Sunday, 22 December 2013

நாய் குட்டி.....குழந்தைப்பாடல்.

 நாய்க்குட்டி(குழந்தைப்பாடல்)

நாய்க்குட்டி நாய்க்குட்டி!
நானுங்கூடச் செல்லக்குட்டி.
அப்பாவுக்கு நல்லக்குட்டி.
அம்மாவுக்கு வெல்லக்கட்டி.

அம்மா சொல்லத் தட்டாதே!
அடுப்படிக்குப் போகாதே!
அங்க இங்க ஓடாதே!
அதை இதைக் கொட்டாதே!

வள வளன்னு தரையிலே 
வழுக்கி விடும் ஓடாதே!
மள மளன்னு வளரணும்
மட மடன்னு குடிக்கணும்.

விடு விடுனு அலையாதே!
வீட்டு வெளியே போகாதே!
புடு புடுனு வண்டியே
பட்டு அடி வாங்காதே!

நல்ல பாப்பாப் பேரெடு!
நாளை வீட்டைக் காத்திடு!
கொண்ட நன்மை எண்ணிடு
நன்றி அன்றுக் காட்டிடு!


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment