சிரிக்கும் தமிழ்.!
படித்தறியும் கற்காலம்!
பயமறியா பொற்காலம்!
இப்போதும் அக்காலம்!
ஏங்குவதும் இக்காலம்.!
தமிழாசிரியர்
வகுப்பன்று!
தமிழ் பேசும் பொறுப்புண்டு!
அமிர்தமென
இனிப்பொன்று!
எமக்கு அது வரமென்று!
பழங்கஞ்சி உண்ட தெம்போ!
நலம் மிஞ்சி கொண்ட மப்போ!
வினையஞ்சா விளையாட்டோ!
எனைக் கொஞ்சம் மறந்தேனோ!
நாற்பது பேர் மத்தியிலும்
நான் பார்வை பட்டதிலும்.
கூர்மை தான் விழியிலும்.
கேட்டார் தேன் மொழியிலும்.
நலம் மிஞ்சி கொண்ட மப்போ!
வினையஞ்சா விளையாட்டோ!
எனைக் கொஞ்சம் மறந்தேனோ!
நாற்பது பேர் மத்தியிலும்
நான் பார்வை பட்டதிலும்.
கூர்மை தான் விழியிலும்.
கேட்டார் தேன் மொழியிலும்.
என்னய்யா
பிச்சைய்யா!
எங்கே உனை வச்சய்யா?
என்ன உந்தன் பாடென்றார்.
உன்னை நீ தேடென்றார்.
கொல்லெனும் சிரிப்பொலிதான்.
அள்ளியது வகுப்பறைதான்.
வெக்கத்தில் குனிந்து நின்றேன்.
பக்கத்தில் பணிந்து கண்டேன்.
நெருங்கியென் பக்கம் நின்றார்.
நுழைந்ததா பட்டதென்றார்.
பட்டன் ஒன்று நுழையவில்லை.
மற்றெதெல்லாம் சரியென்றேன்.
கொல்லெனும் சிரிப்பொலிதான்.
அள்ளியது வகுப்பறைதான்.
வெக்கத்தில் குனிந்து நின்றேன்.
பக்கத்தில் பணிந்து கண்டேன்.
நெருங்கியென் பக்கம் நின்றார்.
நுழைந்ததா பட்டதென்றார்.
பட்டன் ஒன்று நுழையவில்லை.
மற்றெதெல்லாம் சரியென்றேன்.
பொத்தானை பொருத்திக்கொண்டார்.
தன்னாள்மை திருத்திக்கொண்டார்.
அவசரத்தில் வந்தேன் என்றார்
இவனுக்குத்தான் நன்றி என்றார்.
பாட்டு ஒன்றும் பாடிக்கேட்டார்.
பாடு பொருள் என்னவென்றார்.
பெரும்பாடு என்று சொன்னேன்.
பிரம்பாலே நன்று தந்தார்.
பொருத்தம் பதில் பார்துச்சொல
விருத்தம் அதில் வாசித்தார்.
சோதிடம் தெரியாதென்றேன்.
வேதியரே அறிவாரென்ரேன்.
உள்ளமெலாம் தமிழ் மணக்க
எல்லோரும் சிரித்துவிட்டோம்.
நல்லதொரு தமிழய்யா.
சொல்ல சொல்ல இனிக்குதய்யா.
கொ.பெ,பி.அய்யா,
No comments:
Post a Comment