வெள்ளக்குதிரை!((குழந்தைப்பாடல்)
வெள்ளக்குதிரை!((குழந்தைப்பாடல்)
வெள்ளக்குதிரை ஒன்று
துள்ளி வருகுது!
செல்லக் குழந்தைகளை
அள்ளி மகிழுது!
பள்ளம் மேடு பார்த்துமே
பாய்ந்து விரையுது!
கள்ளம் அது கொள்ளாமலே
கனைத்துப் பாயுது!
கொள்ளையே தின்னும் அதன்
வேகம் வளருது!
வெள்ளை மண் கிளப்பியே
தானே புரளுது!
இல்லையே சோம்பலே
நின்றே ஓயுது!
பல்லைக் நல்லாக் காட்டியே
அழகாய்ச் சிரிக்குது!
தீரன் அவன் சின்னமலை
வீரம் கொண்டது!
வீரமங்கை நாச்சியாரும்
தேடிக் கண்டது!
சூரன்வீரன் கட்டபொம்மன்
போரில் வென்றது!
துரோகி அவன் எட்டப்பனை
துரத்தி உதைத்து!
அச்சம் அதைப் போக்கவே
பழக அழைக்குது!
நச்சான நீசர்களை
விலக்கச் சொல்லுது!
தாத்தாப் பாட்டன் முன்னோரை
நினைக்கத் தூண்டுது!
காத்து அவர் துணிவையும்
புகழ வேண்டுது!
வீணான பகைமைகளை
வளர்த்திட வேண்டாம்!
தானே அது வந்தாலும்
தளர்ந்திட வேண்டாம்!
ஏனோ தானோ என்றே நீ
ஓய்ந்திட வேண்டாம்!
இருக்கும் உன் கடமைகளை
மறந்திட வேண்டாம்!
குதிரையதன் பாடங்களை
ஒதுக்கிட வேண்டாம்!
வளரும் நல்ல குழந்தைகளே
பலம் பெற வேண்டும்.
விதி என்று நோவோரை
நெருங்கிட வேண்டாம்!
இரத்தம் அது துருதுருக்க
இயங்கிட வேண்டும்!
இதுதானோ அழகான
வெள்ளைக்குதிரை!
இதிலேதான் வருவானோ
கல்கி என்பவன்.
சாட்டை கொண்டே அவனுமே
சுழற்றியே வருவான்!
வேட்டையாடி விரட்டியே
வீணரை ஒழிப்பான்!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment