எனக்கே!எனக்கே!!
நீ!
அழகின் அழகோ!அழகின் அகராதியோ!
ஆண்டவன்.கொடையோ!!
கவிதையோ! ஓவியமோ! சிற்பமோ!
கருத்தில் ஏன் மயக்கமோ!
கவிதையானால் அந்தக்
கம்பன்தான் எழுதியிருப்பான்.!
சீதையை வடித்த கற்பனையில்
சிதையாது தொடர்ந்திருப்பான்!..
ஓவியமென்றால் அது
இரவிவர்மாவின் மாயந்தான்.!
தமயந்தியை வரைந்த தூரிகை
காயாது தொடர்ந்திருப்பான்.!
சிலையென்றால் உன்னைச்
செதுக்கியவன் நானாகத்தான் இருப்பேன்!
உளியின் நுனி நோகாமல்
உள் இரகசியம் வெளிப்படாமல்
தொட்டு இரசிக்க யார்தான் துணிவரோ!
உனக்கு நானே நானே---நீயும்
எனக்கே ! எனக்கே !!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment