Wednesday, 25 December 2013

தரை தொடா விழுதுகள்.

தரை தொடா விழுதுகள்!

பிள்ளையோ பிள்ளையென பெற்றவர் தானுமே
பேணியும் தான் வளர்த்தாலும்--வேணாமே
தொல்லையோ தொல்லையென அல்லவை  போலவே
தள்ளுமே கொல்லைப் புறம்!.

கல்லுஞ் சுமந்து கலையது தந்து
கலெக்டராய் ஆக்கியும் வைத்து--அழுக்குடன்
கந்தையில் வாடியும் சிந்தையில் தேடியும்
வந்தால் வழியடை.த்து ஓட்டும்

பட்டினி செத்து படுக்கை துறந்து
பதவியும் பட்டமும் ஈந்தும்--மதில்
கட்டிடங் காரும் பறந்து  மறந்து
கிடத்தும் மடமிடம் நன்றி.

உழைத்த உடலும் களைத்த சடலம்
கலைத்த அசிங்கம் அவலம்--காலம்
விளைத்தந்த பூமி படைத்தந்த சாமி
பழைமை  நினைந்தமேல் மூச்சு.

விழுதுகள் இறங்கித் தரையைத் தொடவும்
தொழுதிடும் நன்றியும் இல்லை--தளர்ந்து
அழுதிடும் பெற்றவர் கண்ணீர் செலவை
அளந்திட உண்டோ அளவை?

நாளை படித்திடும் பாடம் கொடுத்திடும்
ஆளை மகன் காட்டுவான்--மாலையதன்
வேளை வடிக்கும் குருதிப்புண் கண்களில்
ஊழை நினைக்கும் புத்தி.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment