Wednesday, 26 January 2022

வாழ்க்கை என்றால்.....



 வாழ்க்கை என்றால்......


வாழ்க்கை என்றால் என்னவென்று 

வாழ்ந்து பாரடா--அதில் 

வந்த துன்பம் எதுவென்றாலும் 

வென்று செல்லடா.


எட்டிப் பார் எத்தனை பேர்  

இறைவன் போலடா--அவர்கள் 

காட்டுகின்ற வழிகள் கோடி

கண்டு தேடடா.


தேடி ஒன்று வேண்டுமென்றால்

ஓடித் தேடடா--எதுவும் 

தேடாமல் கூடும் என்றால் 

தோல்வி ஒன்றேடா.


தனக்கு என்ன முடியுமென 

தானே தேடடா--அதற்கும் 

தகுதிதானா தானேயென 

தன்னில் கூட்டடா.


படித்த தென்ன முடித்த தென்ன 

பயின்ற தென்னடா--செய்த 

பயிற்சி யென்ன முயற்சி யென்ன 

இயல்பு செய்யடா.


விழுந்தாலும் எழுவதற்கே 

அழுவ தெதற்கு--வெற்றி 

தோல்வியில்தான் தொடங்குதடா

துணிந்து வாழடா.


கொ.பெ.பி.அய்யா.





































Saturday, 22 January 2022

அடங்குகங்குடா!அடங்கு!

 அடப் போங்கடா மனுசங்களா 

அடங்க மாட்டீங்களா_ஒருநாள் 

அடங்கிப் போகும் அந்த நாள 

நினைக்க மாட்டீங்களா?


அழுது அழுது வந்த நாளும் 

அயத்துப் போச்சுதா _ கடைசியா 

அழுக அழுக விட்டுப் போகயில

துணைக்கு யாரடா? 


ஆட்டம் போட்ட காலிரண்டும் 

கட்டிக் கிடக்குதா_ஆசை 

அலைய விட்டக் கண்ணிரண்டும் 

அடைஞ்சு விட்டதா? 


தேடிவச்ச சொத்தை எல்லாம் 

பூட்டிப் போட்டயா--கூடக்

கொண்டு போக காருவண்டி 

ஓட்டிப் போவியா? 


கோவத்துல செஞ்ச பாவம்

சாபம் எத்தன--அவங்

எழுதி வச்ச விதி முடிசஞ்சி

விளங்கிச் சொன்னியா?


வீடுவரை சொந்தம் பந்தம் 

கூடி அழுகுது--ஆனா

காடு மட்டும் தீச்சட்டிதாங்

கூட வருகுது.


மறதி மட்டும் இல்லேனா 

நிலமை என்னடா--நீரில்

தலமுழுகி குளிச்ச பின்னே 

நினைக்க என்னடா?


கொ.பெ.பி.அய்.யா.









 











Wednesday, 19 January 2022

மனிதனும் விலங்கினந்தான்

 மனிதனும் விலங்கினந்தான் 


நானும் விலங்கினந்தான் 

தோணும் அப்படித்தான்.

மனங்கொண்ட ஓரறிவால்_ஆனேன்

மனிதனெனப் பேரதனால்.


கூடுதல் ஓரறிவால் 

தேடுதல் ஞானமானால் 

நானும் மனிதனாவேன் _மனிதம் 

காணுந் தெய்வமாவேன்.


அறிவொன்று கூடுதலால் 

புரிதல் கொண்டு பாடுவதால் 

நெறி சொன்னார் கவிஞரெலாம்_வாழும்

இறையென்பார் புவிஞரெலாம்.


இறை தந்த மனத்தினால் 

நிறை பெற்ற மனிதரால் 

உலகமொரு குடும்பமாம்_நிலவும் 

கலகமற அமைதியாம்.


வாழும் வரை வாழலாம் 

காலம் மட்டும் ஆளலாம்.

சுவர்கம் இங்கே ஒன்றேதான்_புவி

அவதாரம் கண்டேதான்.


என்னதான் கொண்டு வந்தோம் 

என்னதான் கொண்டு செல்வோம்.

விருந்தாளி போல வந்தோம்_இங்கு

இருந்த வரை நன்றியாவோம்.


கொ.பெ.பி.அய்யா.