கடைசிக் கருணை!!
காமராசர் வாழ்த்து
(15/7/1903-----2/10/1975)
கடைசிக் கருணை-கொடை
காமராசர் புகழ் வாழ்க!
விடையாம் கர்மராம்-வீரர்
பீஸ்மராம் புகழ் வாழ்க!
சிவகாமி செல்வராம்--என்றும்
புவிவாழ் புகழ் வாழ்க!
தவத்தாய் தமிழவள்-மடி
தவழ்மகன் புகழ் வாழ்க!
சிவகாமி செல்வராம்--என்றும்
புவிவாழ் புகழ் வாழ்க!
தவத்தாய் தமிழவள்-மடி
தவழ்மகன் புகழ் வாழ்க!
ஜூலை பதினைந்து-உதித்த
நாளின் புகழ் வாழ்க!
ஏழையாம் யோக்கியம்-உலகின்
மூலமாம் புகழ் வாழ்க!
விருதுபட்டி வென்றதும்-உயர்
விருதாம் புகழ் வாழ்க!
குமாரசாமி குலவிளக்கு-சுடர்
அமரப் புகழ் வாழ்க!
தானறியாக் கல்வியின்-தான
தர்மரவர் புகழ் வாழ்க!
படிக்காத மேதையாம்-நேர்மை
படிப்பித்தார் புகழ் வாழ்க!
பசிவிரட்டி படியளந்த--உழவுப்
பசுமையாம் புகழ் வாழ்க!
தொழிலது புரட்சியும்-எழு
விழுப்பமாம் புகழ் வாழ்க!
தொழிலது புரட்சியும்-எழு
விழுப்பமாம் புகழ் வாழ்க!
நாடுதான் வீடென்று-தன்
பாடதாம் புகழ் வாழ்க!
அரசியல் துறவியாம்-தூய
அறவாழி புகழ் வாழ்க!
தூற்றினார் போற்றினார்-சமம்
ஆற்றினார் புகழ் வாழ்க!
ஏற்பாரும் தோற்பாரும்--மனம்
சேர்வார் புகழ் வாழ்க!
நாட்டுவளப் பூகோளம்-கண்டு
நட்டவர் புகழ் வாழ்க!
ஈட்டுநலம் எல்லோரும்-கொண்டு
ஏற்றும் புகழ் வாழ்க!
ஈட்டுநலம் எல்லோரும்-கொண்டு
ஏற்றும் புகழ் வாழ்க!
தேடென்று மக்களன்றி-சுயம்
நாடாராம் புகழ் வாழ்க!
ஈடிலாக் காமராசர்-சுகம்
நாடாராம் புகழ் வாழ்க!
ஈடிலாக் காமராசர்-சுகம்
நாடாராம் புகழ் வாழ்க!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment