சொல்லத்தான்
நினைக்கிறேன்.
சொல்லத்
துணியா காதல் தானே
வெல்லும்
விதியால் சாகும்.
ஒல்லும்
போதில் சொல்லும் காதல்
செல்லும்
காதல் ஆகும்.
வெயில்
குளியா செடிகள் தானே
துயில்
குனிந்து சாகும்.
பயில
முனையத் துணியும் காதல்
உயிர்
வாழல் ஆகும்.
பாடிப்
பழகா குரலும் தானே
பாட்டு ஒழிந்து
சாகும்.
தேடி
அணையும் தினக்காதல்
கூடிக் கூடல்
ஆகும்.
ஊமைக்
காதல் பாவம் தானே
ஒருதலை பட்டு சாகும்!
வீரமுள்ள
காதல் வென்றும்
தேரும்
நிலையும் ஆகும்!
திறந்து மூடா
வீடும் தானே
கரையான் அரித்து சாகும்!
திறந்து
வாயால் சொன்னால்தானே
திறந்த காதல் ஆகும்!
முதல்
முந்தும் தயக்கம்தானே
முளைக்கப் பயந்து சாகும்!
இதழ்
விரிக்கும் காதல்தானே
இனிக்கும்
கனியும் ஆகும்!
பருவம்
விதையா விதையுந்தானே
கருகி அதுவே சாகும்.
தருணம்
ஆய்ந்து கதைக்கும் காதல்
திருமண மங்களம் ஆகும்.
கொ.பெ.பி,அய்யா.
No comments:
Post a Comment