விமர்சனமும் விளம்பரமே!
எதுவொன்று திருத்தப்படுகிறதோ
அதுவே தீர்க்கமடைகிறது.
எதுவொன்று விமர்சிக்கப்படுகிறதோ
அதுவே விளம்பரமடைகிறது.
திருத்துவோரும் விமர்சிப்போரும்
தேவனின் தூதுவர்கள்.
வருத்துவதும் நோக்கமல்ல .
வண்ணந்தீட்டும் ஆக்கமது.
எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை
வல்லவராவாரக்கு வரமிது.
வேலையற்ற வேலையில்லை
மாலையேற்றும் விழைவிது.
சுட்டிக்குட்டி வளர்க்கப்பட்டால்
கெட்டியாகி வாழலாம்.
தட்டித்தட்டி திருத்தப்பட்டால்
வெற்றி பெற்றுயரலாம்.
செதுக்குவது சகித்திட்டால்
சிலையாகிச் சீர்படலாம்
இடிப்பாரே இல்லாதான்
கெடுவானே பாவமே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment