Sunday, 22 December 2013

அகரவரிசை......குழந்தைப்பாடல்.

குழந்தைப்பாடல்(அகரவரிசை)

அப்பா இங்கே வா!! வா!
ஆடை வாங்கித் தா!தா!
இன்றே நாமும் போகலாம்.
ஈரக்காற்றில் மகிழலாம்..
உல்லாசமாய் இரயிலிலே
ஊட்டிமலைக் காணலாம்.
எழிலாம் மலர்க் காட்சியாம்
ஏரிப்படகும் இரசிக்கலாம்.
!!யென ஆடலாம்
ஒன்றின் பின்னே ஒன்றாக
ஓடும் மேகஙகள் அழகாக.
ஔடதங்கள்  எல்லாமே
௮ஃதேயாகும் நலமாக.

கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment