Wednesday, 18 December 2013

விடுதலை.

விடுதலை! விடுதலை!

தீயர்க்கும் பேயர்க்கும் விடுதலை!
திருடர்க்கும் தீவிரர்க்கும் விடுதலை!

கொலையர்க்கும் விலையர்க்கும் விடுதலை!
பிழையர்க்கும் அலையர்க்கும் விடுதலை!

காமுகர்க்கும் பாவியர்க்கும் விடுதலை!
ஏமாற்றுக்கும் ஏமாளிக்கும் விடுதலை!

ஊழலுக்கும் ஊதாரிக்கும் விடுதலை!
வேலிக்கும் போலிக்கும் விடுதலை!

ஏச்சுக்கும் பேச்சுக்கும் விடுதலை!
பொய்யுக்கும் புரட்டுக்கும் விடுதலை!

நோட்டுக்கும் ஓட்டுக்கும் விடுதலை!
கூட்டுக்கும் கொள்ளைக்கும் விடுதலை.

கேலிக்கும் கிண்டலுக்கும் விடுதலை!
காலிக்கும் கள்ளனுக்கும் விடுதலை!

மொள்ளமாரி முடிச்சவிக்கியர்க்கு விடுதலை.
தொல்லைக்கும் துயருக்கும் விடுதலை!

கொடுமைக்கும் கெடுமைக்கும் விடுதலை.
மடமைக்கும் சிறுமைக்கும் விடுதலை.

அரசியல்வாதிகள் அனுபவிக்க மட்டுமா விடுதலை?
அப்பாவிகள் அவலத்திற்கு எப்போது விடுதலை?

அதிகாரம் பெற்றவர்களுக்கு மட்டுமா விடுதலை?
அடித்தட்டு மக்களுக்கு விடிவெப்போ விடுதலை?

வணிகப்பெரும் ஆளுமைக்கு மட்டுமா விடுதலை.
பிணிவறுமை மனிதர்க்கு புலர்வதெப்போ விடுதலை?

விடுதலை!விடுதலை!அனைவர்க்கம் விடுதலை
இதுவா விடுதலை?இதுவா விடுதலை?

இது வேண்டியா எண்ணற்ற உயிர்கள் விடுதலை?
 அந்த உயிர்கள் வேண்டிய விடுதலைக்கு எப்போது விடுதலை?

எல்லைகட்கு எப்போது விடுதலை?
வெள்ளம் பாயும் நதிகளெல்லாம்
எல்லை தாண்டும் விடுதலை
கொள்ளுவதும் கொஞ்சுவதும் எப்போதோ?


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment