Monday, 23 December 2013

என்னை நானே.

கண்டுகொண்டேன்.

என்னை நானே தேடுகிறேன்
இறைவா நீயே கண்டுசொல்.
உண்டும் உறங்கும் உயிர்தானா?
உலவி இறக்கும் உடல்தானா?

உன்னை நானுங்கேட்டேனா
உலகிலிங்கு பிறப்பதற்கு.?
அன்னை இட்ட பேர்தானா?
அழைப்புக்கு மட்டும் அதுதானா?.

நாயுங்கூடப் பிழைக்கிறதோ!
நானுமப்படி யலைவதோ!
போய்த் தொலைந்தும் சாவேனோ!
பேய்க்குத் துணைதான் ஆவேனோ!

எனக்கு ளென்னைத் தேடுகிறேன்.
இருக்கு முன்னைக் காண்கிறேன்.
கணக்கைச் சரியாப் பார்ததுச்சொல்.
காலமும் முடிவதற்குள் தேடிச்சொல்.

சாதனை படைத்த எல்லோரும்
சரித்திரம்  நின்று வாழ்கிறார்
என்னை என்ன செய்வாயோ!!
இறைவா நீயும் ஆணையிடு..

அனபில் அண்ணல் இருக்கிறார்.
பண்பில் காமராஜ்  வாழ்கிறார்.
கருணை வள்ளல் ஒளிர்கிறார்.
காலத்தி லென்றும் ஜோதியாய்

வள்ளுவன் வாழ்கிறான் குறளிலே.
பாரதி  இருக்கிறான் பாட்டிலே
சொல்லுக எங்கே ஒளிந்துள்ளேன்
யாரென என்னைக் காட்டிவிடு.

இறைநீ போட்டாய் கணக்கொன்று
என்ன கணக்கோ தெரியவில்லை.
நானும் கேட்டேன் எனக்கென்று
நாளை வருவேன் சொல்லிவிடு.

கொ.பெ.பி.அய்யா.








.










No comments:

Post a Comment