குழந்தைப்பாடல்----அழகு மயில்.
அழகு மயில் வா !வா!
அசைஞ்சு நடந்து வா!வா!,
காவடி போல் ஆடிவா!
பாகை மாணி சூடி வா!
வண்ண வண்ண இறகினை,
எண்ண எண்ண அறிவினை.
வானம் ஒன்று விரிக்கிறாய்.
மேகம் கண்டு அழைக்கிறாய்.
மேகம் கண்டு அழைக்கிறாய்.
முன்னப் பின்ன வரிசையாய்
சின்னச் சின்ன நடையினாய்
பழகு நடனப் பள்ளியோ!
சலங்கை ஒலி இல்லையோ!
நானும் பாடி ஆடவோ!
தேனும் பாலும் கூடவோ!
தேனும் பாலும் கூடவோ!
குயிலும் மயிலும் போலவோ!
பயிலும் கலை வாழவோ!
பயிலும் கலை வாழவோ!
கொ.பெ.அய்யா.
.
No comments:
Post a Comment