Friday, 20 December 2013

காதலா காமமா.

காதலா? காமமா?

காதலைக் காமம் எனக்
கருத்துப் பிழை செய்யாதீர!
உறவுகள் கலப்பதை
உள்ளங்கள இணைவதை--தூண்டும்
உணரச்சிகளின் ஈர்ப்பென
உளறாதீர் உளறாதீர்!

அழகுக்கு மயங்காது
அலையாது ஆசைகொண்டு.
உடல்தீண்டத் துடிக்காது
உயிர்தொடும் உயிரது--காதலை
உணர்ச்சிப்ப்சி காமமென்று
ஒப்பிடும் பாவம் வேண்டாம்.

மனந் தழுவிப் பேசுகின்ற
மனிதருக்குள் வாழுகின்ற
புனிதமெனப் போற்றுகின்ற
இனமறியாக் காதலை--காமம்
பாலினக் கவர்ச்சியெனப்
பைத்தியராயப் பிதற்றாதீர்!

உறவுக்குக் குளிர்ந்திடும்
பிரிவுக்குச் சுட்டிடும்
வரவும் செலவும் எனவும்
கரவிலாக் காதலை--இயல்
காமமென வரணம் பூசி
தீமையும் செய்யாதீர்!

உயிர்கள் கலந்திடும்
உணர்வுகள் மலர்ந்திடும்
இயல்புகள் புரிந்திடும்
இயற்கைக் காதலை--தெய்வ
தர்மமாய் போற்றுங்கள்.
கர்மமாய் ஏற்றுங்கள்.

உலகம் நிலைத்திட
உறவுகள் தழைத்திட
கலகம் மறந்திட
கருணை நிறைந்திட--இன
பேதங்கள் வீழ்த்துவோம்.
காதலை வாழ்த்துவோம்.


கொ,பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment