளி.
தாய்போல் பாசாங்கு செய்தாளே!
நோய்போல் கண்ணீர் பெய்தாளே!..

எல்லாம் அறிவான் ஐயனோ!
இறைமகன் அவனோ.மெய்யனே!
ஏதும் வினவாமல் புறப்பட்டான்.
சாதுவாக மணிகண்டன் ஏகினான்.
கானகம் புகுந்தான் அரிகர புத்திரன்.
கண்டான் அரக்கியை எதிரே வர 
தேவர்கள் துயரை அறிந்தவ னாக
தூர்த்திடத் துணிந்தான்.அரிகரனே!

மணிகண்டன் மேலே அரக்கியோ
மகிசவள் பாய்ந்தாள்.செருக்கியே
வந்ததன் காரியம் முடித்திடவே
வதம் செய்து முடித்தான்.ஐயனே.
தேவர்கள் மகிழ்ந்து கொண்டாடி
தேவ ராட்டம் கூடிக் களித்தனர்.
தேவர்கள் தாமே புலிகளாகினர்.
புலிப்பால் கரந்தும் தாமே தந்தனர்

தேவர்கள் தலைவன் தேவேந்திரன் வந்து பணிந்து உள்ளம் நிறைந்தான்.
புலிப்பால் கொண்டு தந்தது கனிந்தான்.
புலியாகத் தானே ஐயனைச் சுமந்தார்.
அரண்மனை வரையும் சவ்வாரியாக
அவருடன் சூழப் புலிகள் சேனை
புலியிடை சவ்வாரி ஐயன் தானை.
புன்னகை செய்து பூரித்தான் மணியன்.

தாயா நடித்து நோயெனத் துடித்தவள்.
வாயில் கண்டு வாயடைத்து நின்றாள்.
புலிப்பால் கண்டு சலிப்பால் வெந்தாள்.
தன்தவ றுணர்ந்து தாளடி பணிந்தாள்.
அவதாரக் காரியம் ஆக்கி முடித்திட்டான்.
வானுலகு ஏகவும் வார்த்தை வந்தது.
சபரிமலைக் காடு தவக்கோல மேடு
கோவில் கட்ட ஆணை யிட்டுமே!
ஏவினான் அம்பால் குறியிட்டான் இடமே!

குறித்த இடத்திலே  பொறித்த விதமே
வடித்த கோவிலே சபரிமலைக் காடே!
அழகான இயற்கை அற்புதக் காட்சி
ஐயப்பன் அமர்வில் அவனது மாட்சி.
நலந்தேடு வர்க்கு வலக்கரம் காட்டுவான்
வளந்தரு சாமி குலக்காவல் காப்பான்.
மலைப் பாதை நடக்க நோய்நொடி தீரும்
களைப்பதும் குறைய கஷ்டம் நீறும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Sunday, 12 October 2025

திவினேஸ்.

திவினேஸ்

ஒளி மயமான உன்னெதிர் காலம்
வழி நிசமான சரிகமப பாலம்.
பெயரின் பொருளும் அப்படிக் கூறும்.
முயன்றிட மேலும் உயரம் ஏறும்.

திவினேஸ் என்றால் கதிரொளியாகும்
கவினுன் பாட்டோ வானொலியாகும்.
சூரியன் போலே பிரகாச மாயம்
அரங்கம் ததும்பி அகிலம் பாயும்.

ஜீதமிழ் கண்ட திவினேஸ் நாதம்
ஜேதமிழ் வென்ற அமுத கானம்
அந்த மேடை அரங்கேற்ற மேடை
சொந்த மேடை சுழல்பூமி நாளை.

எத்தனை உயரம்  உயர்வாய் புகழை
அத்தனை கவனம் ஆள்வாய் வாழ்வை.
உலகம் உன்னைச் சுற்றிச் சுழலும்.
உறவும் உன்னைப் பற்றி வளரும்.

இனிப்பும் கசப்பும் கலந்த வாழ்வை
ஏற்றார்ப் போலவே சுவைத்து வாழ்க.
ஏழைக் கிழவனுன் தாதாவை சொல்லி
வாழ்வை உயர்த்து அவர்தோள் எண்ணி.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

பருவத்தூண்டல்

பருவத் தூண்டல்.

பருவ வயது உருகுது மனது
உருவம் விலகுது உள்ளம் பழகுது
அரும்பும் மோகம் தகைமை தவறுது.
விருப்பம் போதும் என்றே தேடுது.

வயது தானது வலிய முந்துது.
அறிவு தானது மெலியப் பிந்துது.
சந்திக்கத் துடிக்கும் பாலுணர் வாவது.
சிந்திக்கப் பக்கம் அறிய மறந்தது.

தன்பா லுணர்வைச் சுவைக்கத் தானது,
மறுபா லுணர்வைத் தூண்டி உசுப்புவது,
பெண்பால் ஆண்பால் அறிய இரசிப்பது,
இருபா லுணர்வை எண்ணி உருசிப்பது.

கன்னி இரசனை காதல் முயல்வது,
பின்னி உறவை ஆவல் உணர்வது.
இயல்பின் மர்மம் தெளிய முனைவது,
அயலுணர் ஆர்வம் விளங்க விழைவது.

பேச்சுக்கு முன்னே மூச்சு முந்துது. 
மூச்சுக்குப் பின்னே  வார்த்தை பிந்துது.
காற்றுத் தானது காதல் பேசுது
கதப்பில் தானோ இருமுகம் கூசுது. 

கவிஞர். கொ. பெ. பிச்சையா.


Saturday, 11 October 2025

அனுபவப் பாடம்.

அனுபவப்  பாடங்கள்.

அனுபவம் தான் பாடங்கள் --அதை
அனுப வித்துத் தேடுங்கள்.
தேடி யதைப் படியுங்கள்--அதில்
படித் ததைப் பற்றுங்கள்.
அரசைக் குறைச் சொல்லாமல்--நாமும்
புருச இலட்சனம் காப்போமே!

மது வில்லா நாடில்லை.--அங்கு
மதுக் குடியாப் பேரில்லை
அரசு அதைத் தொட வில்லை--அதில்
வரு மானமும் தேட வில்லை
குடும் பத்தில் பொறுப் பில்லை.--கெட்ட
குடி யதை மறக்க வில்லை. 

அப்பா வைப் போ லோரு
ஆளி ல்லை என்ற பிள்ளை.
அவர்ப போல மனிதரில்லை.--என
அப் படியும் புகழ்ந்த மகன்.
ஐஐந்து வயதுக் கடந்து--அவன்
மனுசனே இல்லை என்றான்.

கண் டிக்கும்  அப்ப னுக்கு
தண் டிக்கத் தகுதி யில்லை.
குடும் பத்துத் தலை வனுக்கு--ஊர்
குடி காரப் பட்டம் தந்தார்.
பிண மாகத் தினந்தினம்--மனம்
குண மாகா நோயானான்.

மனைவி மக்கள் மதிக்க வில்லை.
மனம் போல் வாழ்க்கை யில்லை.
பைத் தியக் காரன் என்றான--அப்பனை
கயிற்றாலே கட்டிப் போட்டான்.
வைத் தியம் தேடி மகன்--சவத்தை
நூற்று எட்டில் ஏற்றிப் போனான்.

தூற் றுவார் தூற்றட்டும்
போற் றுவார் போற்றட்டும்--பழி
பாவம் செய்தார் ஏற்கட்டும்.
இலாபம் என்ன அடையட்டும்
சாபங்கள் பலிக்கட்டும்--அனுபவப்
பாட மென்னப் படிக்கட்டும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.





வீரனே நீ எழுந்து வா!

வீரனேநீ எழுந்து வா!

வீரனேநீ எழுந்து வா!
வீட்டை விட்டு வெளியே வா!
போராளி நீயும் புலிபோல
புறப்படு வெளிப்படு புயல்போல.

வெட்டிப் பேச்சு வெறுங் கூச்சல்,
சுற்றுற கம்பும் அரட்டுற வீச்சில்,
வேட்டிய மடிச்சு வீரம் காட்டு
கத்திய கூட்டம் தூரம் ஓட்டு.

வழியை மறிக்கும் வெறிநாய் கூட்டம்
பழியை திணிக்கும் பாதை மாற்றும்.
பயணம் தொடரத் தடைகள் செய்யும்
பயந்து நின்றால் பரிகாசம் பண்ணும்.

நாய்கள் என்றால் அதுதான் குணம்
ஓடினால் துரத்தும் எதிர்த்தால் ஓடும்
நல்லதைத் தொடரப் பொல்லவை கெடுக்கும்
உள்ளது அதுதான்  ஓய்ந்தால் தடுக்கும்..

மிருகங்கள் இனத்தை ஒலிகள் சொல்லும்.
அறிந்தும் விலக மனிதற்கு உதவும்.
மனிதற்கு மனிதர் குரல்கள் வேறு குணத்தைப் புரிந்து அறிந்தது யாரு

குனிந்து வளைந்தால் பணிவென ஏறும்.
துணிந்து நிமிர்ந்தால் தொட்டிடப் பதறும்.
ஓடி ஒளிந்தால் தேடி அலையும்.
ஊன்றி நின்றால் வேண்டி வணங்கும்.

தொட்டதை விட்டால் தொடர்வது கடினம்.
விட்டதைத் தொட்டாலும் வேறாகும் பயணம்.
முன்வைத்த காலை பின்வைக் காதே
உன்வசம் கூட்டம் பின்வரும் நிற்காதே.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Friday, 10 October 2025

எட்டி ஓடிவா!

வெற்றி உனதே ஓடிவா!

எட்டி ஓடிவா வெற்றி உனதே--கை
தட்டிப் பாடிவா வெல்வது நீயே!
கவலைகள் உன்னை வாட்டும்.
ஆசைகள் கனவைப் பூட்டும்--நீ
அயர்ந்து விடாதே ஓடி வா!

உலகம் உன்னைத் தூற்றும்--வீண்
கலகம் பன்னத் தூண்டும்
கனவுகள் தானுன் இலட்சியம்
கதவை உடைத்து ஓடி வா--எதிர்
காலம் உனது தேடி வா!

தோல்விகள் கண்டு துவளாதே--வெற்றி
வேல்விகள் என்பதை மறவாதே!
தேடல் அங்கே காத்திருக்கும்,
தேவைக் கானது வைத்திருக்கும்--உன்
தேர்வு எதுவனௌ அறிந்திருக்கும்.

இலட்சியம் தானது கனவாகும்--அந்த
எண்ணம் தானது நினைவாகும்.
அலட்சியம் செய்து சோராதே!
அடைந்திடும் வெறியில் ஆறாதே--அது
ஆவதும் நெறியில் மாறாதே.

அச்சப் பட்டால் முடக்கிவிடும்--அது
துச்சம் என்றால் அடங்கி விடும்.
எண்ணிய முடிப்பது சாதனை.
எண்ணா திருப்பது வேதனை--எதுவும்
உன்னிடம் தானது ஆவன.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.




Thursday, 9 October 2025

பருவ வயது.

பேச்சு வரவில்லை.

பேச்சுக்கு முன்னே மூச்சு முந்துது. 
மூச்சுக்குப் பின்னே  வார்த்தை பிந்துது.
காற்றுத் தானது காதல் பேசுது.
கதப்பில் தானோ அவள்முகம் கூசுது. 

கண்ணீ ரோடு சொற்கள் கரைகிறது.
வெந்நீ ராக வேர்வை விரைகிறது.
தழுவும் சுகத்தில் தணிந்து குளிர்கிறது
முழுதும் நனைந்து தண்நீர் துளிர்கிறது.

விலகிப் போனால் வெப்பம் சுடுகிறது.
பழகித் தானே பக்கம் தொடுகிறது.
பிரிந்த ஏக்கம் பேச்சை அடைக்கிறது.
பரிந்துரை செய்ய பாசை இடர்கிறது.

பிரிந்தவர் கூடினால் பேசவும் கூடுமோ!
அறிந்தவர் தேடி யவள்மொழி தேடுமோ!
சேதிகள் பரிமாற சேடியர் நாடுமோ!
வாதம் மறந்து வாடிக்கை கூடுமோ!

கண்ணீர் துளிகள் காதல் மொழிகிறது.
எண்ணும் மொழிகள் மோதி வழிகிறது
கன்னம் கனிந்து காதல் சிவக்கிறது.
எண்ணம் நிறைந்து இன்பம் பயக்கிறது.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.




Tuesday, 7 October 2025

கரு வளர்ச்சி.

கருவளர்ச்சி.

தந்தை வயிற்றில் விந்ததுவாக 
தாயின் வயிற்றில் கருவதுவாக
தாய் சுமந்தாளது பத்து மாதம்
தந்தை சுமையது இருபது வருடம்.

தந்தை வழியே தாயிடம் விந்து 
தந்தைத் தைலம் சினை முட்டை கலந்து 
பிண்டம் கருவொரு  வாரம் மலர்ந்து 
நன்றது முதல் மாதம் துளிர்த்தது.

தாய்நோய் பட்டுத் தன்னலம் தளர்ந்தாள்
தொந்தி சரிய தன்னடை மறந்தாள்.
வாய்ருசி கசந்து மசக்கை யானாள்.
தாயாம் பெருமை நோவு கடந்தாள்.

கருவாய் செழித்து இரண்டாம் மாதம்.
உருவாகித் தலைபின் மூன்றாம் மாதம்
வயிறும் தொடர்ந்து நான்காம் மாதம் 
செயல்பலம் முதுகுத் தண்டுடல் மீதம்

ஐந்தாம் மாதம் முகம்வாய் மூக்கும்
கண்கள் செவிகள் ஐம்புலன் அறிவும்
ஆறாம் மாதம் முழுமை பெற்றும்,
ஏழாம் மாதம் இயக்கம் உற்றும்.

எட்டாம் மாதம் கட்டாய் உடலும்
ஒன்பதாம் மாதம் உந்துதல் தொடக்கம்.
பத்தாம் மாதம் பலம்பெற்றுத் துடிக்கும்
உத்தமமாகி நேர்வழித் தலைவரப் பிறக்கும்.

தந்தை வயிற்றில் இரண்டு மாதம்
தாயின் வயிற்றில் பத்து மாதம்.
வந்த உலகினிற் தந்த தாய்தந்தையர்
முந்தி வந்தனம் தகுதெய்வ சிந்தையர்..

குழந்தை பிறந்ததும் எழுந்த மகிழ்ச்சி
வளர்வில் மிகும் வாழ்வின் புகழ்ச்சி.
தாய்தந்தை செய் தவப்பயன் நெகிழ்ச்சி
சேய்க்கால இன்பம் சேய்செய் நிகழ்ச்சி.

கோவில் தெய்வம் வேறெங்கும் இல்லை
வாழ்வில் மேவும் யாரென்றும் சொல்ல,
தாய்தந்தை கடந்து மேலெங்கும் இல்லை.
தாள் அவர் மிஞ்சி வேறென்ன சொல்ல.

சுமந்த வயிறு சுமையென நினைந்தால்,
அமைந்த வாழ்வவர் துணை மறந்தால்,
அல்லலுற்று ஆற்றா அழுங் கண்ணீர்
 செல்ல லுற்றுன் செல்வம் அழிக்கும்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.